என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, October 25, 2009

செல் போன் நடிகர்கள்

விகடன் வாங்கப் போனவன் உடனே வீடு திரும்பியிருக்கக்கூடாதா? அடுத்திருந்த டீக்கடை பெஞ்ச்சின் மேலிருந்த அன்றைய பேப்பர் ' வா! வா! வந்து என்னை எடுத்துப்படி! ' என்று என்னை அழைக்கவே அங்கே சென்று பேப்பரை எடுத்து படிக்க உட்கார்ந்ததுதான் தாமதம், " நான் அவசரமா போய்க்கிட்டு இருக்கேன் உங்கிட்ட பேசிகிட்டிருக்க இப்போ எனக்கு நேரமில்லை, நீ சாயங்காலமா கூப்பிடு"--ன்னு செல்போனில் பேசிகிட்டே வந்த ஒருவர் என் பக்கத்தில் அமர்ந்ததோடில்லாமல் என்னமோ அவசரமா டெல்லிக்கு போகிறவரைப் போல நான் படித்துக்கொண்டிருந்த பேப்பரை பிடுங்கிக்கொண்டு டீக்கடைக்காரரிடம் ' யப்பா அவசரமா ஒரு டீ போடு! ' --ன்னு சொல்லிவிட்டு அது வந்ததும் சாவகாசமாக குடித்துக்கொண்டே பேப்பரை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படித்துக் கொண்டிருந்தார். பார்த்துக்கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை. பாதியில் நின்ற டீக்கடை பெஞ்சை முழுமையாக படித்துவிடுவோமே என்ற ஆவலில் அவரிடம் "ஏங்க என்னமோ அவசரமா போய்க்கிட்டிருக்கிறதா யாரிடமோ செல் போனில் சொல்லிக்கிட்டிருந்தீங்களே, போகலியா?" என்று கேட்க, " அத்த ஏன் சார் கேட்கறீங்க? ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுக்கிறேன்னு போன வருஷம் பிசாத்து காசு ஆயிரம் ரூபா ஒருத்தன்கிட்டே கைமாத்தா வாங்கிட்டேன். அந்த பன்னாடை பணத்தை கொடுன்னு இதுவரைக்கும் ஆயிரம் தடவையாவது போன் பண்ணியிருப்பான். நீங்களே சொல்லுங்க! கைல இருந்தா கொடுக்க மாட்டேனா? அவன் கிடக்கறான் விட்டுத் தள்ளுங்க, சார் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா? " என்று அவன் கேட்க, அவனிடமிருந்து அந்த பேப்பரை எப்படியாவது வாங்கிடணும்னு " ஒ! நானா? சி.பி.சி.ஐ.டி. தென் மாவட்டத்தில் சீட்டு பணத்தை சுருட்டிக்கிட்டு ஓடின ஒருத்தனை வலை வீசி தேடிக்கிட்டிருக்கோம்" என்று ஒரு பிட்டை போட அடுத்த வினாடி பேப்பரை என் கையில் பவ்யமாக வைத்து விட்டு ஆள் எஸ்கேப்.

ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுக்கிறேன்னு போன வருஷம் பிசாத்து காசு ஆயிரம் ரூபாய் வாங்கினானாம் , அதை திருப்பிக் கேட்டா கடன் கொடுத்தவனுக்கு பன்னாடை பட்டம் வேற. எப்படி இருக்குது பாருங்க நியாயம்?


காலம் கெட்டுக் கிடக்கு. நாமதான் உஷாரா இருக்கணும்னு யோசிச்சுக்கிட்டே வீட்டை நோக்கி நடையைப் போட்டால் எதிரே வந்த ஆசாமி "யோவ் சும்மா சும்மா எனக்குபோன் பண்ணி ரங்கனாதனா?"--ன்னு கேட்கிறியே, என்னை யாருன்னு நினைச்சே? நான் தட்னா நீ தாராந்து பூடுவே! ஒழுங்கு மரியாதையா இப்ப நீ போனை வைக்கலே எனக்கு தெரிஞ்ச டி.எஸ்.பி.கிட்ட சொல்லி உன்னை உள்ளே தள்றேனா இல்லையான்னு பார் " என்று காற்றில் கையைக் காலை ஆட்டி நடித்துக்கொண்டே சவால் விட்ட தயிர்வடை தேசிகனைவிட ஒல்லியாக இருந்த அவரைப் பார்த்ததும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. இவர் தட்னா அவர் தாராந்து பூடுவாராம்.


காற்றில் கையைக் காலை ஆட்டி என்னமா நடிக்கிறாங்க இந்த செல் போன் நடிகர்கள்!


பேச்சாற்றலை விட செயலாற்றல் சிறந்தது

16 comments:

  1. ஹி ஹி. ப்ளூடூத் வெச்சிகிட்டு பைத்தியம் மாதிரி தானே பேசிண்டு போறவங்கள பார்த்திருக்கீங்களா?=))

    ReplyDelete
  2. ‘செல்’வாக்கு உள்ளவர்கள்னு சொல்றது இவங்களைத்தானோ?

    ReplyDelete
  3. அட, செல்லை ஆன் செய்யாமலேயே 'பேசி' பார்க்கிற நம்மளை முட்டாளடிக்கிறதை விட்டிட்டீங்களே! --கே.பி.ஜனா

    ReplyDelete
  4. யாருமே கான்ஸ்டபிள் லெவலில் இல்லை...

    டி.எஸ்.பி இல்லைனா சி.பி.சி.ஐ.டி தான்

    ReplyDelete
  5. நல்லாத்தான் நடிக்கிறாங்க. இங்கேயும் அப்படித்தான். கைப்பேசி கையில இருக்காது. ஒரு ஒயரும் இருக்காது. ஆனா தனியா யாரையாவது மிரட்டியபடி போய்க்கிட்டு இருப்பாங்க. பைத்தியமோன்னு பயந்தபடி பார்த்தா Bluetooth- காதுல சொருகி இருக்கும். பதிவு நல்லா இருந்தது. --

    என்றென்றும் அன்புடன்

    வெங்கட், புது தில்லி

    ReplyDelete
  6. நல்ல பதிவு ஸார்.

    நேற்றுகூட ஒரு புரோக்கர் போனில் யாரிடமோ..”இன்னா சார். ஒனக்கு இம்மாம் பெரீய ப்ரச்சன கீதுன்னு நம்மாண்ட சொல்லவே இல்லியே. கவுலிய வுடு சார். நான்லாம் பின்ன இன்னாத்துக்கு கீறேன்? அத்த தூக்கி கடாசிட்டு நான் வேற புட்ச்சி தர்ரன். நீ ஒன்னியும் ஒர்ரி பண்ணிக்காத ஸார்.” என்று 10 பேருக்குக் கேட்கும்படி யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். என்ன பிரச்சினையோ!

    ReplyDelete
  7. செல்லை வச்சுக்கிட்டு இஷ்டத்துக்கு கதை உடரத பார்த்தா இதய பலவீன ஆசாமிகள் தாங்க மாட்டாங்க.. "செல்லம் கொடுத்து வளர்த்த மகளுக்கு செல்லையும் கொடுத்தால் இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால்" என்று ஆங்கரை பைரவியின் கவிதை நினைவிற்கு வருகிறது

    ReplyDelete
  8. உங்களிடமிருந்து இப்படி ஒரு நகைச்சுவை கட்டுரை கிடைக்குமென்று நினைத்ததேயில்லை. மிக நன்று.

    ReplyDelete
  9. @@வானம்பாடிகள்
    ப்ளூடூத் பத்தியும் எழுதினேன். பதிவின் நீளம் கருதி தூக்கிவிட்டேன். வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.

    @@ரவிபிரகாஷ்
    //‘செல்’வாக்கு உள்ளவர்கள்னு சொல்றது இவங்களைத்தானோ?//

    நன்றாக இருக்கு உங்கள் வார்த்தை விளையாட்டு. வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி

    @@பிரியமுடன்...வசந்த்
    நன்றி.
    @@K.B.ஜனார்த்தனன்
    மறந்துட்டேன் சார். வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.
    @@பழமைபேசி
    நன்றி.
    @@கதிர் - ஈரோடு
    //யாருமே கான்ஸ்டபிள் லெவலில் இல்லை...டி.எஸ்.பி இல்லைனா சி.பி.சி.ஐ.டி தான்//
    ஆமாங்க. இப்பெல்லாம் யார் எந்த ஆளை கைக்குள் வச்சிருக்காங்கன்னே தெரியல்லீங்களே!
    வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.

    @@வி. நா. வெங்கடராமன்.
    நன்றி வெங்கட்.

    @@ சித்ரன்
    //”இன்னா சார். ஒனக்கு இம்மாம் பெரீய ப்ரச்சன கீதுன்னு நம்மாண்ட சொல்லவே இல்லியே. கவுலிய வுடு சார். நான்லாம் பின்ன இன்னாத்துக்கு கீறேன்? அத்த தூக்கி கடாசிட்டு நான் வேற புட்ச்சி தர்ரன். நீ ஒன்னியும் ஒர்ரி பண்ணிக்காத ஸார்.” //

    வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் நன்றி.

    @@ரிஷபன்
    நன்றி சார்.

    @@SRK
    //உங்களிடமிருந்து இப்படி ஒரு நகைச்சுவை கட்டுரை கிடைக்குமென்று நினைத்ததேயில்லை. மிக நன்று.//

    எல்லாம் உங்ககிட்டே இருந்து கத்துக்கிட்டதுதான். நன்றி சார்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  10. Hi!, Hi!, Hi!"Koduthathai Ketta Aduthathu Paghai," Theriyuma Sar, Ungalukku?

    Nanru, Vazhthukkal,Valarga.

    Anbudan,
    Mandaveli Natarajan.

    ReplyDelete
  11. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_06.html

    ReplyDelete
  12. இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன் கலகல பதிவு.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "