என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, May 13, 2012

'எல்லாமே ஒரு கணக்கு தான்!''




காலேஜ் பையன்
கணக்கு பண்ணணும் என்றால்
எவளையோ
காதலிக்க முயற்சிக்கிறான்
என்றறிவோம்.

அரசியல் வா(வியா)தி
கணக்கு பண்ணணும் என்றால்
யாருக்கோ எதுக்கோ
ஆட்டையை போடப் போகிறார்
என்றறிவோம்.

சினிமா நடிகர்
கணக்கு பண்ணணும் என்றால்
ரசிகர் மன்றத்தை
அதிகரிக்கப் போகிறார்
என்றறிவோம்.

முதலமைச்சர்
கணக்கு பண்ணணும் என்றால்
மந்திரி சபையை மாற்றப் போகிறார்
என்றறிவோம்.

போலி சாமியார்
கணக்கு பண்ணணும் என்றால்
எந்த பக்தைக்கோ
பிடித்தது சனி
என்றறிவோம்.

ஆனால்...

மூணாம் வகுப்பு பையன்
கணக்கு பண்ணணும் என்றால் மட்டும்
கணக்கு போடுவதை சொல்கிறான்
என்பதறிக!

<><><><><><><><><><><><><><><><><>

12 comments:

  1. ஹா.. ஹா.. நல்ல வேளை.. அவனாச்சும் நல்லா இருக்கட்டும்..

    ReplyDelete
  2. ஆஹா...சூப்பர் சார்!
    இப்படித் தான் கணக்கு வாத்தியார் பொண்ணை ஒருத்தன் கணக்குப் பண்ணி.......

    ReplyDelete
  3. கணக்கில் பாஸ்மார்க்!

    ReplyDelete
  4. Well, class 3 student does real calculation, while others do 'life calculation'...

    ReplyDelete
  5. Super Sir...nalla vellai pinchilae pazthathu endru sollamal vittargal

    ReplyDelete
  6. ஆகா இப்படியும் ஒரு கலக்கல் கணக்கா ;)

    ReplyDelete
  7. மேலும் கணக்குப்பண்ண ஏதாவது உண்டா? அருமை!

    ReplyDelete
  8. கணக்கு விளையாட்டு காட்டுகிறதே !

    ReplyDelete
  9. அதுவும் மூணாம் வகுப்பு வரையில் தான்.
    அதுக்கு மேலே நம்ம கணக்கெல்லாம் தப்பு.

    ReplyDelete
  10. கணக்கின் பொருள் ஒவ்வொரு இடத்திலும் தரும்
    மாறுபட்ட பொருள் குறித்து மிக அழகாக
    விளக்கிச் செல்லும் பதிவு அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "