என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 30, 2009

இண்டர்வியூ!


ராஜ் அண்ட் கோ கம்பெனியில் காலியாக இருந்த ஒரு டைப்பிஸ்ட் பதவிக்கு பத்து பேர் இண்டர்வியூவுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அதில் பிளஸ் 2 முடித்ததும் மேலே படிக்க வசதியில்லாததால் டைப்ரைட்டிங் படித்து பாஸ் செய்த கையோடு அப்ளிகேஷன் போட்டிருந்த ஹரியும் ஒருவன்.

எம்.டி. ரூமுக்கு வெளியே ஆறாவது ஆளாக உட்கார்ந்திருந்த ஹரி இன்டர்வியூ முடித்து வெளியே வருபவர்களைக் கூர்ந்து கவனித்து வந்தான். மூன்றாவதாக வந்தவன் "மூணு கேள்வி கேட்டார், பதில் சொன்னேன். பிறகு பேப்பரை கொடுத்து ஒரு லெட்டர் டைப் செய்து தரச் சொன்னார். டைப் அடிச்சா பேப்பரில் ஒண்ணுமே தெரியலை. அந்த நிமிஷம் பார்த்துட்டு அனுப்பிட்டார்" என்றான் அழாத குறையாக.

ஐந்தாவதாக வந்தவனும் அதையே சொல்லிட்டு "ரிப்பன் இல்லாத டைப்ரைட்டரில் எப்படி சார் டைப் அடிக்க முடியும்னு கேட்டேன், வெளியே போகலாம்னு கையால காண்பிச்சார், வந்துட்டேன் " என்று டைப்ரைட்டரில் ரிப்பன் இல்லாத புது தகவலைச் சொல்லிட்டுப் போனான்.

இதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தான் ஹரி.
அவனுடைய முறை வந்து உள்ளே அழைக்கப்பட்டான், அவனையும் ஒரு கடிதம் டைப் செய்து தரச் சொன்னார் எம்.டி.

ஹரி டைப் செய்து கொடுத்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, அவனுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கச் சொன்ன எம்.டி.யை வியப்புடன் பார்த்தார் மேனேஜர்.

"இவன் மட்டும் எப்படி ரிப்பன் இல்லாத டைப்ரைட்டரில் கடிதத்தை டைப் செய்தான்னு தானே பார்க்கறீங்க? இவனுக்கும் எல்லோரையும் போலவே இரண்டு பேப்பர் மட்டுமே கொடுத்தேன். டைப்ரைட்டருக்குப் பக்கத்தில் வச்சிருந்த கார்பனை பேப்பர்களுக்கு நடுவில் வச்சு டைப் அடிச்சிருக்கான். மேலே இருக்கற பேப்பரில் ஒன்னும் தெரியாதுன்னாலும் கார்பனுக்கு கீழே இருந்த பேப்பரில் டைப் அழகா பதிஞ்சு கடிதத்தை ரெடி பண்ணிட்டான். இவனை மாதிரி சமயோசிதமா நடந்துக்கறவங்களால்தான் எந்த இடையூறுகளையும் சமாளிக்க முடியும்" என்றார் எம்.டி சிரித்துக்கொண்டே.
( குமுதம் 5.2.98 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)
உங்கள் கைகளுக்கு வேலை கொடுங்கள். நிச்சயம் வயிற்றுப் பசியை ஆற்றும்

15 comments:

  1. நல்லா இருக்கு

    சம்யோஜிதபுத்தி தேவை...

    ReplyDelete
  2. எப்படி சார் இப்படியெல்லாம் டெஸ்ட் வைக்கிறாங்க? உக்காந்து யோசிப்பாய்ங்களோ? --கே.பி.ஜனா

    ReplyDelete
  3. நல்ல கதை சார்.பாராட்டுகள்.

    ReplyDelete
  4. உங்கள பீட் பண்ண முடியுமா சாமர்த்தியத்துல பிரசன்ஸ் ஆப் மைண்ட் வேணும்கிறது இதனால்தான்

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றிங்க ஐயா!

    ReplyDelete
  6. @@ பிரியமுடன்...வசந்த்
    @@ வானம்பாடிகள்
    @@ பழமைபேசி

    வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  7. @@ K.B.JANARTHANAN

    @@ ரிஷபன்

    நான் அரசுப்பணியில் தட்டச்சராக பணி புரிந்தபோது இதுபோன்ற நிலை (ரிப்பன் மிகவும் பழசாகி டைப் அடித்தால் ஒன்றுமே தெரியவில்லை) வந்த போது ஹெட் ஆபிசுக்கு அனுப்ப வேண்டிய அவசர அறிக்கையை இது போன்று அடித்துக் கொடுத்து என் உயர் அதிகாரியிடம் சபாஷ் வாங்கினேன். அந்த அனுபவத்தில் பிரசவித்த கதை. வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  8. ரேகா, சூப்பர் கதை .
    புதுவை சந்திரஹரி .

    ReplyDelete
  9. @@ puduvai

    வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிங்க சார்.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  10. சூப்பர் ஐடியாங்க...
    சில விஷயங்களை படிச்சவுடனே..இது நமக்கு ஏன் தோணலைன்னு தோணும்.அதுல இதுவும் ஒன்னு.

    இருங்க..குமுதத்த எடுத்து ஒரு தடவை படிச்சுடறேன்.

    ReplyDelete
  11. 11 வருஷத்துக்கு முன்னாடி குமுதம் என்கிட்ட இல்லைங்க :))

    ReplyDelete
  12. @@ பின்னோக்கி

    வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  13. AYYA, IDHAITHAN,"KATHII THEETATHEY, BUDHII THEETTIVIDU ENRU ANRU PADINARGALO"

    MATRI YOSIKKA THERINTHA REKHA AVARGALE, THANGAL KALANJIATHIL ULLAVATTRAI SEEKIRAMAGA KOTTA THODANGUNGAL!!

    MANDAVELI NATARAJAN.

    ReplyDelete
  14. கதை நன்றாக இருந்தது. சமயோஜிதத்தால் சபாஷ் வாங்கியதற்கு பாராட்டுக்கள்.
    வலைச்சரத்தில் அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வித்யாசமாக செயல் படுபவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று உணர்த்தியமைக்கு நன்றி..என் வலை தளமும் வாருங்கள்http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "