எனது மகிழ்ச்சியான விருந்தில் துயரங்களே பதார்த்தங்கள்!
எனது வயலில் விளைந்த பயிர்கள் களைகளே!
எனக்கு நல்லவை என்று எண்ணிக்கொள்ள முடிந்ததெல்லாம்
வெற்று நம்பிக்கைகளையே!
நாள் நகர்ந்துவிட்டது; ஆயினும் சூரியனை நான் காணவில்லை
நான் வாழ்கிறேன்; ஆனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.
நான் வாழ்கிறேன்; ஆனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.
எனது கதை கேட்கப்பட்டது ; ஆயினும் சொல்லப்படவில்லை
என்னில் கனிந்தவை உதிர்ந்துவிட்டன; ஆயினும் எனது
இலைகள் பசுமையாகவே இருக்கின்றன.
எனது இளமை அழிந்துவிட்டது; ஆயினும் வயோதிகனாகிவிடவில்லை.
நான் உலகத்தைப் பார்த்துவிட்டேன்; ஆயினும் உலகத்தால்
நான் பார்க்கப்படவில்லை;
பந்தத்தின் இழைகள் அறுபட்டன; ஆயினும் பின்னப்படவில்லை
நான் வாழ்கிறேன்; ஆனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.
என் மரணத்தைத் தேடினேன்; அது என் கருப்பையிலேயே இருந்தது;
வாழ்க்கையை நோக்கி நின்றேன்; அது வெறும் நிழலாக இருக்கக்
கண்டேன்.
மண்ணில் என் கால் பதிந்தது. என் கல்லறை இருப்பது
தெரிந்தது.
என் கோப்பை நிறைந்திருக்கிறது; இதோ அதுவும்
காலியாகிவிட்டது
நான் வாழ்கிறேன்; ஆனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.
(1972--ம் வருட கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை. ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை முற்றும் .)
நல்ல கவிதை படித்த மகிழ்ச்சி -
ReplyDeleteபுதுவை சந்திரஹரி
அருமை..
ReplyDeleteநன்றி
வாசித்து இன்பமுற்றேன்!
ReplyDelete//எனது கதை கேட்கப்பட்டது; ஆயினும் சொல்லப்படவில்லை//
ReplyDeleteஎன்ன ஒரு வரி! மொத்தத்தில்... வைரம் பாய்ந்த கவிதை! -- கே. பி. ஜனா
சாதனைகள் பல புரிந்தாலும், எல்லார் மனதிலும் இப்படி ஒரு கவிதைத் தனமான எண்ணம் உண்டு.
ReplyDeleteஅருமையான கவிதை!- N.M.லஷ்மி.
//எனது கதை கேட்கப்பட்டது ; ஆயினும் சொல்லப்படவில்லை//
ReplyDeleteவித்யாசமான படைப்புத்தான்..
என் மரணத்தைத் தேடினேன்; அது என் கருப்பையிலேயே இருந்தது;
ReplyDeleteமுரண்களால் ஒரு வாழ்க்கைக் கவிதை நன்றி வாசிக்கக் கொடுத்ததற்கு
பகிர்வுக்கு நன்றி ராகவன். அருமை.
ReplyDeleteமிக நல்ல கவிதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
ReplyDeleteமோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/
ஒரு நல்ல கவிதையை வாசித்த திருப்தி கொண்டேன்!!! நன்றிகள்!!!
ReplyDeletePOONGUNDRAN2010.BLOGSPOT.COM
மோகன் குமார் தளத்துல இருந்து வர்றேன் சார்.அருமையான கவிதை.உங்கள் மனசையும் சேர்த்து சொல்றேன் சார்!
ReplyDeleteGreetings Sir! I will call you after reaching my native.
ReplyDeleteஎங்களுடன் பகிர்ந்து கொண்ட கவிதைக்கு நன்றி. அன்று நீங்கள் ரசித்தது, இன்றும் ரசிக்க முடிகிறது. அது அந்த மகத்துவ கவிஞரின் சிறப்பு.
ReplyDeleteஒரு நல்ல கவிதையை ரசித்த திருப்தி என்னுள்!
ReplyDeleteஆஹாஹா....பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியும் பூங்கொத்தும்!
ReplyDelete