என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Wednesday, May 23, 2012

'கடைசித் தேவை'
மகனின் மேல் படிப்புக்காக
ஆட்டை வித்து, மாட்டை வித்து
தன் தேவைகளை புதைத்து வைத்து
அவன் படித்து முடித்து
நகரத்தில் வேலைக்கு சேர்ந்து
விரும்பிய பெண்ணை கட்டி வைத்து
இருந்த அரை ஏக்கர் நிலத்தையும்
ஒரே ஓட்டு வீட்டையும்
அவன் ஃபிளாட் வாங்குவதற்காக வித்து
கடைசி நாட்களையாவது
கழிக்கலாம் மகனோடு என்று
மனைவியோடு நகரத்துக்கு வந்தவருக்கு
ஒரு வாய் காப்பி
எப்போ கொடுப்பாளோ மருமகள்
என்று காத்திருக்க வேண்டிய
நகர(நரக) பொழப்பு பிடிக்காமல்
கிராமமே மேல் என மீண்டு வந்து
கூலி வேலைக்குப் போய்
வாடகை குடிசையில் படுத்துறங்கி
வயிற்றை கழுவும் செயலுக்குப்
பெயர் தன்மானமாமே!

5 comments:

 1. அதை வித்து இதை வித்து கடைசியில் இப்படி ஆயிடுத்து. ஆனா பரவாயில்லை தன்மானம் மிஞ்சிடித்து.

  ReplyDelete
 2. தன் மானம் எப்போதுமே சந்தைப் பொருளாக ஆக முடியாது என்பதை மிக அழகாக விளக்கிப் போகும் பதிவுஅருமையிலும் அருமை.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நிஜமாவே தன்மானம் தான்.

  ReplyDelete
 4. தன்மானம் பெருமை கொண்டது !

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "