காலேஜ் பையன்
கணக்கு பண்ணணும் என்றால்
எவளையோ
காதலிக்க முயற்சிக்கிறான்
என்றறிவோம்.
அரசியல் வா(வியா)தி
கணக்கு பண்ணணும் என்றால்
யாருக்கோ எதுக்கோ
ஆட்டையை போடப் போகிறார்
என்றறிவோம்.
சினிமா நடிகர்
கணக்கு பண்ணணும் என்றால்
ரசிகர் மன்றத்தை
அதிகரிக்கப் போகிறார்
என்றறிவோம்.
முதலமைச்சர்
கணக்கு பண்ணணும் என்றால்
மந்திரி சபையை மாற்றப் போகிறார்
என்றறிவோம்.
போலி சாமியார்
கணக்கு பண்ணணும் என்றால்
எந்த பக்தைக்கோ
பிடித்தது சனி
என்றறிவோம்.
ஆனால்...
மூணாம் வகுப்பு பையன்
கணக்கு பண்ணணும் என்றால் மட்டும்
கணக்கு போடுவதை சொல்கிறான்
என்பதறிக!
<><><><><><><><><><><><><><><><><>
ஹா.. ஹா.. நல்ல வேளை.. அவனாச்சும் நல்லா இருக்கட்டும்..
ReplyDeleteஆஹா...சூப்பர் சார்!
ReplyDeleteஇப்படித் தான் கணக்கு வாத்தியார் பொண்ணை ஒருத்தன் கணக்குப் பண்ணி.......
கணக்கில் பாஸ்மார்க்!
ReplyDeleteஆஹா. அருமை.
ReplyDeleteWell, class 3 student does real calculation, while others do 'life calculation'...
ReplyDeleteSuper Sir...nalla vellai pinchilae pazthathu endru sollamal vittargal
ReplyDeleteஆகா இப்படியும் ஒரு கலக்கல் கணக்கா ;)
ReplyDeleteமேலும் கணக்குப்பண்ண ஏதாவது உண்டா? அருமை!
ReplyDeleteகணக்கு விளையாட்டு காட்டுகிறதே !
ReplyDeleteஅருமை.அருமை.
ReplyDeleteஅதுவும் மூணாம் வகுப்பு வரையில் தான்.
ReplyDeleteஅதுக்கு மேலே நம்ம கணக்கெல்லாம் தப்பு.
கணக்கின் பொருள் ஒவ்வொரு இடத்திலும் தரும்
ReplyDeleteமாறுபட்ட பொருள் குறித்து மிக அழகாக
விளக்கிச் செல்லும் பதிவு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்