இருதயம்
எனக்குத் தெரியும்---
இருதயமே
நீ மிகவும் களைத்துப் போய்விட்டாய்
வாழ்க்கை மிகவும் கடினமாகி வருகிறது
ஒவ்வொன்றும் காலதாமதமாகித் தெரிகிறது
அறுபது ஆண்டுகளாய் நீ துடித்துக்
கொண்டிருக்கிறாய்.
நான் வாழ்கிறவரை
நீ மேலும் மேலும் துடிக்கத்தான் வேண்டும்
நாமிருவரும் ஒரே விதியைப் பகிர்ந்து கொள்ள
கட்டளையிடப்பட்டிருக்கிறோம்
நீ ஓய்வு பெறுவதற்கு உரிமை இருக்கிறது
ஜீரணிக்க முடியாத கனவுகளிலும், காதலிலும்
நீ பல வருஷங்கள் கஷ்டப்பட்டுவிட்டாய்
கடந்த காலத்தின் கவலைகளை மறந்துவிடு!
மேலும் மேலும் துடித்துக்கொண்டிரு!
நான் சொல்வதற்கும், பாடுவதற்கும் இன்னும்
நிறைய இரு...க்...கி...ன்...ற.........ன.
(இது நான் 1972--ம் வருடம்
வாங்கிய கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை.
ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன். யார்
எழுதியது என்பதை குறித்து வைக்கவில்லை-- ரசித்த கவிதை தொடரும்.)
நமக்காக நம் இதயம் துடிக்கின்றது; நம் இதயத் துடிப்பு நின்றுவிட்டால், நமக்குப் பிரியமானவர்களின் இதயங்கள் நமக்காகத் துடிக்கின்றன. நீங்கள் ரசித்த கவிதையை நானும் ரசித்தேன்.
ReplyDeleteரசித்ததை ரசித்ததுக்கு நன்றிங்க சார்.
ReplyDeleteரேகா ராகவன்.
//ஜீரணிக்க முடியாத கனவுகளிலும், காதலிலும்
ReplyDeleteநீ பல வருஷங்கள் கஷ்டப்பட்டுவிட்டாய்//
ஆஹா... இது நிஜம்
நல்ல கவிதை. நன்றிங்க.
ReplyDelete@@ கதிர்
ReplyDelete@@ வானம்பாடிகள்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் இருவருக்கும் நன்றிங்க.
ரேகா ராகவன்.
நல்ல கவிதைகளை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி
ReplyDeleteநைஸ் போயம்...
ReplyDeleteதேங்ஸ் ஃபார் சேரிங்...
பகிர்தலுக்கு நன்றிங்க!
ReplyDeleteநல்ல கவிதை. சொல்வதற்கும் பாடுவதற்கும் மட்டுமல்ல, 'படு'வதற்கும் இன்னும் நிறைய இருக்கின்றன தான். -- கே. பி. ஜனா
ReplyDeleteதிருத்தம். 'இருக்கின்றன தாம்.' -கே.பி.ஜனா
ReplyDelete@@ பின்னோக்கி
ReplyDelete@@ பிரியமுடன்...வசந்த்
@@ பழமைபேசி
@@ K.B.JANARTHANAN
நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும்.
ரேகா ராகவன்.
இதயத்தை பற்றி கண்ணதாசன் கவிதை , பதிவு மூலம் பகிர்ந்து கொண்டது , அருமை ரேகா
ReplyDelete