என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, October 21, 2010

பயம்







'தோட்டத்தில் ஓடும்
முயல் குட்டியைப் பிடித்து
முத்தம் கொடுக்கலாமா?'
ஆசையுடன் கேட்கும் குழந்தை.

'கூடாது, அது கடிச்சிடும்!'
பயமுறுத்தும் தாய்.


'பிள்ளையார் எறும்பின்
கிட்டே போகலாமா?'
பயத்துடன் கேட்கும் குழந்தை.

ரொம்பவேதான்
பயமுறுத்தி விட்டோமோ?
படபடப்புடன் வாரியணைத்து
முத்தமிடும் தாய்.

<><><><><><><><><><><><><>

12 comments:

  1. கவிதையும் அதற்கேற்ற படமும் அழகு. ரசித்தேன்.

    ReplyDelete
  2. ஆஹா.. உணர்வுகளின் அற்புதப் பதிவு.

    ReplyDelete
  3. கவிதையா...படமா.. எது அதிக அழகு..
    தலைமுடியை பிய்த்துக் கொண்டு வழுக்கை ஆனது தான் மிச்சம்!! சூப்ப்ர் இரண்டுமே!!!!

    ReplyDelete
  4. அசத்தல் . நல்ல இருக்கிறது ரசனை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. மிக யதார்த்தமான வரிகளுடன் அருமை.

    ReplyDelete
  6. இந்தக் கவிதையின் கிட்டே தாராளமா போகலாம்! கடிக்காது!

    ReplyDelete
  7. அழகு.... எல்லாமே.... ! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வெகு அழகாக இருந்தது.

    ReplyDelete
  9. உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...

    ReplyDelete
  10. vபிஞ்சிலேயே பயம் என்னும் நஞ்சினை விதைத்து , ஒரு வருங்கால சந்ததியின் வளர்ச்சியை பின்னமாக்கிய அந்த தாயை இந்த ஞாலம் மன்னித்திடாது.

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  11. Too much of care to allow her with the hare,
    So much concern may scare her being dare.

    ReplyDelete
  12. வித்தியாசமான கவிதை. நன்று.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "