என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, April 17, 2011

கடப்பா செய்வது எப்படி?


நாகப்பட்டினத்தில் நான் பணி புரிந்த போது பெருமாள் கோயில் எதிரே உள்ள "லக்ஷ்மி கபே"-யில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை காலையிலோ அல்லது மாலையிலோ அங்கே "கடப்பா" என்று ஒன்று போடுவார்கள். இட்லி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இது ஜோராக இருக்கும். மற்ற நாட்களில் வராதவர்கள் கூட அன்று தவறாமல் ஆஜராகி விடுவார்கள். சின்ன வயசில் விழுப்புரத்தில் படித்த போது இதை ருசித்திருக்கிறேன். அதன் பின்பு இங்கேதான் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. யான் பெற்ற சுவையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்காக அதன் செய் முறையை கீழே தந்துள்ளேன்:-

கடப்பா

தேவையான பொருள்கள் :

உருளைக்கிழங்கு : இருநூறு கிராம்
பெரிய வெங்காயம் : முன்னூறு கிராம்
பயத்தம் பருப்பு : நூறு கிராம்
பூண்டு : எட்டு பல்
பச்சை மிளகாய் : ஆறு
தேங்காய் : அரை மூடி
பட்டை : பத்து கிராம்
லவங்கம் : பத்து கிராம்
கசகசா : இருபது கிராம்
பொட்டு கடலை : ஐம்பது கிராம்
மஞ்சள் தூள் : ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் : இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எலுமிச்சம் பழம் : அரை மூடி


செய்முறை:முதலில் பயத்தம் பருப்பையும் உருளைக் கிழங்கையும் வேகவைத்துக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சை மிளகாய்இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வாணலியில் எண்ணை வைத்துக் காய்ந்ததும், 4 பல் பூண்டு போட்டு சிவக்க வறுத்து , பின் பட்டை, இலவங்கம், நறுக்கிய வெங்காயம் என்ற வரிசையில்சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவந்ததும், வேகவைத்த பயத்தம்பருப்பு, 2 கப் தண்ணீர், உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதிக்க ஆரம்பித்ததும், உதிர்த்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, அரைத்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்துஇறக்கவும்.இறக்கிய சூட்டோடு எலுமிச்சம் பழம் 1/2 மூடி பிழிந்து, கொத்தமல்லித் தழையை அதன் மேல் தூவி விடுங்கள். கடப்பா ரெடி. செய்யுங்க , சாப்பிடுங்க ,அசத்துங்க


(இது ஒரு மீள் பதிவு)

23 comments:

  1. படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுதே....விரைவில் செய்து பார்த்து, சாப்பிட்டு விட்டு கமெண்ட்டுகிறேன், சார்...

    ReplyDelete
  2. ஆஹா..கடப்பாவா...சூப்பரோ,சூப்பர்! வாளாடியில் வியாழக்கிழமை போடுவார்கள்..எப்படா, அடுத்த வியாழன் வரும் என்று ஞாபகப் படுத்தி விடும், அந்த கடப்பா...
    கடப்பாவுக்கு நன்றி!!

    ReplyDelete
  3. எங்க ஊர் புதுக்கோட்டை. அங்கேயும் கடப்பா சூப்பரா இருக்கும். செய்முறைக்கு நன்றி. செஞ்சு கொடுத்து அசத்திடறேன்.

    ReplyDelete
  4. மீள் பதிவென்றாலும் சுவையான பகிர்வு. செய்முறையைப் பார்த்து செய்யச் சொல்லிடறேன்... :)

    ReplyDelete
  5. நல்ல இருக்கு முன்பே பார்த்தேன் என்ர்று நினைக்கிறேன்

    கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. நான் நினைச்சேன் ஏதோ கன்னட ஆள் பற்றிய பதிவுன்னு, அங்கு வரும் போது ரசிக்கணும் இதை

    ReplyDelete
  7. செய்து பார்த்துட்டா போச்சு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. எங்கடாப்பா ருசியா ஏதாச்சும் பண்ணக் கிடைக்கும்னு இருந்த எங்களுக்கு உங்கள் கடப்பா நல்ல வரவு!

    ReplyDelete
  9. படிக்கும் போதே ஆசையாக உள்ளது. செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. செய்முறைக்கு நன்றி.

    ReplyDelete
  11. கடப்பா செய்முறைக்கு நன்றி.

    ReplyDelete
  12. ஆஹா...

    திவ்யம்...

    சாப்டு ரொம்ப நாளாச்சு....

    ReplyDelete
  13. கடப்பா சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு போவோம்.. இப்ப அது சாப்பிட்டே ரொம்ப நாளாச்சு.. படிச்சு ஆனந்தப்பட்டேன்

    ReplyDelete
  14. ஆஹா கடப்பா சூப்பர்...

    ReplyDelete
  15. கடப்பா பிரமாதம்.கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிட்டதில்லை.செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. கடப்பாவா? செய்யறதா? அது ஆந்திராவில் உள்ள ஒரு ஊர் இல்லையோன்னு நெனைச்சேன்! :)

    ReplyDelete
  17. கடப்பானு எப்படிப் பேர் வந்தது? செய்முறை படிக்கறப்பவே சுவையா இருக்கு. செய்து பார்த்துடணும். நன்றி.

    ReplyDelete
  18. aaha... enna rusi.. we tasted it longback in aangarai and valady... thankyou for remainding..

    ReplyDelete
  19. 'Kadappa' was also well known in Tiruvarur. During my Board High School days in Tiruvarur, whenever I had a couple of annas in my pocket (which was very rare, though), I used to visit a hotel near VST Hostel (where I was staying)to enjoy this "Kadappa". A diffrent taste, can't get at home.

    ReplyDelete
  20. அருமையான செய்முறை விளக்கம்... நன்றி

    ReplyDelete
  21. வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "