அவ்வை ஷண்முகி படத்தில் நடிகர் டெல்லி கணேஷை மணிவண்ணன் கோஷ்டியினர் தெளிய வைத்து அடிக்கும் காட்சியில் அவரது நடிப்பு மட்டும் தனித்து தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு குபுக் என்று சிரிப்பு வருகிறது.
கடந்த ஞாயிறு அன்று அவர் அம்பத்தூர் ஹுமர் கிளப் நடத்திய கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது அவர் சில நகைச்சுவையான காட்சிகளை விவரித்தார். அது...
ஒரு நாள் ஏ.வி.எம் படப்பிடிப்பு நிலையத்தின் பின் புறம் உள்ள சுடுகாட்டில் ஒரு படத்துக்கான ஷூட்டிங் எடுத்தார்கள். நான் அங்கே நடிக்க சென்றிருந்தேன்.லஞ்ச் பிரேக்கின் போது அந்த சுடுகாட்டின் நிஜமான வெட்டியானுடன் அவரைப் பற்றியும் அவர் செய்யும் வேலைகளைப் பற்றியும் பேச்சுக் கொடுத்ததில் அவர் நெருங்கிய நண்பர் போல என்னிடம் பேச ஆரம்பித்துவிட்டார். அவருக்கு லஞ்ச் வரவழைத்து கொடுத்து மேலும் குஷிப்படுத்தினேன். மாலை ஷூட்டிங் முடிந்து எல்லோரும் சென்றுவிட்டோம். அதற்கு அப்புறம் வேறு ஷூட்டிங்குகளில் கலந்து கொண்டதால் அதைப் பற்றி மறந்தே போய்விட்டேன்.
ஒரு பதினைந்து நாள் கழித்து கோடம்பாக்கத்தில் என் கார் சிக்னலுக்காக காத்திருந்தபோது காரை ஓட்டி வந்த என்னை அந்த வெட்டியான் சைக்கிளில் இருந்தவாறே பார்த்து " என்ன சார் அங்கே எப்ப வர்றீங்க?" என்று ஒரு அணுகுண்டை வீசினார். நான் ஆடிப் போய்விட்டேன். அந்த இடத்தில் அந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு அவனிடம் "இல்லப்பா எனக்கு இன்னும் மூணு நாலு கமிட்மென்ட்ஸ் இருக்கு, அது முடிந்ததும் நானே வந்துடுவேன் !" என்றேன்.
அதுக்கு அந்த வெட்டியான் " ஐயோ சார் நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை,மறுபடியும் ஷூட்டிங்குக்காக எப்போ அங்கே வர்றீங்க? என்று தான் கேட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிக்கோ சார்! " என்றான். " இதை அப்போதே இப்படி கேட்டிருக்க வேண்டியதுதானே?" என்று நான் அவனிடம் சொல்லவும் சிக்னல் விழவும் சரியாக இருந்தது. அப்புறம் நான் காரை கிளப்பிக்கொண்டு போய்விட்டேன்.
என்ன நண்பர்களே அவரின் நகைச்சுவையை ரசித்தீர்களா?
எல்லாம் சரி. தலைப்புக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்? சம்பந்தம் இருக்கு.நடிகர் டெல்லி கணேஷ் என் நீண்ட நாள் நண்பர். அவரை மாதிரி நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவரைப் பற்றி நான் என் நண்பர்களிடம் பேசும்போது டெல்லி கணேஷும் நானும் என்றுதான் பேச்சை ஆரம்பிப்பேன். இப்போ தலைப்பு சரியாப் போச்சா?
(இது ஒரு மீள் பதிவு)
டெல்லிகணேஷின் நகைச்சுவை உணர்வை எண்ணி வியக்கிறேன். இப்படியும் ஒரு மனிதரா?
ReplyDeleteஅவர் ஒரு நகைச்சுவை மகானுபாவர் சார். எந்த பாத்திரம் கொடுத்தாலும் சும்மா பூந்து புறப்பட்டுடுவார்.
ReplyDeleteஅவர் குணச்சித்திர நடிகராக அறியப்பட்டாலும், அவரது நகைச்சுவையே எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பகிர்வும் அருமை.
ReplyDeleteஉங்கள் நண்பருக்கு, எங்களது வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரியப்படுத்துங்கள்.
டெல்லி கணேஷும் நீங்களும் பின்னே நிங்களோட பதிவும்... பின்னே இப்பவும் படித்து மகிழ்ந்தோம்!
ReplyDeleteஎப்ப கேட்டாலும் ப்ரெஷ் ஆ இருக்கறதுதான் நல்ல நகைச்சுவை என்றால்.. அது இதைப் போலத்தான்..
ReplyDeleteடைமிங் சென்ஸ் கணேஷ் சாருக்கு உண்டு..
ReplyDeleteரேகா ராகவனுக்கும்!!!
நம் தமிழ்நாட்டு நகைச்சுவை நடிகர்கள் அனைவரையுமே எனக்குப் பிடிக்கும். நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தையுமே மிகவும் ரசித்துப் பார்ப்பேன்.
ReplyDeleteஒரு 20 வருடங்களுக்கு முன்பு, சின்னத்திரையில் காத்தாடி ராமமூர்த்தியுடன், டெல்லி கணேஷ் அவர்கள் சேர்ந்து நடித்த ”அய்யா.. அம்மா.. அம்மம்மா..!” என்ற தொடர் நாடகம் தூர்தர்ஷனில் ஒலிபரப்பானது. இப்போது நினைத்துக்கொண்டாலும் எங்கள் வீட்டில் அனைவரும் சிரித்து மகிழ்வோம். அதில் நடித்த அனைவருமே சூப்பராக நடித்து மகிழ்வித்தனர்.
[தற்போது CD ஆக வெளிவந்துள்ளதில், காத்தாடியைத் தவிர மற்ற நடிகர்கள் அனைவரையும் மாற்றி, கதையையும் மாற்றி அவ்வளவாக ரசிக்கும்படியாக இல்லாமல் உள்ளது என்பதே எனது அபிப்ராயம்.]
குணச்சித்திர நடிப்பு & நகைச்சுவை உணர்வு என்று எதுவாகிலும் மிகச்சிறப்பாக செய்யும் திறமை வாய்ந்த டெல்லி கணேஷுக்கும், அவர் குறிப்பிட்ட இந்த நகைச்சுவைப்பகுதியை பதிவு செய்து வெளியிட்ட தங்களுக்கும் வாழ்த்துகள்.
"எப்ப சார் வருவீக?" - என்ற கோக்குமாக்கான கேள்வியில் ஒரு வெள்ளாந்தித்தனமும் வெளிப்படுகிறது.. பீலிங் பிதாமகர் டெல்லி கணேஷ்....டெல்லி கணேஷ்தான்!
ReplyDeleteYour blog has been designed aesthetically. Congrats to the designer!
ReplyDeleteஇதுவே வேற யாராவதாக இருந்திருந்தால் கோபப்பட்டு வார்த்தைகளால் விளாசியிருப்பார்கள். ம்ம்ம் அருமையான மனிதர்.
ReplyDeleteகலகல பகிர்வு..நன்றி
ReplyDeleteடெல்லி கணேஷ் நடிப்பு எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு தடவை அவர் புதிய குத்துப் பாட்டை கர்னாடக ராகத்தில் பாடிக் காட்டி அசத்தினார். ஆனால், விஜய் டி.வி-யிலா வேறு எதிலாவதா என்று தெரியவில்லை; இவரும் மறைந்த எஸ்.எஸ்.சந்திரனும் பிரமுகர் ஒருவரை எதிரே உட்கார வைத்து அடிக்கின்ற கூத்துகளும் கேட்ட்கின்ற கேள்விகளும் சகிக்கவில்லையே!
ReplyDeleteடைமிங் சென்ஸ் மிக அற்புதம்
ReplyDeleteஇரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
ReplyDeleteஇனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
டெல்லி கணேஷின் நடிப்பில் இருக்கும் மெல்லிய நகைச்சுவை உங்கள் எழுத்திலும். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகலக்கல் பதிவு. இது மீள் பதிவா???
ReplyDeleteநான் இப்பதாங்கோ படிக்கிறோம்.
நல்ல பதிவு, டெல்லி கணேஷ் ஒரு அற்புதமான நடிகர், அவரை தமிழ் சினிமா சரியாக உபயோகப்படுத்தவில்லையோ என்ற ஆதங்கம் உண்டு எனக்கு, சுவையாக எழுதி இருக்கின்றீர்கள்.
ReplyDeleteதாங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/02/blog-post_05.html
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteha ha ha...super... I always liked his movies... not only as a comedian but a character artist too in "Sindhu Bairavi" movie...too good...
ReplyDeleteஅன்புள்ள ராகவன் சார்...
ReplyDeleteடெல்லி கணேஷ் ஒரு அற்புதமான நடிகர். அவர் நடித்த ஒவ்வொரு நடிப்பு குறித்தும் ஒரு ஆய்வுக்கட்டுரையே எழுதலாம். அத்தனை பொறுப்புண்ர்ச்சி. அர்ப்பணிப்பு. ஒழுங்கு. சொல்லிகொண்டேபோகலாம். அவர் சொன்னதைவிடஉங்களின் எழுத்துமுறை அபாரமாக உள்ளது. அலுப்பூட்டாமல் சுவைக்க வைத்த பதிவு.
ஆர்.ஆர்.ஆர். வலைப்பூவில் உங்கள் பதிவைப் பற்றி அறிந்து கொண்டு இங்கே வந்தேன்.. அருமையான பதிவு. தில்லி கணேஷின் டைமிங் சென்ஸ்ம் முகபாவங்களும் பிரத்யேகமானவை. நீங்கள் அம்பத்தூரா? அம்பத்தூரை நிலைக்களனாய் வைத்து ஒரு பதிவிட்டிருக்கிறேன். உங்களுக்கு சுவாரஸ்யமாய் இருக்கலாம்.
ReplyDeleteஎன் பதிவிலும் கணேஷ் சிரிக்கிறார் வந்து வாசியுங்கள்
ReplyDeleteநீங்களும் அவரை மாதிரியே நல்லா தெளிய வச்சு அடிக்கறீங்க....
ReplyDeleteg
ReplyDeleteடெல்லிகணேஷின் நகைச்சுவை உணர்வும் அவரது குணச்சித்திர நடிப்பும் என்னைக்கவர்ந்தவை..அவரைப்பற்றிய உங்களது இந்த இடுகை அருமை ரேகாராகவன்
ReplyDelete