என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Friday, October 2, 2009

வடக்கு பக்கம் ஏன் தலை வச்சு படுக்கக்கூடாது ?

" இனிமே இந்த பக்கம் தலை வச்சு படுக்கக் கூடாது என்ன ? " என்று யாரையாவது பயமுறுத்துவதற்காக சொல்வதுண்டு.

" அது சரி, தூங்கும்போது ஏன் வடக்கே தலை வச்சு படுக்கக்கூடாதுன்னு சொல்லுறாங்க?" --ன்னு கேள்வி கேட்கிறவங்க மேலே படிங்க.

கிழக்குப் பக்கமாக தலை வைத்துப் படுப்பது உத்தமம். தெற்குப் பக்கமும் சிறந்தது. மேற்குத் திசை மத்திமமான பலனைத் தரும். வடக்குப் பக்கம் தலை வைத்து படுத்தால் கெடுதலான பலனையே விளைவிக்கும் என்று நூல்களில் போடப்பட்டுள்ளது.

எமதர்மன் வாழும் திசை தெற்கு. அந்த திசையில் கால் வைத்து படுத்தால் எமனை அவமதித்து அவன் கோபத்துக்கு இலக்காக வேண்டும் என்பதால்தான் இன்றைக்கும் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் வடக்கே தலை வச்சு படுக்காதே என்று சொல்வதுண்டு. வடக்கே தலை வைத்து தெற்க்கே கால் நீட்டிப் படுத்தால் மரணம் ஏற்படக்கூடிய நிலை தோன்றும் என்பதுதான் அதன் உட்பொருள். எதையும் மறுத்தே பேசும் இக்காலத்தவர்களுக்கு இதற்கு விஞ்ஞான ரீதியாக ஆதாரம் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

பூமியின் வடக்கு திசையில் வடதுருவம் அமைந்துள்ளது. பூமியின் வட திசை எப்போதுமே காந்த சக்தியின் ஈர்ப்புச் சக்தி கொண்டதாக உள்ளது. வடக்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் வடதுருவத்து காந்த சக்தியின் ஈர்ப்பு சிரசின் மூலமாக உடலைத் தாக்கத் தொடங்கும். இந்த காந்த சக்தியின் ஆற்றல் உடலின் முக்கிய உள்ளுறுப்புக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதனால் முக்கியமாக இதயம் மற்றும் சுவாசப் பகுதிகள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. தொடர்ந்து பல காலம் வடக்கு திசையில் தலை வைத்து படுத்தோம் என்றால் நமது உடலின் பிராண சக்தி பாதிக்கப்பட்டு நாளடைவில் ஆபத்தான நிலையை நமது உடல் அடைந்துவிடும் என்பதே விஞ்ஞானம் நமக்கு கூறும் உண்மை.

அட! இதனால்தான் நமது பெரிசுகள் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் காலை நீட்டி படுக்காதீங்கன்னு சொன்னாங்களா?"--ன்னு கேட்கத்தோணுதா?"

நல்லது. இப்போ அவர்கள் வாழ்ந்த திசையை நோக்கி ஒரு பெரிய கும்பிடு போட உங்களுக்கு தோன்றி இருக்குமே?

12 comments:

 1. ivangalukku ithu theriyumaa?

  pillayarukku thalai thedum pothu vadakka thala vachcha yaanai thalai eduththaanga.

  ReplyDelete
 2. thannoor kizhakku thanginor merkku vettakam therku vendaathor vadakku enroru pazhamozhi undu...

  ReplyDelete
 3. தேவர் மகன் கமல் ஸ்டைலில் படிக்கவும் - " அய்யா, பேத்தி கண்ட அப்புறமும் மத்தவங்கள பெருசுன்னு சொல்றீங்களே? நான் போறேன் யா.. என்ன விட்ருங்க யா ..."

  ReplyDelete
 4. விஞ்ஞான கூற்று கவனிக்கத்தக்கது

  நன்றி

  ReplyDelete
 5. //எமதர்மன் வாழும் திசை தெற்கு//


  ராஜபக்ஷே பிறப்பை நம் முன்னோர்கள் முன்னரே அறிந்து வைத்திருக்கின்றனர். கிரேட்.

  ReplyDelete
 6. நமக்கு தெரியாதாவற்றையும் தெரியும் என்பதாக எண்ணி நம்பிக்கைகளை உரமூட்டி வளர்த்த வண்ணம் உள்ளோம்.எனக்கு எமதர்ம ராஜா வும் புரியவில்லை , அறிவியலும் விளங்கவில்லை. இதுவே என் நிலைப்பாடு.

  ReplyDelete
 7. அந்த காலத்தில் காரணங்களை அறிவியல் பூர்வமாக சொல்லாததால், பல விஷயங்களை நான் தவறு என நினைக்கிறோம். நீங்கள் கூறியது போல எமனை வைத்து பயமுறுத்தினால் தான் மக்கள் வடக்கு பக்கம் தலைவைக்க மாட்டார்கள் என்பதால் அப்படி கூறியிருக்கிறார்கள். எனக்குள்ள பிரச்சினை, எது வடக்கு என கண்டுபிடிப்பது :)

  ReplyDelete
 8. Hi! Endha pakkam thalai vaithaal enna, thookkam vara vendum, adhu thaan mukkiyam. Enakkum Ariviyalukkum romba thooram.

  ReplyDelete
 9. Some where I've read this....

  “Sleeping North: Strengthens physical health.
  Sleeping South: Deepens sleep, elicits intuitive capabilities and enhances your capacity to remember dreams.
  Sleeping East: Helps you wake up quickly and have more energy.
  Sleeping West: Slows life down -- good for stressed adults or hyperactive kids”

  ReplyDelete
 10. மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!

  ReplyDelete
 11. I read all comments.I can only say,"Madhi kettu varum munney, vidhi kettu varum pinne,".
  natarajan.vk, canada.

  ReplyDelete
 12. Informative...i could clear my thoughts on this topic. Thank You.

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "