என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, December 5, 2009

நகம்

"பிரமிளா, இன்னிக்காவது விரல் நகங்களை வெட்டுடீ பெண் பார்க்க வர்றவன் உன்னைப் பிடிக்கலேன்னு சொல்லிடப் போறான்" என்றாள் அம்மா.

அப்பா அம்மா பேச்சைத் தட்டமுடியாததால் பியூட்டி பார்லருக்கு போனவள் நகங்களை ஓட்ட வெட்டிக் கொண்டுவிட்டாள்.

பெரியவர்களை நமஸ்கரித்து எல்லோருக்கும் காபி கொடுத்து அமர்ந்தாள் பிரமிளா. ஆசையோடு அவள் கைகளைப் பற்றிப் பார்த்த பையனின் அம்மா முகத்தில் அதிர்ச்சி.

"என்னங்க இது? உங்க பொண்ணு கை விரல்களில் அழகா நகம் வளர்த்து வச்சிருக்கிறதா புரோக்கர் சொன்னாரே! பார்த்தா அப்படி இல்லியே! பொண்ணு வேலைக்குப் போறதாலே சிட்டி பஸ்ல சில்மிஷம் பண்றவங்க, இப்படி நகம் வளர்த்து வச்சிருக்கிறவங்ககிட்ட வர பயப்படுவானுங்களே நல்ல பாதுகாப்பான ஜாக்கிரதையான பொண்ணுன்னு உங்க பெண்ணைப் பார்க்க வர்றதா ஒப்புக்கிட்டோம். இங்கே என்னடான்னா"... என்று அவர் சொல்லி முடிக்க்கவும் வருத்தம் கலந்த பார்வையை அம்மாவை நோக்கி வீசினாள் பிரமிளா.

--ரேகா ராகவன்--

( "குமுதம்" 17.5.2006 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை. )
நேர்மையை ரொம்பவும் பாராட்டுவார்கள்.ஆனால், அவர்களைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.

6 comments:

  1. இப்படி ஒரு பார்வையா பேஷ்..

    ReplyDelete
  2. வித்தியாசமான கோணம்
    அழகு...

    ReplyDelete
  3. ஹ ஹ ஹா

    வித்யாச சிந்தனை சார்

    ReplyDelete
  4. If I happened to be in that scene I would have given her 100 per cent marks for following practices condusive to good health.

    Mandaveli Natarajan.

    ReplyDelete
  5. சுகாதாரம் முக்கியம் சார். பஸ் நெருக்கடிக்கு, ஒரு பின் போதும். ஹி,ஹி,ஹி,....... கதை நல்லா இருக்கு.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "