என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 14, 2009

மனிதன்


ரசித்த கவிதை-- 3

எவ்வளவு முயன்றும் என்னுருவை என்னால் மாற்றிக்கொள்ள
முடியவில்லை;
என் வாயும், கண்ணும்,மூக்கும், அப்படியேதான்
இருக்கின்றன.
இந்த உடலைத் தாங்கிக்கொண்டுதான் இரவும் பகலும்
அலைகிறேன்
சுவர்களில் என் நிழல் நகரும்போது பலரின் கண்கள்
புண்படுத்தப்படுகின்றன;
நான் யாருக்குச் சொந்தமானவன்?
என் தகப்பனும் பாட்டனும் என்னை நிராகரித்துவிட்டார்கள்
எந்த ஜீவராசியும் என்னைத் தங்கள் இனம் என்று
அங்கீகரிக்க இசையவில்லை; ஆனால்....
என்னை நானே துன்புறுத்திக் கதறும் போது மட்டும்,
காலம் என்னில் அழிக்க முடியாத தழும்பை விட்டுச்
செல்லும்போது மட்டும்;
அவர்கள் சொல்லுகிறார்கள்;
பரவாயில்லை, நன்றாய் இருக்கிறது
நான் சொல்லிக் கொள்கிறேன் நானும் மனிதனே!

"மனிதன் உலகத்தோடு தனக்குள்ள உறவை உணராவிட்டால் அவன் வாழும் இடம் சிறைக்கூடமாகும்."

(1972--ம் வருடம் வாங்கிய கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை.
ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை தொடரும்.)





9 comments:

  1. பகிர்தலுக்கு நன்றி

    ReplyDelete
  2. வருடங்கள் பல கடந்தாலும்
    இந்த கவிதை வரிகளை படிக்க
    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

    பகிர்தலுக்கு நன்றி!!

    ReplyDelete
  3. பகிர்தலுக்கு நன்றிங்க.


    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. நல்ல கவிதை,நன்றிங்க.

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு ரேகா

    ReplyDelete
  6. கவித்துவமான பார்வை

    ReplyDelete
  7. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது வந்தாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "