என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Tuesday, October 27, 2009

மன ஓட்டம்

ந்த பஸ் ஸ்டாண்டின் நடைமேடை மேல்
உன்னையும் உன் ஆறு மாத குழந்தையையும்
பார்த்த மாத்திரத்தில் யாரிவள் என்று உன்னை
எடைமேடை மேல் நிற்கவைத்து பார்க்கத்
தோன்றியதேன் எனக்கு?

டுப்பில் இருந்த கைக்குழந்தையிடம்
எதையோ சொல்லி நீ விசும்புவதும்
அந்த பிஞ்சு தன் கையால் உன் நெஞ்சை தடவி
உன்னையே கலக்கத்துடன் பார்க்கக் கண்டு
என் மனது சுக்குநூறாகிப் போனதேன்?

ன்னையும் உன் கைக்குழந்தையையும்
தவிக்க விட்டு ஓடிப்போனானா உன் புருஷன்?
இல்லை, வேலைக்குப் போன அவன் நீண்ட
நேரமாகியும் வரவில்லையே என்று
குழந்தையிடம் சொல்லி அழுதாயோ?

டுத்த வேளை உனக்கு கொடுக்க வேண்டிய
பாலுக்கான காசுக்கு நான் எங்கே போவேன்?
பிச்சை கேட்டால் இச்சையை தீர்க்க வர்றியா என்று
அச்சுறுத்தும் காமாந்தகாரர்களை
எப்படி நான் எதிர்கொள்ளப் போகிறேன் என்ற
கேள்வியை அதனிடம் முன் வைத்து நீ அழுதாயோ?

வள் புருஷன் இறந்ததால் தனித்து விடப்பட்டவளோ?
இவளுக்கு அப்பா அம்மா இல்லையோ?
இல்லை, எதிர்த்து காதல் மணம் புரிந்ததினால்
அவர்களிடம் போக தன்மானம் தடுக்கிறதோ?

யிரம் கேள்விகள் மனசுக்குள் ஓட
அப்போதைக்கு பையில் இருந்த ஐம்பது ரூபாயை
இந்தாம்மா, எடுத்துக்கோ என்று ஜன்னல்வழி போட
பாய்ந்து அவள் பற்றிய காட்சி வறுமைக்கு ஒரு சாட்சி.

செல்வம் செழிப்பு வறுமை கேலி சண்டை சச்சரவு
காதல் மோதல் பிரிவு சேர்க்கை பிறப்பு இறப்பு என
தினம் தினம் எத்தனை எத்தனை காட்சிகள்?
அத்தனையும் பார்த்தபடி நான் இன்னமும்
ஓடிக்கொண்டிருக்கிறேன்
...சொல்லாமல் சொன்னது பஸ்.

---ரேகா ராகவன்---

15 comments:

 1. அந்த வலியை அப்படியே பதிய வைத்த கவிதை

  ReplyDelete
 2. எக்ஸலென்ட்! சமீபத்தில் நான் படித்த பதிவுகளிலேயே மிக அருமையான பதிவு. கதையா, கவிதையா என மயக்கம் தந்தாலும், மையப் பொருள் மனசை ஈர்க்கிறது. அதிலும், ஓடிக்கொண்டிருக்கிறது வார்த்தையை ஓட வைத்தீர்கள் பாருங்கள்! அடேங்கப்பா!

  ReplyDelete
 3. நல்லா இருக்கு! பஸ்ஸைப் போலவே நாமும் வேறொன்றும் செய்வதறியாது ஓடிக்கிட்டிருக்கோம். பளீர்னு மனசைத் தெச்ச கதை!

  ReplyDelete
 4. மனதைத் தொடுகிறது

  ReplyDelete
 5. @@ கதிர் - ஈரோடு

  நன்றி கதிர் வருகைக்கும் கருத்துக்கும்.

  @@ ரவிபிரகாஷ்
  //கதையா, கவிதையா என மயக்கம் தந்தாலும்//

  சார் இது என் முதல் கவிதை முயற்சி. நண்பர் கே.பி. ஜனார்த்தனன் அவர்கள்
  நீண்ட காலமாக என்னை கவிதை எழுதச் சொல்லி தூண்டிகிட்டே இருப்பார். இன்று தான் அதை முயற்சித்து பார்த்திருக்கிறேன்.பாராட்டுக்கு நன்றி.

  @@கிருபனந்தினி
  //பளீர்னு மனசைத் தெச்ச கதை//

  நன்றிங்க. ஆனா இது கதை மாதிரியா தெரியுது?

  @@ N.கணேஷன்
  உடனே பின்னூட்டம் போட்டு நீங்களும் என் மனதை தொட்டுவிட்டீர்கள்.

  ரேகா ராகவன்

  ReplyDelete
 6. அருமைங்க ராகவன்.பாராட்டுகள்.

  ReplyDelete
 7. அருமையான பதிவு! நல்ல முயற்சி.

  ReplyDelete
 8. கவிதை உலகிலும் தடம் பதித்ததில் மகிழ்ச்சி. மனதை தொட்டுவிட்டது உங்களது கவிதை. நல்ல பதிவு.

  என்றென்றும் அன்புடன்

  வெங்கட், புது தில்லி

  ReplyDelete
 9. @@ வானம்பாடிகள்
  @@ பிரியமுடன்...வசந்த்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  @@ Karthick
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்திக்.

  @@ வி.நா.வெங்கடராமன்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

  ரேகா ராகவன்

  ReplyDelete
 10. முதல் முயற்சி என்று நம்பவே முடியவில்லை. அற்புதம் தேர்ந்த கவித்துவம் தெரிகிறது. மனப் பூர்வமான பாராட்டுகள் உங்கள் கவிதை முயற்சிகள் தொடரட்டும்

  ReplyDelete
 11. @@ ரிஷபன்

  எல்லாம் உங்களைப்போன்ற நண்பர்களைப் பார்த்து எழுந்த உத்வேகம்தான் என்னை கவிதை எழுத தூண்டியது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 12. அனுபவம் பேசுகிறது...நன்றிங்க ஐயா!

  ReplyDelete
 13. @@ பழமைபேசி

  வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 14. வலி....http://swthiumkavithaium.blogspot.com/

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "