என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Friday, December 3, 2010

விஷம் ரெடியா?"ஏய் மீனா! கதவை தாழ்ப்பாள் போட்டியா?"


"போட்டுட்டேங்க!"

"பசங்களெல்லாம் தூங்கியாச்சா? எழுந்து வரமாட்டாங்களே?"

"நல்லா அயர்ந்து தூங்கறாங்க, இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டாங்க!"''ஆமா, சாயங்காலமே லெட்டர் எழுதி வைக்கச் சொன்னேனே, எழுதிட்டியா?"

"எழுதி டேபிள் மேலே வச்சிருக்கேங்க."

"சரி,சரி! விஷத்தை வாங்கியாந்து அந்த ஷெல்ப்பில் வச்சிருக்கேன். பார்த்து எடுத்துக்கிட்டு வா! பசங்க காலை மிதிச்சிடப் போறே, அதுங்க எழுந்து கிழுந்து வைக்கப் போவுது!"

"கொண்டாந்துட்டேன்..இந்தாங்க!"

"இப்படிக் கொடு, அந்தத் தட்டில் சோத்தைப் போடு, விஷத்தைக் கலந்துடலாம்."

"இந்தாங்க..சோறு கொஞ்சம் போதுமா, இல்ல நிறைய போடணுமா?"

"கொஞ்சம் போதும். அப்பத்தான் நல்லா வேலை செய்யும். "

"சோத்துல விஷத்தைக் கலந்துட்டேன். இந்தா நீ பாதி எடுத்துக்க, கொஞ்சம் கொஞ்சமா உள்ளே தள்ளு."

"சரிங்க, அப்படியே செய்யறேங்க."

"அப்பாடா! இன்றோடு எல்லாத் தொல்லையும் விட்டது. பொந்துக்குள்ள தள்ளின விஷ சோத்தை தின்னுட்டு எல்லா எலிகளும் வாயைப் பொளந்துகிட்டு செத்துக் கிடக்கப் போவுது பார். நீ எழுதி வச்ச லெட்டரை மறக்காம நாளைக்கு போஸ்ட் பண்ணிடு. எலிக்கு பயந்து சாகும் உன் தங்கச்சி, அதை எல்லாம் விஷம் வெச்சு சாகடிச்சாச்சுன்னு தெரிஞ்சதும் அடுத்த பஸ்சிலேயே புறப்பட்டு வந்துடுவா! என்ன நான்
சொன்னது புரிஞ்சுதா?"

"புரிஞ்சுதுங்க," என்றாள்.
_____________________________________________________________

(30.6.92 தினமலர் கதைமலரில் வெளியான என் சிறுகதை)

6 comments:

 1. அய்யய்யோ தற்கொலை பண்ணிக்க போறாங்களோன்னு பயந்துக்கிட்டே படிச்சா, கொலை இல்ல பண்ணி இருக்காங்க, இரண்டு பேரும் சேர்ந்து…. நல்ல கதை.

  ReplyDelete
 2. 92 -ல் வெளி வந்த கதை .. இன்னும் அதை பத்திரமா வச்சிருக்கீங்களே பெரிய விஷயம் சார்

  ReplyDelete
 3. விஷம் நல்ல விஷமம்

  ReplyDelete
 4. நல்ல கதை. த்ரில்லிங்கா இருந்தது.

  ReplyDelete
 5. கதை அருமைதான் பயத்தையும் பரபரப்பையும் ஒன்றாக இணைத்து செல்கிறது கதை . தினமலரில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 6. கதை நன்றாகத்தான் உள்ளது, தொடருங்கள்.

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "