என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, January 26, 2010

பாசம்.


பாசம்.


கூட்டில் குஞ்சுகளை

பொத்திப் பாதுகாக்கும்

தாய்ப்பறவை நெஞ்சிலிருப்பதும்

வீட்டில் குழந்தைகளை

போற்றிப் பாதுகாக்கும்

தாயின் நெஞ்சிலிருப்பதும்

ஒன்றே...


<> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>



'ம்'


பார்த்தேன் படித்தேன் செய்தேன்.

ருசித்தான் என் நண்பன்.

சமையல் கலை

புத்தகத்தைப் பார்த்து நான் செய்த

உப்புமாவுக்கு அவன் அடித்த கமெண்ட்

'ஒரே உப்பும்மா!'.


<> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>



மீட்சி

எல்லா சேனலுக்குள்ளும் போய் பார்த்தாயிற்று.

அதே மாவை

அரைத்து அரைத்து...ஒரே போர்!

தினசரி,வார,மாத

இதழ்களையும் புரட்டியாச்சு.

கொலை, கொள்ளை, மோசடி,

ஊழல், கற்பழிப்பு, அரசியல் தந்திரம்..

ஒரே எரிச்சல்!

அத்தனையும் கடாசிவிட்டு

படுக்கையில் விழுந்தேன்

ரேடியோவுடன்

இணைத்த ஹெட் போனை

காதில் மாட்டிக் கொண்டதும்

தேவாமிர்தமாக இசை

காதுக்குள் நுழைய

ஆஹா... இதுவல்லவோ சொர்க்கம்!

<> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>

8 comments:

  1. மூணாவது சூப்பர்.

    ReplyDelete
  2. இப்பத்தான் தெரியுது ஏன் உப்புன்னு..

    ReplyDelete
  3. உப்புமா நல்ல சொல்லாடல் சார்...!

    ReplyDelete
  4. கவிதையில் இனிப்பு..
    ஹெட் போனை மாட்டினா சொர்க்கமா?! தெரியாம போச்சே..

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. தேவாமிர்த இசை உங்கள் காதுக்குள் நுழைய வேண்டுமானால், அதையும் சரியாக நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் ஸ்வாமி! :)

    ReplyDelete
  7. கடைசியில் அந்த ரேடியோ இசையே சொர்க்கமாகத் தோன்றுவது அழகான யதார்த்தம்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "