என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 5, 2010

திட்டு

"ஏங்க, இப்படி திட்டு வாங்கிட்டு அவனிடம் கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு உங்களுக்குத் தலையெழுத்தா என்ன?"

அரை மணிக்கு முன் நடந்ததுக்குத்தான் அப்பாவிடம் அம்மா கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

நடந்தது இதுதான்.

இரவுக்குள் முடித்து ஆபீஸுக்கு அனுப்ப வேண்டிய வேலையை வீட்டிலிருந்தவாறே செய்து கொண்டிருந்தேன். ரிடையர் ஆன அப்பா கதை அடிக்கிறேன் பேர்வழின்னு பக்கத்தில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் அது எப்படி, இது எப்படின்னு சந்தேகம் கேட்டுத் தொந்திரவு கொடுத்தார். அவரிடம் எரிந்து விழுந்தேன்.

"அவனோட சின்ன வயசிலே அப்படி இப்படின்னு சந்தேகம் கேட்கறச்சே சலிக்காம எத்தனையோ விஷயம் சொல்லிக் கொடுத்திருக்கேன். இப்ப எனக்கு வயசாகிடுச்சுல்ல, ஞாபகசக்தி குறைஞ்சிகிட்டு வருது, விடு கமலா"ன்னு அம்மாவிடம் அப்பா சொல்லவும் இந்த வயசிலும் கத்துக்கறதில் ஆர்வத்தோடு இருக்கற அப்பாவிடம் இனி இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று மனசுக்கு கட்டளையிட்டேன்.

(15.4.2009 " குமுதம் " இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)

12 comments:

  1. திட்டு நல்லா இருந்தது.

    ReplyDelete
  2. கதை ரொம்ப நெகிழ்வா இருக்கு சார்...

    இன்னும் நிறைய போஸ்ட் பண்ணுங்க....

    ReplyDelete
  3. மிகவும் அருமையான கதை என்னை முழுவதும் கவர செய்தது . பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  4. அருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்...திட்டு என்றால் எல்லாருக்கும் சிறுவயது ஞாபகம் வரும் எனக்கும் அப்படி தான் வந்தது. சிறுவயதுக்கு கொண்டுச் சென்றதுக்கு நன்றி...

    ReplyDelete
  5. மிக நல்ல பதிவு

    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete
  6. நல்ல கதை...இன்னும் நிறைய எழுதுங்கள்...வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  7. அப்பாக்களே அப்படித்தான்...அதீத பாசம்...எதையும் வெளிக்காட்டவும் தெரியாது. வெளிபடுத்தும்போது நம்மால் கண்ணீரை அடக்கவும் முடியாது!! நல்ல கதை, கரு! :)

    ReplyDelete
  8. நல்லாயிருக்கு... இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாமே......

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "