தினமும் வெளியே புறப்படும்போது தெரு முனை பிள்ளையார் கோயில் முன் காரை நிறுத்தி இறங்கி தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். "நீயும் வாயேண்டா! என்று காரிலிருந்த என் நண்பன் கார்த்திக்கை கூப்பிட்டேன். அவனோ "இல்லடா நீ போயிட்டு வா ! " என்றான்.
தரிசனம் முடித்து மீண்டும் காரை எடுத்தேன். பாதி வழி போகவில்லை. "நிறுத்து நிறுத்து " என்றான். என்ன ஏது என்று பார்த்தால் நடைபாதையிலிருந்த கிளி ஜோஸ்யரிடம் போய் உட்கார்ந்திருந்தான்.
மனைவி, மகன், மகள்னு ஒவ்வொருத்தரா சொல்லி கடைசியில் அவன் பெயரையும் சொல்லி ஜோஸ்யம் கேட்டுவிட்டுத்தான் காருக்குத் திரும்பினான்.
எனக்கு பொறுக்கவில்லை. "ஏண்டா கைரேகை, நியூமராலஜி, வாஸ்துன்னு என்னவெல்லாமோ இருக்குதே! அதையெல்லாம் விட்டுட்டு போயும் போயும் கிளி ஜோஸ்யம் பார்க்கறயே! "என்று கேட்டேன்.
" போடா எங்க நாலு பேருக்குமான பலன்களை வரிசையா சொல்ல சீட்டை எடுக்கறதுக்காக அந்த ஜோஸ்யக்காரன் கிளியை இருபது நிமிஷம் வெளியே சுதந்திரமா இருக்க விட்டானில்லே" அதுக்காகத்தாண்டா என்றான்.
நண்பர்கள் பட்டியலில் அவன் மிகவும் உயர்ந்தவனாக தெரிந்தான்.
நறுக்கென்று ஒரு நல்ல சிறுகதை!
ReplyDeleteஅதாஞ்செரி:)
ReplyDelete:)
ReplyDeleteகருத்துள்ள கச்சிதமான கதை!
ReplyDeleteபடிச்ச உடனே மனசு உங்க பிளாக்ல மாட்டிகிச்சு!
ReplyDeleteஇதை ஏற்கனவே படித்த மாதிரி இருக்கிறது...
ReplyDeleteஎனிவே... வாழ்த்துகள்....
கவிதைகளிக் ஹைக்கு வகை என கேள்விப் பட்டிருக்கிறேன்.
ReplyDeleteஅதென்ன கதையில் ஒரு ஹைக்கு எழுதி கலக்கி விட்டீர்களே.
பிரமாதம் நண்பரே....
என்றாலும் வெறும் சுதந்திர காற்றும் ஒரு இரண்டு நெல் மணிகளும் பெற்று தருவதால் கிளி புண்ணியம் கிடைக்குமா.... ம்... டவுட்டுதாங்கோ
Nice story with a powerful message.really great
ReplyDeleteகிளிக்கு கொஞ்ச நேரம் பெயிலில்
ReplyDeleteவெளிவர பணம் கட்டியதற்கு,
கிளி நல்ல சீட்டு எடுத்திச்சா?
ஒரு நல்ல சிறுகதை!
ReplyDelete