என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, April 10, 2010

யார் அழகு?




கபாலீஸ்வரர் கோவில்.

பிரதோஷ பூஜை தரிசித்து கோயில் பிரகாரத்தை மஞ்சள் நிற சுடிதாரில் கமலாவும்
ஆரஞ்சு சுடிதாரில் வைதேகியும் வலம் வந்துகொண்டிருந்தனர் .

அதற்கு ஒரு காரணம் இருந்தது.

முதல் நாள் தான் முடிந்திருந்தன கமலாவின் காலேஜ் தேர்வுகள். அரியர்ஸ் இல்லாமல் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறணும் என்று வேண்டிக் கொள்வதற்காகவும் இருவரில் யார் அழகுன்னு வைதேகிக்கு புரிய வைக்கவும் பக்கத்து வீட்டு வைதேகியையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தாள் அவள்.
இரண்டாவது சுற்று வந்துகொண்டிருக்கும்போதுதான் முன்னே சென்று கொண்டிருந்த மாமி அவள் பெண்ணிடம் " பின்னாடி மஞ்சள் சுடிதாரில் வர்றவ அழகா இருக்கா இல்லே?" என்று கேட்க, அவளுடைய பெண் திரும்பி பார்த்துவிட்டு " போம்மா உனக்கு ரசனையே இல்லே. அவளை விட அவள் பக்கத்தில் ஆரஞ்சு சுடிதாரில் வர்ற பொண்ணுதாம்மா நகை எதுவும் போட்டுக்காமலேயே களையா கண்ணுக்கு லட்சணமா இருக்கா " என்றாள்.

" பார்த்தியாடி! நான் ஏழை, போட்டுக்க நகைநட்டுன்னு ஒண்ணும் இல்லே, அதான் யாருமே வராத நேரம் பார்த்து கோவிலுக்கு போயிட்டு வருவேன்னியே? நகைக்கடையா வந்திருக்கிற என்னை விட நீ தான் அழகுன்னு சொன்னதை இப்ப உன் காதால கேட்டே இல்ல? உன் தாழ்வு மனப்பான்மையை இனிமேலாவது மூட்டை கட்டி வெச்சுட்டு வாழக் கத்துக்கோ! " என்று கமலா கூறவும் ...

மூன்றாவது சுற்றை சந்தோஷமாக வலம் வந்தாள் வைதேகி.


8 comments:

  1. உண்மை அழகைச் சொல்லும் உங்க ஸ்டைல் அழகு எப்பவும்..

    ReplyDelete
  2. உடல் முழுதும் அணியும் பொன்னகையை விட.... இதழோரம் சிந்தும் சிறு புன்னகைக்கே மதிப்பு அதிகம் என்று “நச்”சென்று உணர்த்திய சிறுகதை...

    நன்றாக இருக்கு ராகவன் சார்...

    ReplyDelete
  3. சுருக்கமாக ஒரு நறுக் கதை! :-)

    ReplyDelete
  4. அழகான கதை என்பது இது தானோ?

    ReplyDelete
  5. ரொம்ப நல்லாருக்கு:)

    ReplyDelete
  6. உங்க கதை அழகு என்பதை அழகா புரிய வைச்சு இருக்கீங்க!

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  7. பிர‌தோச‌த்தில் ச‌ந்ந‌தியை `இட‌ம்` தான்
    வ‌ருவார்க‌ள் என‌க் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.
    இதில் மூன்றாவ‌து வ‌ல‌ம் ...

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "