என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Wednesday, November 25, 2009

பாசிடிவ்

மெடிகல் ரெப் வேலைக்கான இண்டர்வியூ நடந்து கொண்டிருந்தது.

கடைகளில் கணக்கெழுதிச் சம்பாதிக்கும் அப்பா, நோயாளி அம்மா, கல்யாணத்துக்காக காத்திருக்கும் தங்கை என்று ஒவ்வொருவராய் நினைவில் வந்து போக... தன்னுடைய முறைக்காக காத்திருந்தான் குமார்.

இண்டர்வியூ முடிந்து வெளியே வந்தவர்கள் ' சம்பந்தமில்லாம கேள்விகேட்கிறாங்கப்பா ' என்று முணுமுணுத்தார்கள்.

ஜி.எம்.கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் குமார் உடனுக்குடன் பதிலைக் கூற... அவர் அவனிடம்...

"மிஸ்டர் குமார்! இண்டர்வியூவுக்கு வந்திருந்த எல்லோரும் சர்ட்டிபிகேட் மட்டும்தான் கொண்டு வந்திருந்தாங்க. நீங்க மட்டும்தான் எப்படியும் இந்த வேலை கிடைச்சிடும்கற தன்னம்பிக்கையில் மத்தியான சாப்பாட்டைக் கூட கையோடு கொண்டு வந்திருக்கீங்க! வெரி பாசிடிவ். இந்த மாதிரி தன்னம்பிக்கை உள்ளவங்களாலதான் எங்க கம்பெனி தயாரிக்கும் மருந்துகளை டாக்டர்களிடம் பேசி மார்க்கெட்டிங் செய்ய முடியும் ".

( 3.12.2008 குமுதம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)

நீ ஆசைப்படுவதைக் கடவுள் உனக்குத் தராமல் இருக்கலாம். ஆனால், உனக்கு எது நல்லதோ அதை அவர் நிச்சயம் தருவார்

8 comments:

 1. கதை நாயகனும் சரி, நீங்களும் சரி தன்னம்பிக்கையை இதைவிட சிறப்பாக வெளிப்படுத்த முடியாது. .

  ReplyDelete
 2. அருமை..ராகவன் சார்..

  பாசிட்டிவ்...திங்கிங்..

  ReplyDelete
 3. ஒரு பெரிய விஷயத்தை சிறிய கதையில் சொல்லிய விதம் மிகவும் நன்றாக உள்ளது.

  வெங்கட் நாகராஜ்
  புது தில்லி

  ReplyDelete
 4. வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க

  ReplyDelete
 5. கதாநாயகன் குமாரின் blood group B POSITIVE ஆக இருக்குமே !

  ReplyDelete
 6. அனைவரும் நெகடிவாக நினைக்கும் போது பாசிடிவாக நினைப்பவன் ஜெயிப்பான் என்பதை எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள். Very nice

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "