என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Wednesday, November 10, 2010

வளையாத மரம்கொட்டிய மழையில் குளித்து,
அடித்த புயற் காற்றில்
தலையாற்றிக்
கொண்டிருந்த என்னை,
'தலை விரித்தாடிற்று தென்னை'
என்று செய்தி போடுகிறீர்களே?
என் ரசனையைப் புரிந்துகொள்ள
மறுப்பதென்னே?
கேட்டது தென்னை மரம்.

19 comments:

 1. தென்னையின் வருத்தம் நியாயமானது. உங்கள் கவிதை கருத்தாழமானது.

  ReplyDelete
 2. என்னே உங்கள் கவிதை!

  ReplyDelete
 3. ப்ளாகில் மேலே தற்போது வைத்துள்ள Tagline அருமை!
  **
  சமீபத்திய ஜல் புயலில் தோன்றிய கவிதையோ? Nice

  ReplyDelete
 4. தென்னையின் ரசனையை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறோம்? நியாயமாய் கேட்டிருக்கிறது.

  ReplyDelete
 5. ஆஹா...ரொம்ப நாளாச்சு...ஸார் எழுத்தப் பார்த்து..
  கவிதை அற்புதம்!!

  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.
  http://keerthananjali.blogspot.com/

  ReplyDelete
 6. மறுப்ப"தென்னே?"
  கேட்டது "தென்னை" மரம்

  அழகான வார்த்தை விளையாட்டுடன் கவிதை!

  ReplyDelete
 7. தென்னையின் நியாயமான் கேள்வி தான். ஆழமான் கருத்து .

  ReplyDelete
 8. //என் ரசனையைப் புரிந்துகொள்ள
  மறுப்பதென்னே?
  கேட்டது தென்னை மரம்.//

  அது தானே? சரியான கேள்வி. சபாஷ்...!

  ReplyDelete
 9. ம‌யில் தோகையாய், தென்னை ஓலையை ஒப்பிட்டு, ஓலை/த‌லைவிரித்து என எழுதியிருக்க‌லாம் செய்தியாள‌ர்.

  ReplyDelete
 10. கவி நயமும் அழகான கற்பனையும் சங்கமித்த‌ மிகவும் அருமையான கவிதை!

  ReplyDelete
 11. நல்ல கவிதை சார்.. ( ஒரு தகவல் கேள்விப்பட்டேன்... காற்றில் இப்படி தலை துவட்டும் தென்னையிலிருந்து உதிரும் மட்டைத் தேங்காய் ஆள் தலை மீது விழுந்து, பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவைக் காண அனுப்பியதாக சரித்திரமோ, பூகோளமோ கிடையாதாமே... அப்படியா?)

  ReplyDelete
 12. ஆமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் ஆறு தென்னை மரங்கள் உள்ளன. இது வரை ஒருமுறை கூட மட்டையோ தேங்காயோ எங்கள் மீது விழவில்லை. ஒருமுறை அதன் கீழே உட்கார்ந்து பாத்தியை சரி செய்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு அடி தள்ளி ஒரு தேங்காய் விழுந்ததை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

  ReplyDelete
 13. மிகவும் அழகான கவிதை. தென்னன்கீற்றிநூடே நிலவு பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

  ReplyDelete
 14. மிகவும் அழகான கவிதை. தென்னன்கீற்றிநூடே நிலவு பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

  ReplyDelete
 15. வித்தியாசமான பார்வை

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "