என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, April 30, 2010

பாராட்டு/ பசி/ இருவர்/வலை




பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம். முதலில் பதிவுலகத்துக்குள் " ரேகா ராகவன் " என்ற இந்த வலைப்பூவில்தான் என் பயணத்தை தொடங்கினேன். அதன் பின்னர் பத்திரிக்கைகளில் வெளியான என் சிறுகதைகளுக்காகவும் வலைப்பூவுக்கென வடிவமைத்து எழுதும் சிறுகதைகளை வெளியிடவும் "அன்பே சிவம்" என்ற வலைப்பூவையும் தொடங்கி என்னால் இயன்ற வரையில் நல்ல கருத்துக்களை சொல்ல ஓரளவுக்கு முயன்று வருகிறேன். அந்த வகையில் இரு வலைப்பூக்களிலும் இதுவரை 49 பதிவுகளை இட்டிருக்கிறேன். இது எனது 50-வது பதிவு. உங்களின் நல் ஆதரவோடு மேலும் பல நல்ல பதிவுகளை எதிர் காலத்தில் தர விழைகிறேன்.



1. பாராட்டு

வெற்றி பெற்ற சினிமாவின்
இயக்குனருக்கு பாராட்டு விழா.
மூலக் கதையை எழுதியவன்
சோகத்தோடு மூலையில்.

2. பசி

பொம்மைக் குழந்தைக்கு
பால் கொடுப்பது போல
நடித்துக்கொண்டிருந்தது
பசியோடிருந்த குழந்தை.

3 . இருவர்

பெண் பார்த்து நிச்சயித்த பின்பு
அவனுக்கு ஏற்பட்டது தவிப்பு
அவளுக்குள் ஏற்பட்டது குறுகுறுப்பு.

4. வலை

திருடனை வலை வீசி
தேடினது போலீஸ்
கடைசியில் அகப்பட்டான்
ஒரு அப்பாவி.



கவிதை எழுதும் கலைஞன் பெருமைக்கு உரியவன் என்றால், ஒரு நிலத்தை உழுபவனும் கவிஞன்தான்!

21 comments:

  1. நான் தான் முதல்வதா? மணிக்கவிதைகள் அழகாய் இரு க்கிறது .மேலும் பலநூறு படைப்புக்கள் தர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. ////பெண் பார்த்து நிச்சயித்த பின்பு
    அவனுக்கு ஏற்பட்டது தவிப்பு
    அவளுக்குள் ஏற்பட்டது குறுகுறுப்பு.///

    ....... superb!
    Good ones!

    ReplyDelete
  3. கவிதையோ அல்லது ஒருபக்க கதையோ எதுவாக இருந்தாலும் மக்களின் நலனுக்காக எழுதி , அவர்தம் உள்ளங்களில் அவை சென்றடையும்போது ஒரு படைப்பாளி வெற்றி அடைகிறான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
    ஐம்பதை கடந்த நீங்கள் (குறும் படைப்பில்) விரைவில் இலக்கு ஐநூறையும் தாண்ட வாழ்த்துகிறேன்.


    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  4. கவிதையோ அல்லது ஒருபக்க கதையோ எதுவாக இருந்தாலும் மக்களின் நலனுக்காக எழுதி , அவர்தம் உள்ளங்களில் அவை சென்றடையும்போது ஒரு படைப்பாளி வெற்றி அடைகிறான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
    ஐம்பதை கடந்த நீங்கள் (குறும் படைப்பில்) விரைவில் இலக்கு ஐநூறையும் தாண்ட வாழ்த்துகிறேன்.


    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  5. நான்கு கவிதைகளும் "நச்"! பாராட்டுக்கள்! மென்மேலும் படைப்புக்கள் தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சார். படைப்புகள் எழுதுவது மட்டுமல்லாது வெங்கட், நான் போன்ற பலரை எழுத ஊக்குவிக்கிறீர்கள். மிக்க நன்றி. அமெரிக்கா பயணம் பற்றி ஒரு கட்டுரை (தொடர்) எழுதலாமே?

    ReplyDelete
  7. அட, அதற்குள் ஐம்பதா?
    நல்ல வேகம்!
    நல்லவே COME!

    --கே.பி.ஜனா

    ReplyDelete
  8. முத்தான கவிதைகள். ஐம்பதாவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள். மேலும் பல நல்ல பதிவுகள் தருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  9. வாழ்த்துகள்:). சத்தான கவிதைகளும் கூட

    ReplyDelete
  10. 50 லும் ஆசை வரும்.. 500 கொடுத்தாலும் ஆசை வரும்.. உங்கள் எழுத்தில்.. கவிதைகள் அருமை..

    ReplyDelete
  11. அருமை கவிதைகள். நன்றி பகிர்வுக்கு. வாழ்த்துக்கள் ஐம்பதிற்கு.

    ReplyDelete
  12. SUPER

    visit my blog
    www.vaalpaiyyan.blogspot.com

    ReplyDelete
  13. உங்கள் நச் கவிதையின் பசையான வரிகள் படிப்பவரை இழுத்தணைத்து கட்டி கொள்ளும், அருமையான கருத்தினால்...!!!!!!

    ReplyDelete
  14. அன்புள்ள..ரேகா ராகவன்...

    பசி கவிதை அழகான காட்சிப்படிமம். அது மட்டுமல்ல நெருடிய கவிதை. ஆழம்.அழகு.
    அன்புடன் உறரணி.

    ReplyDelete
  15. பொழுது போன‌தும், மாத‌ முத‌ல்வார‌ம்
    வீட்டுக்கு வ‌ந்து குளிய‌ல் போட்டுட்டு,
    நம்ம‌ ப‌ச‌ங்க‌ளோட‌, டீக்க‌டையில‌,
    சூட‌ வ‌டையும், டீயும் அடிச்சிட்டு
    சிக‌ர‌ட் இழ்த்துக்கிட்டு பேசிக்கிற‌ சிநேக‌ம்
    நெருக்க‌ம் தெரியுது எழுத்தில‌யே.

    ReplyDelete
  16. உண்மையைச் சொல்லும் அழுத்தமான கவிதைகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. //பொம்மைக் குழந்தைக்கு
    பால் கொடுப்பது போல
    நடித்துக்கொண்டிருந்தது
    பசியோடிருந்த குழந்தை.//

    மிக அருமை.

    ReplyDelete
  18. மதிப்பிற்குரிய அய்யா திரு, ராகவன் அவர்களுக்கு வணக்கங்கள் . சின்னச்சின்ன கவிதைகளில் எத்தனை எத்தனை முரண்பாட்டுடமை ...

    பேசிய வார்த்தைகளை விட ...
    மெளனம் அடைகாக்கும் வார்த்தைகளின் வலிமை அதிகம் .


    ” பெண் பார்த்து நிச்சயித்த பின்பு
    அவனுக்கு ஏற்பட்டது தவிப்பு
    அவளுக்குள் ஏற்பட்டது குறுகுறுப்பு. ”



    முகத்திரை கிழியுங்கள் . நன்றி

    தொடர்புக்கு வித்திட்ட ஆர்.ஆர்.ஆருக்கு நன்றிகள்..

    ReplyDelete
  19. கையக் கொடுங்க சார். நானும் நாலு நாள் முன்னாடிதான் ஐம்பதாவது பதிவு போட்டேன்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "