என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, October 12, 2010

இட மாற்றம் // இன்னொரு பக்கம்


1.இட மாற்றம்


எப்போதுமே

இடம் மாற்றிப்

படுத்தால் அவனுக்கு

வராத தூக்கம்

வந்தது அன்று

அவசர சிகிச்சைக்காக

மருத்துவமனையில்

சேர்த்த அரை மணியில்

நிரந்தரமாக.


<><><><><><><><><><><><><><><><>


2. இன்னொரு பக்கம்


வேட்டியின் இரு பக்கங்களையும்

மாற்றி மாற்றிக் கட்டி

அழுக்காகிய பின்

மனசுக்குள் அழுதான்.

'மூன்றாவது பக்கமும்

இருந்திருக்கக் கூடாதா,

சோப்பு வாங்க காசு

இல்லையே?


--ரேகா ராகவன்.

<><><><><><><><><><><><><><><>

9 comments:

  1. முதல் கவிதையில் ஒரு ஷாக்.. இரண்டாவது கவிதையில் ஒரு ஹியூமர் டச்
    அருமை!

    ReplyDelete
  2. இரண்டு கவிதைகளுமே ரசனைக்குரியவை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. முதல் கவிதை சுருக். ரெண்டாவது ஹி ஹி. வேஷ்டி ரெண்டு பக்கம் மாத்தி கட்டினா இன்னும் ரெண்டு வாட்டி கரை மாத்தி ரெண்டு வாட்டி கட்டலாமே=))

    ReplyDelete
  4. அருமையாக எழுதி இருக்கீங்க.....

    ReplyDelete
  5. மகிழ்ச்சியும்,துக்கமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது தங்கள் இரு கவிதைகளும்!!!

    ReplyDelete
  6. விருந்து மயக்கத்தில் எங்களை மறந்து இருந்தீரோ என்ற எங்களின் ஏக்கத்தை போக்கியது இரு முத்தான கவிதைகள். இன்றைய காலகட்டத்தில், மருத்துவமனை செல்வது முடிந்தவரை தவிர்கப்படவேண்டியது ஒன்று என்று முதல் கவிதையிலும், கட்டிய துணியை துவைத்து உடுக்க மாற்று உடையில்லாமல் தவிக்கும் எண்ணற்ற மக்களுக்கு உதவிட, ஆண்டவன் நமக்கு அளித்திட்ட செல்வத்தின் ஒருபகுதியை உதவிட வேண்டுகோள் வைக்கும் பாங்கு இரண்டாவது கவிதையிலும் தெரிவித்த அழகு என்னை வியப்பில் ஆழ்த்தியது! வாழ்க, வளர்க.

    மந்தவெளி நடராசன்.

    ReplyDelete
  7. சுவையான கவிதைகள்

    ReplyDelete
  8. பயம் குறித்த கவிதை அருமையானது. நல்ல காட்சியைப் மனதில் விரித்த கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "