என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Friday, January 22, 2010

செல்லமே!
கிணற்றடியில் துணிகளைத் துவைத்துக்கொண்டு இருந்தாள் திலகா, அந்த வீட்டுச் சின்ன மருமகள். பக்கத்தில், தேய்க்க வேண்டிய பாத்திரங்கள் நிறைய!

கைக்கெட்டுகிற தூரத்தில் வாஷிங் மிஷின்! அது மட்டுமா? ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், கலர் டி.வி-னு எல்லாம்தான் இருக்கு. ஆனால் எல்லாம் பணக்காரப் பெரிய மருமகள் பானு கொண்டு வந்ததாச்சே! எப்படி உரிமையோடு எடுத்து உபயோகிக்கமுடியும்?

அதுதான், இந்த ஒண்ணரை வருஷமாகத் துணி துவைக்கற கல்லோடும் அம்மிக்கல்லோடும் அல்லாடிக்கொண்டிருக்கிறாள் திலகா.

மறுநாள் காலை... விடாமல் தன் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, குளித்துக் கொண்டிருந்த திலகா அவசர அவசரமாகத் துணிகளைச் சுற்றிக்கொண்டு ஓடிவந்தாள்.

குழந்தை அலறிக்கொண்டிருக்க, பக்கத்தில் சாவகாசமாக அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.

"இப்படிப் பச்சைக் குழந்தையை யாராவது அலற விடுவாங்களா? கொஞ்சம் குழந்தையைத் தூக்கிச் சமாதானப்படுத்தக்கூடாதா?" ..பொருமலுடன் கேட்டாள் திலகா.

"எடுத்துக் கொஞ்சி, சமாதானப்படுத்தி இருப்பேன் திலகா. ஆனா, குழந்தை இல்லாத நான், உன் குழந்தையைத் தொட்டுத் தூக்கினா உனக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ! நீதான், நான் கொண்டு வந்த எதையுமே தொடுறது இல்லையே!, சரி, இப்ப நீயே சொல்லிட்ட இல்ல... இனிமே எனக்கென்ன தயக்கம்!" என்ற பானு, "என் செல்லமே! அழாதடி! பெரியம்மா இருக்கேன்டி உனக்கு!" என்றபடி குழந்தையை வாரியணைத்து முத்த மழையால் குளிப்பாட்டினாள்.

(5.9.04 "ஆனந்த விகடன்" இதழில் 14 சிறுகதைகளின் தலைப்பை அப்போது வெளியான படங்களின் பெயர்களில் வெளியிட்டு அசத்தியதில் பிரசுரமான என் ஒரு பக்கக் கதை)


பெருமையோடு இல்லாமல் பொறுமையோடு இருப்பவளே பெண்

11 comments:

 1. என் செல்லமே.. ஒரு பக்கக் கதையில அசத்தறீங்க..

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்!
  மிகவும் அருமையான கதை...

  ReplyDelete
 3. மெல்ல மனம் தொடும் கதை...

  ReplyDelete
 4. மெல்ல மனம் தொடும் கதை...

  ReplyDelete
 5. அருமையான கதை...மனதை தொட்டது...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. மனதை தென்றலென வருடிய ஒரு ஒரு பக்க கதை...

  ரொம்ப நல்லா இருக்கு சார்...

  ReplyDelete
 7. ஒவ்வொரு கதையும் மனதைத் தொடுகிறதுhttp://swthiumkavithaium.blogspot.com/

  ReplyDelete
 8. உங்களைத் தொடர்கிறேன்

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "