என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 27, 2009

மரணம்

ரு அந்தி வேளையில் நான் இந்த இடத்தை விட்டுப்
போய்விடுவேன்;
எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியாது;
விதைப்புக்காலமா அறுவடை காலமா என்பதும் தெரியாது;
மண் போல் மௌனம் என்னை அழுத்தும்
அந்த அந்தி வேளையில் வழக்கம் போல் நீ வருவாய் என்று
எனக்குத் தெரியும்
அப்போது உனக்குப் புரியும்; நான் நகரமுடியாதபடி முடமாக
இல்லை;
முதல் மெழுகுவர்த்தி போல் ஏதோ ஒன்று அந்த இடத்தில் இருக்கும்
யாரையும் நீ எதுவும் கேட்க மாட்டாய்--
மௌனமாக நிற்பாய்; புதிய ஆகாய வெளிகளை அறிய
வார்த்தைகள் தேவை!
பழம் நினைவுகள் செவிடாகி உன்னிடம் கிடக்கின்றன. ஆனால்
அவை புயலுக்குச் சமம்;
யூதர்களின் தேவவசனம் பொறித்த எந்தக் கல்லையும் நான்
நேசிக்கிறேன்.
சேரி மயானத்தில்
இலையுதிர்காலம் சோகம் பரப்பி நிற்கிறது
ரணத்திலிருந்து தப்பி இனிமேலும் என்னால் மறைந்து
கொண்டிருக்கமுடியாது!

(1972--ம் வருட கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை. ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை தொடரும்.)



உழைக்காமல் கிடைக்கும் பரிசு மரணம்

11 comments:

  1. மரணத்திலிருந்து தப்பி இனிமேலும் என்னால் மறைந்து
    கொண்டிருக்கமுடியாது!
    உங்கள் சேகரிப்பு கவிதைகள் நெஞ்சை தொடும் விதத்தில் தான் இருக்கின்றன எப்போதும்

    ReplyDelete
  2. படிக்கும் போதே மனதை ரணமாக்குகிறது 'மரணம்' கவிதை. உங்கள் ரசனை அருமை. - கே.பி.ஜனா

    ReplyDelete
  3. அருமையான சேகரிப்புகள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு.நன்றி.

    ReplyDelete
  5. @@ ரிஷபன்
    @@ K.B.JANARTHANAN
    @@ வானம்பாடிகள்
    @@ velji
    @@ கதிர் - ஈரோடு

    நன்றிங்க சார் வந்ததுக்கும் பாராட்டுக்கும்.

    ரேகா ராகவன்
    .

    ReplyDelete
  6. http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

    Please accept this gift from me with deep appreciation for your blog.

    -vidhya

    ReplyDelete
  7. @@ Vidhoosh

    அவார்ட் எல்லாம் கொடுத்து இந்த சிறுவனை பெருமைப் படித்தியதற்கு நன்றிங்க மேடம்.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  8. ரேகா உங்கள் சேமிப்பு கவிதைகள் பிரமாதம்

    ReplyDelete
  9. மரணம் என்று சொன்னாலே மூச்சு முட்டத்
    தான் செய்கிறது!

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "