ரசித்த கவிதை-- 1
யதார்த்தம்
நெருப்பாய்த் தகித்த வெயிலிலும்
உடலை நடுங்க வைத்த கடு மழையினிலும்
உழன்ற போதவனுக்குக் குடை தராத உறவு
அவன் பிணத்திற்குக் குடை பிடித்துச் செல்கிறது
வாழ்ந்தபோது கிழிந்த கந்தலை உடுத்தியிருந்த அவன்
இறந்த பின்பு புது வேட்டி போர்த்தி ஊர்வலம்
போகின்றான்;
இருக்கும்போது கிடைக்காதவை
இறந்தபின்புதான் கிடைக்கும் எனில்
ஒ நிஜங்களே! நீங்கள் விரைவில் நிழலாகிவிடுங்கள்!
(இது நான் 1972--ம் வருடம் தணிக்கைக் குழுவில் பணியாற்றியபோது
வாங்கிய தினமணி கதிர் புத்தகத்தில் வெளியான கவிதை.
ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன். யார்
எழுதியது என்பதை குறித்து வைக்கவில்லை-- ரசித்த கவிதை தொடரும்.)
அருமையான கவிதை
ReplyDeleteநான் பிறந்ததற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிவந்திருக்கிறது.
இன்றைக்கும் பொருந்தும் ஒன்று
உங்கள் ரசனை எங்களுக்கு கவிதை விருந்து அளித்தது தொடரட்டும் நீங்கள் ரசித்தவை
ReplyDeleteகுடையும் வேட்டியும் மட்டுமல்ல; பாராட்டும் புகழும்கூட செத்த பின்புதான் கிடைக்கும் காலம் இது. நான் சொல்வது நல்லவர்களுக்கு! கவிதை அருமை!
ReplyDeleteஇது இவ்வளவு வருடம் சென்றும் மாறவில்லையே ராகவன். நல்ல பகிர்வு. நன்றி.
ReplyDeleteஉள்ளொன்று புறமொன்று....
ReplyDeleteநல்ல பகிர்வு சார்....
good dear reka - puduvai chandrahari.
ReplyDeletegood reka - puduvai chandrahari
ReplyDelete