என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Monday, November 2, 2009

புகை


அடுப்பை ஊதி விட்டாள் மேகலை. புகை இன்னும் அதிகமானதே தவிர விறகு எரிவேனா
என்று அடம் பிடித்தது. விறகில் பொதிந்திருந்த ஈரம் புகையை மேலும் மேலும் அடர்த்தியாக்கியது.

"ஐந்து ரூபா அதிகமா செலவழிக்க முடிஞ்சிருஞ்சா நல்ல விறகா வாங்கியாந்திருக்கலாம், நல்லா எரிஞ்சிருக்கும்" -- தன் நிலையை நொந்து கொண்டே விறகை சரி செய்தாள்.

ரோடு போடற கூலி வேலைக்குப் போய், கமிஷனை எடுத்துக் கொண்டு மேஸ்திரி தரும் ரூபாயில் அரிசி பருப்புன்னு சகலமும் அவள் வாங்கியாக வேண்டும்.

அவள் புருஷன் மாரியோ ஒரு நாள் வேலைக்குப் போனால் பத்து நாள் போகமாட்டான்.

களைத்து வீடு திரும்பும் மேகலையை வழியிலேயே மடக்கி கூலிப் பணத்தில் பாதியை
பிடுங்கிக் கொண்டு போய் குடித்து விட்டு வருவான். வீட்டிலேயே முடங்கிக் கிடப்பான்.


அடுப்பு இன்னும் அதிகமாக புகையை கக்க, ஊதி ஊதி அவளின் கண்கள் இரண்டும் சிவந்து
மூச்சு முட்ட ஆரம்பித்தது.

இன்னமும் மிச்சம் மீதியிருந்த போதையுடன் குடிசையினுள் படுத்திருந்த மாரி கண்களை கசக்கிக் கொண்டே எரிச்சலுடன் எழுந்தான். நேராக அவளிடம் போய் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டான்.

"சனியனே! என்னடி சமையல் பண்றே? அடுப்பை சரியா எரிய வைக்க துப்பில்லை, வீடு பூரா ஒரே புகை, தூ...!"

அதிர்ச்சியில் உறைந்து போய் மேகலை உட்கார்ந்திருக்க... பாவீ நான் உழைச்ச காசையும் நீ பிடுங்கிக்கிறதால தானே இந்த ஈர விறகைக் கட்டிட்டு மாயறேன். நீயே என்னை அடிக்கிறியே! மனசில் வைதாள்.

குடிசைக்கு வெளியே போய் உட்கார்ந்தான் மாரி. பீடி ஒன்றை பற்ற வைத்து புகையை குப்பென்று இழுத்து சாவகாசமாய் வெளியே விட்டான்.

திண்ணையில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த அவனின் மகள் மாலா பீடி புகையின் நெடி தாளாமல் இரும்ப ஆரம்பித்தாள்.

" சனியன் பிடிச்ச பீடி புகை நாத்தம். சுவாசிக்கவும் முடியலே, படிக்கவும் முடியலே " -- சொல்லிவிட்டு எழுந்து குடிசைக்குள் போனாள்.

பளாரென்று அறைந்தது மாதிரி இருந்தது மாரிக்கு.

(சர்வேசன் 500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை)

பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

22 comments:

 1. சரியான நச்! ;புகை; வெற்றி நெருப்பாக வாழ்த்துகள் ரேகா ராகவன்!

  ReplyDelete
 2. உண்மையிலேயே 'நச்' கதைதான்

  ReplyDelete
 3. வெற்றி பெற வாழ்த்துகள்.நல்ல கதை.

  ReplyDelete
 4. விறகில் இருந்த ஈரம் மாரியின் இதயத்தில் இல்லையே! இறுதியில் மகளின் வார்த்தைகள் அவன் மனசை அறைந்த பின்னராவது அவன் கண்களில் ஈரம் துளிர்த்திருக்குமா? நல்ல கதை!

  ReplyDelete
 5. @@ ஷைலஜா
  வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க மேடம்.


  @@ கதிர் - ஈரோடு

  @@ வானம்பாடிகள்  வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
  ரேகா ராகவன்.

  ReplyDelete
 6. @@ ரவிபிரகாஷ்
  மூட்டையுடனான போருக்கு இடையே வந்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க சார்.
  ரேகா ராகவன்.

  ReplyDelete
 7. SO"MARRIE" PONRAVARGAL ADUTHAVAR UDHIRATHAI KUDITHU VALARUM ATTAIKKU NIGARANAVARGAL. ADHAI NAAN, NAM NATTIL ENGUM PARAVALAGA KANGIREN.IPPADIPATTAVARGALAI VELICHAM POTTU KATTIYAMAIKKU NANRI.

  Mandaveli Natarajan.

  ReplyDelete
 8. @@V.K.நடராஜன்
  வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.

  @@ SRK
  நன்றிங்க சார்.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 9. நச்சுனு இருக்கு!

  ReplyDelete
 10. வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 11. புகையில் கண் சிவந்த அவள்.. போதையில் கண் சிவந்த அவன்.. புகைக்குள் போதி நெருப்பு உங்கள் கதையில் வாழ்த்துகள்

  ReplyDelete
 12. புகை மயமான எதிர்காலம் மனைவிக்கு மட்டுமா? மாரிக்கும் தான். நச்சென்று உணர்த்தும் மகள்! --கே.பி.ஜனா

  ReplyDelete
 13. மகளின் வார்த்தைகள், மாரியின் புகை படிந்த மனதை மாற்றும் என்பதில் சந்தேகமென்ன. நல்ல "நச்" கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  என்றென்றும் அன்புடன்

  வெங்கட், புது தில்லி

  ReplyDelete
 14. ’நச்’ன்னு சொல்றத விட முடிவு சுளீர்னு சாட்டையடி மாதிரி இருந்தது..மாரி திருந்தவான்னு நம்புவோம்..

  ஓ.சாரி..இது கதைல..கொஞ்சம் ஒன்றி போய்ட்டதால கதைன்றதே மறந்திட்டேன் :)

  நல்லா இருக்கு

  வெற்றி பெற வாழ்த்துகள்

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  ReplyDelete
 15. உங்கள் கதையைப் படித்து கருத்துச் சொன்ன சொன்னீர்கள். நல்லா இருக்கு.
  நடையும் நல்லா இருக்கு.வேறு மாதிரி கருவை தேர்ந்தெடுத்திருக்கலாமோ?

  கடைசி வரி தேவையா?

  பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்!

  நம்ம கதையும் படிச்சு கருத்து சொல்லுங்க.

  தலைப்பு:

  ”வசவும் திட்டும் சாம்பலும்”

  ReplyDelete
 16. நெருப்பு இல்லாம புகையாது என்பது இதுதானோ?
  (இத்தனை நாட்களாக கனன்று கொண்டிருந்த கோபக் கனலை மகள் இன்று உமிழ்ந்து விட்டாளே, அதைச் சொல்கிறேன்.)

  நல்ல கதை, வாழ்த்துகள்!

  ReplyDelete
 17. நல்ல இருக்கிறது

  வாழ்த்துகள்

  ReplyDelete
 18. 'குடிப்பதையும்' 'புடிப்பதையும்' பெருமையாக நினைப்பவர்களுக்கு நல்ல நச்!
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. @@ Karthick
  நன்றி கார்த்திக்.

  @@ பிரியமுடன்...வசந்த்
  நன்றி வசந்த்.

  @@ ரிஷபன்
  நன்றி சார்.

  @@ K.B.JANARTHANAN
  நன்றி சார்.

  @@ வி.நா.வெங்கடராமன்
  நன்றி வெங்கட்.

  @@ சுவாசிகா
  வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

  @@ கே.ரவிஷங்கர்
  வந்ததுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

  @@ பெயர் சொல்ல விருப்பமில்லை
  வந்ததுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

  @@ திகழ்
  வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

  @@ பிரசன்ன குமார்
  வந்ததுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.


  ரேகா ராகவன்

  ReplyDelete
 20. நல்ல கருத்தாழமிக்க நச் கதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. எங்கே?? இன்னமும் புகை விட்டுட்டுத் தான் இருக்காங்க, புத்தகக் கடைகளிலே புத்தகம் வாங்க முடியலை, புகை நாற்றம் குடலைப் பிடுங்குது.

  நீங்களும் அம்பத்தூரா? எங்கே இருக்கீங்க?

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "