என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 24, 2012

ஆனால்...




விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்கள்
ஆகிப்போச்சு!
குடிநீருக்கும் விலை கொடுக்கும் அவலம்
வந்து போச்சு!
பாசம் இங்கே அருகிப் போச்சு
முதியோர் இல்லம் பெருகிப் போச்சு!
காட்டையெல்லாம் அழிச்சு மனுசப் பையன்
பைகள் கரன்சியால் நிரம்பிப் போச்சு!
செல்ஃபோன் டவர் பெருக்கத்தினால
சிட்டுக் குருவின்னா என்னான்னு
நம்ம சந்ததிக்கு தெரியாமலே ஆச்சு!
ஆனா..
ஏழை ஏழையாகவும்
பணக்காரன் பணக்காரனாகவும்
இருக்கும் நிலை மட்டும்
நம்ம ஊரில் நிலைத்துப் போச்சு!

<><><><><><><><><><><><><><><><><><><><>

கட்டுரை.காம்-ல் வெளியான கவிதை 

7 comments:

  1. யாருக்கு என்ன போச்சுன்னு இனியும் இருக்கலாமா? கவிதை பிடிச்சுப் போச்சு!

    ReplyDelete
  2. சிட்டுக்குருவி போல அழகான கவிதை.
    கருத்துக்கள் அருமை.

    ReplyDelete
  3. அருமையான கவிதை. இன்றைய நிலையை சரியாச் சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  4. அருமையான கவிதை
    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்ல கவிதை. ரசித்தேன்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "