என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 9, 2009

சாம்பார் பொடி செய்வது எப்படி?

முன்பு ரசப்பொடி செய்வது பற்றிய பதிவில் அதை யாரிடமிருந்து கேட்டறிந்து போட்டேனோ அவரே சாம்பார் பொடி செய்வது எப்படி என்றும் சொன்னார். அப்போதே போட்டிருந்தால் பதிவு மிகவும் நீளமாக இருக்குமே என்று ரசப் பொடி எப்படி செய்வது என்று மட்டும் பதிவிட்டிருந்தேன். இப்போ சாம்பார் பொடி எப்படி தயாரிப்பது என்று அறிந்து கொள்வோமா?


சாம்பார் பொடி:

தேவையான பொருள்கள் :

துவரம் பருப்பு : 1/2 கிலோ

கடலைபருப்பு : 1/2 கிலோ

பெருங்காயம் : 50 கிராம்

மிளகாய் வத்தல் : 250 கிராம்

தனியா : 3/4 கிலோ

வெந்தயம் : 25 கிராம்

செய்முறை:


வாணலியை அடுப்பில் வைத்து முதலில் வெந்தயத்தை போட்டு பொன் நிறமாக வறுக்க வேண்டும். பிறகு கடலைப்பருப்பை அதில் போட்டு பொன் நிறமாக வருகிறவரை வறுக்க வேண்டும். தொடர்ந்து துவரம் பருப்பு , மிளகாய் , தனியா போட்டு வறுக்கவும் (இந்த வரிசையை மாற்றக்கூடாது ).


ஒரு 50 கிராம் கெட்டி பெருங்காயத்தை கொஞ்சம் எண்ணையில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


இப்படி பொரித்து எடுத்த பெருங்காயத்தை வாணலியில் இருக்கிற வறுத்த அயிட்டங்களோடு சேர்த்து ஒரு புரட்டு புரட்டிவிட்டு இறக்கி விடுங்கள்.


இந்த கலவையை மிக்ஸ்சியில் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை சாம்பார் வைக்கும் போது போட்டு செய்து பாருங்கள். கம கமன்னு மணக்கற சாம்பாரை இன்னும் ஒரு கரண்டி ஊற்றிக்கொள்ள தோணும்.

EVERY DAY IS A GIFT THATS WHY THEY CALL IT THE PRESENT

4 comments:

  1. ரொம்ப சூப்பர்,

    ReplyDelete
  2. @@ Jaleela


    நன்றிங்க மேடம். இங்கேயும் போய் படிங்க:http://anbesivam2009.blogspot.com/

    ரேகா ராகவன்

    ReplyDelete
  3. perungayam saapta pallu kottidum nu solrale, ipdi addpanikita edhum agadha?? :(

    ReplyDelete
  4. @@janani
    //perungayam saapta pallu kottidum nu solrale, ipdi addpanikita edhum agadha?//

    பெருங்காயம் கூட்டுப் பொருள்களால் தாரிக்கப்படுகிறது. இது அதிகம் சேர்த்தால் பற்கள்
    கொட்டாது. வயிற்றில் கேஸ் உண்டாவதைப்போக்கும். நன்றி மேடம் இப்படி ஒரு கேள்வி கேட்டதுக்கு. நாங்களெல்லாம் வாழைப்பழத்தில் பெருங்காயத்தை வைத்து சாப்பிடுவோம் வாய்வுத்தொல்லையை நீக்க. இப்போ திருப்திதானே?

    ரேகா ராகவன்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "