என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்

Monday, October 26, 2009

மரணம்

ரு அந்தி வேளையில் நான் இந்த இடத்தை விட்டுப்
போய்விடுவேன்;
எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியாது;
விதைப்புக்காலமா அறுவடை காலமா என்பதும் தெரியாது;
மண் போல் மௌனம் என்னை அழுத்தும்
அந்த அந்தி வேளையில் வழக்கம் போல் நீ வருவாய் என்று
எனக்குத் தெரியும்
அப்போது உனக்குப் புரியும்; நான் நகரமுடியாதபடி முடமாக
இல்லை;
முதல் மெழுகுவர்த்தி போல் ஏதோ ஒன்று அந்த இடத்தில் இருக்கும்
யாரையும் நீ எதுவும் கேட்க மாட்டாய்--
மௌனமாக நிற்பாய்; புதிய ஆகாய வெளிகளை அறிய
வார்த்தைகள் தேவை!
பழம் நினைவுகள் செவிடாகி உன்னிடம் கிடக்கின்றன. ஆனால்
அவை புயலுக்குச் சமம்;
யூதர்களின் தேவவசனம் பொறித்த எந்தக் கல்லையும் நான்
நேசிக்கிறேன்.
சேரி மயானத்தில்
இலையுதிர்காலம் சோகம் பரப்பி நிற்கிறது
ரணத்திலிருந்து தப்பி இனிமேலும் என்னால் மறைந்து
கொண்டிருக்கமுடியாது!

(1972--ம் வருட கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை. ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை தொடரும்.)



உழைக்காமல் கிடைக்கும் பரிசு மரணம்

11 comments:

ரிஷபன் said...

மரணத்திலிருந்து தப்பி இனிமேலும் என்னால் மறைந்து
கொண்டிருக்கமுடியாது!
உங்கள் சேகரிப்பு கவிதைகள் நெஞ்சை தொடும் விதத்தில் தான் இருக்கின்றன எப்போதும்

K.B.JANARTHANAN said...

படிக்கும் போதே மனதை ரணமாக்குகிறது 'மரணம்' கவிதை. உங்கள் ரசனை அருமை. - கே.பி.ஜனா

வானம்பாடிகள் said...

அருமையான சேகரிப்புகள். பகிர்ந்தமைக்கு நன்றி.

velji said...

அருமையான பகிர்வு.நன்றி.

கதிர் - ஈரோடு said...

பொக்கிஷம்

KALYANARAMAN RAGHAVAN said...

@@ ரிஷபன்
@@ K.B.JANARTHANAN
@@ வானம்பாடிகள்
@@ velji
@@ கதிர் - ஈரோடு

நன்றிங்க சார் வந்ததுக்கும் பாராட்டுக்கும்.

ரேகா ராகவன்
.

puduvai said...

story & poem excellent reka. - chandra hari

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

Please accept this gift from me with deep appreciation for your blog.

-vidhya

KALYANARAMAN RAGHAVAN said...

@@ Vidhoosh

அவார்ட் எல்லாம் கொடுத்து இந்த சிறுவனை பெருமைப் படித்தியதற்கு நன்றிங்க மேடம்.

ரேகா ராகவன்

Jaleela said...

ரேகா உங்கள் சேமிப்பு கவிதைகள் பிரமாதம்

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

மரணம் என்று சொன்னாலே மூச்சு முட்டத்
தான் செய்கிறது!

Post a Comment

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "