என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, December 8, 2010

சந்திப்பு



"பெண் பார்க்க வரலாமான்னு கேட்டு அந்த தாம்பரம் வரனின் அப்பா போன் பண்ணினார். ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லிடலாமா?"

ஆபீஸ் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததுமே அப்பா கேட்கவும் எரிச்சலானாள் வனிதா.

" போங்கப்பா. பெண் பார்க்கிறோம் பேர்வழின்னு கும்பலா வந்து ஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுவிடடு வீட்டுக்குப் போய் தகவல் சொலறோம், லெட்டர் போடறோம்னு சொல்றது. அப்புறம் பெண் கொஞ்சம் நிம் கம்மியா இருக்கா, உயரம் பத்தலைன்னு நொண்டிச் சாக்கு சொல்றதுன்னு இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு. தண்டச் செலவு. வீண் சிரமம்...இதெல்லாம். எனக்குப் பிடிக்கலை" --- கறாராகச் சொன்னாள்.

" நல்ல குடும்பத்து பையன். கை நிறைய சம்பாதிக்கிறானாம். ஏண்டீ இப்படி ஆரம்பத்திலேயே தடங்கல் போர்டு வைக்கறே? " -- அம்மா தன் பங்குக்கு முழங்கினாள்.

" வேணும்ண்ணா ஒண்ணு ண்ணலாம். அந்த பையனை ஸ்பென்சர் பிளாசாவுக்கு வரச்சொல்லி பார்த்திடறேன். பிடிச்சிருந்தா மத்தவங்களோட வீட்டுக்கு வந்து பார்க்கட்டும். இதுக்கு ஒத்துக்கிட்டா சரி. இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்."

அம்மா எதிர்த்து ஏதோ சொல்ல அப்பாதான் அந்த பையனிடம் போனில் பேசி அதற்கு சம்மதம் வாங்கினார்.

வெள்ளிக்கிழமை. ஸ்பென்சர் பிளாசாவில் இருந்த அந்த பீட்சா ஹட்டில் வனிதாவையும் அந்த பையனையும் பல ஜோடி கண்கள் பார்க்கத் தவறவில்லை.

சனிக் கிழமையே பதில் வந்துவிட்டது அவனிடமிருந்து. வருத்தம் தெரிவித்து.

அடுத்த வாரத்தில் ஒரு நாள். அதிகாலையிலேயே வந்த தரகர் சொல்லிக் கொண்டிருந்தார்.

'' நேத்து புதுசா ஒரு பையனோட ஜாதகம் வந்தது. ஏற்கனவே பார்த்த எல்லா வரன்களும் தட்டிப்போயிடுச்சேன்னு ஒரு ஆதங்கத்தோட அவங் வீட்டில போய் உங்க பெண்ணோட போட்டோவை காண்பிச்சேன். அவங் அப்பாஅம்மாவுக்கு பிடிச்சது. ஆனா பையன் பார்த்துட்டு `'ந்த பெண்ணை ஸ்பென்சர் பிளாசா பீட்சா ஹட்டில் யாருடனோ பார்த்திருக்கேனே? வேற இடம் இருந்தா சொல்லுங்க'ன்னுட்டான்..."

_______________________________________________________________________

(5.12.10 தினகரன் "வசந்தம்"இதழில் வெளியான என் சிறுகதை)

14 comments:

  1. நல்ல கதை. ஒவ்வொரு மனிதனுக்கும் வித்யாசமான கண்ணோட்டம் இருக்கும் என்பதற்கு இச் சிறுகதை ஒரு எடுத்துக்காட்டு.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சார் தினகரன் வசந்தத்தில் கதை பிரசுரம் ஆனதற்கு. சிந்தனை வித்யாசமாய் உள்ளது. ஆனால் வீட்டில் பார்க்காமல் கோயில் போன்ற வெளி இடங்களில் சந்திப்பது நல்லது என்றே எனக்கும் தோன்றுவதுண்டு

    ReplyDelete
  3. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. நல்ல கதை. தினகரனில் வெளிவந்ததுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அன்புள்ள ரேகா ராகவன் அவர்களே,
    தினகரன் "வசந்தம்" இதழில் தங்கள் பதிவு பிரசுமானதற்கு எமது முதற்கண் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன வெளிநாட்டு நாகரிகம், பெண்ணுரிமை , ஆணுக்குப் பெண் சம உரிமை, பெண்கள் முனனேற்றம் என்று பலவாறு மேடையில் முழங்கினாலும் நமது இந்திய கலாச்சாரத்திற்கு மாறாக நடப்பவர்கள் எவரேனும், அவர்களின் செயல்களை நாம் ஏற்றுக் கொள்ள மனத்தளவில் திண்மை இல்லை. .இந்த மனத்திண்மை நாம் பெறும்வரை, பிட்சா ஹட்டில் தன் வாழ்க்கையை பீஸ், பீசா தொலைத்திட்ட வனிதா போன்றோருக்காக , நாம் வருந்துவோம். "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம." என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம், மக்களுக்கு விழிப்புணர்வூட்டிடும் ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  5. இப்படி ஒரு கோணம் இருக்கா.. எதிர்பாராத முடிவு.

    ReplyDelete
  6. அய்யா கோயில்களில் சந்திக்க வைக்கலாம். எல்லோர் எண்ணங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எண்ணத்தூண்டும் சிந்தனை.

    ReplyDelete
  7. கதை நன்றாக இருந்தது... சூப்பர் ட்விஸ்ட்...

    லேட்டஸ்டா தினகரன் வசந்தத்தில் வந்திருக்கு.. பலே. இன்னும் ஃபுல் ஃபார்ம்ல தான் இருக்கீங்க...

    வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  8. enga thaan paakkarathaam pinna? enga college la naan padikkum pothu college kulla irukkara pullaiyaar kovil-la "jodi"ies pesuvaangannu antha kovilukke "kadala vinayagar kovil" nu per vechchutaanga!

    very unexpected!

    congrats!!

    ReplyDelete
  9. good story. due to this type of missunderstanding,
    nowadays pen paarkkum padalam held at temples


    nice.

    ReplyDelete
  10. :))

    விதி வலியது !!

    ReplyDelete
  11. நல்ல சிறுகதை சார் ரசித்தேன்

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "