என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 20, 2009

மறுபக்கம்

" இந்திரா நீ இன்னும் ரெடியாகலியா? நேரம் ஆயிட்டிருக்கு சீக்கிரம் கிளம்பு, கோயில்ல எல்லோரும் காத்துக்கிட்டிருக்காங்க. உன்னை அழைச்சுக்கிட்டுப் போகத்தான் வந்தேன்"... அவசரப்படுத்தினான் மகேஷ்.

கோயிலில் அலங்காரம் முடிந்து கல்யாணப் பெண்ணாக மாறியிருந்த இந்திரா சுவாமி சன்னதியின் எதிரே மணமகனுடன் நின்ற போது தரிசனத்துக்காக வந்திருந்த அனைவரின் கண்களும் இருவரையும் மொய்த்தன. இந்திராவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

இருவரும் மாலை மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்வதை 'மறுபக்கம்' சீரியலுக்காக பல கோணங்களில் பதிவு செய்தார் வீடியோ கேமராமேன். எல்லா ஷாட்டும் முடிந்து பேக்கப் சொன்னதும் இந்திராவை ஆட்டோவில் ஏற்றி ... அவள் கையில் பணத்தை திணித்தான் மகேஷ்.

"உன்னோட கவலை எனக்குப் புரியுது இந்திரா. நடிக்க நீ சான்ஸ் தேடி அலைஞ்சப்பல்லாம் விதவைப் பெண் வேஷம். போன மாசம் உன் கணவர் இறந்த நிலையில் சர்வ அலங்காரத்தோட இன்று மணப்பெண் வேஷம். இன்னிக்கு கிடைச்ச பணம் குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு சரியா இருக்கும். நாளைக்கு இதே சீனோட கன்டினியூட்டி இருக்கு, ஆட்டோ பிடிச்சு வந்துடு."

அவளின் அழுகைச் சத்தம் ஆட்டோ சத்தத்தில் கரைந்து போனது.

(27.7.05 இதழ் குமுதத்தில் வெளியான என் ஒரு பக்கக் கதை)
எளிமையாக இருப்பதுதான் உண்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும்

11 comments:

  1. மறுபக்கம் எப்போதுமே அழுத்தமானதுதான்

    ReplyDelete
  2. ஒரு பக்கத்தில இப்படி ஒரு திருப்பம்! Superb.

    ReplyDelete
  3. மறு பக்கத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியா? யதார்த்தமான கதை!

    வெங்கட், புது தில்லி

    ReplyDelete
  4. இந்த உலகம் ஒரு நாடக மேடை... ஷேக்ஸ்பியர் _கே.பி.ஜனா

    ReplyDelete
  5. விதி எப்போதுமே கேலி செய்யும் வித்தியாசமாய்

    ReplyDelete
  6. குத்தெதிர் கோணங்கள் கொண்டதே வாழ்க்கை! வேறென்ன சொல்ல? அருமையான கதை!

    ReplyDelete
  7. @@ கதிர் - ஈரோடு
    @@ வானம்பாடிகள்
    @@ வி. நா. வெங்கடராமன்
    @@ ரிஷபன்

    வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ரேகா ராகவன்

    @@ ரவிபிரகாஷ்
    //குத்தெதிர் கோணங்கள் //
    உங்களிடமிருந்து நிறைய அறியாத வார்த்தைகளை தெரிந்து கொள்கிறேன். வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  8. அப்பா சாமி! கொஞ்சம் வெப்சைட் கலர் மாத்தறது.. கண்ணு வலிக்குது இத பார்த்தா..

    கதை நல்லா இருக்கு. ஆனா எங்கயோ படிச்சா மாறி இருக்கு..

    ReplyDelete
  9. //கதை நல்லா இருக்கு. ஆனா எங்கயோ படிச்சா மாறி இருக்கு//

    நல்லா படி ஏற்கனவே குமுதத்தில் வெளியான என் கதைன்னு போட்டிருக்கேனே!.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  10. அருமையான கதைங்க ஐயா!

    ReplyDelete
  11. @@ பழமைபேசி
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ரேகா ராகவன்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "