என்னுடைய ஒரு பக்கக் கதைகளை படித்துவிட்டு பதிவர்கள் சிலர் இந்த ஒரு பக்கக் கதைகளை நீங்க எப்படி சார் எழுதறீங்க? நான் எப்படி எழுதினாலும் மூணு நாலு பக்கக்களுக்கு குறையாம வருதே! அந்த வித்தையை கத்துக் கொடுத்தீங்கன்னா நாங்களும் எழுதுவோம்ல என்று மெயில் மூலமாகவும் சாட் பண்ணும்போதும் என்னிடம் கேட்கிறாங்க. என்னுடைய முதல் ஒரு பக்கக் கதை "இதயம் பேசுகிறது" இதழில் வெளியானது. அதன் பின்னர் பல ஒரு பக்கக் கதைகள் எழுதி வெளியானாலும் எனக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. அப்போதெல்லாம் புதுவை சந்திரஹரி, கே.பி.ஜனார்த்தனன், சுகந்தி, பாமா கோபாலன், வேதா கோபாலன், அமுதகுமார் மற்றும் மறைந்த எழுத்தாளர் நிவேதா ஆகியோரின் ஒரு பக்கக் கதைகள் வார இதழ்களில் அடிக்கடி பிரசுரமாகும். அவைகளைப் படிக்கும் போதெல்லாம் நாமும் இவர்களைப் போல ஒரு பக்கக் கதைகளை எழுதி பெயர் வாங்கணும் என்று நினைப்பேன். அதற்காக அவர்களுடன் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு அவர்களிடம் எப்படி ஒரு பக்கக் கதைகளை எழுதுவது என்று கேட்பேன். அவர்களும் அன்புடன் சொல்லித் தருவார்கள். அப்படி அவர்கள் சொன்னதை உள்வாங்கி என்னுடைய கதை எழுதும் திறமையை மேம்படுத்திக் கொண்டு நிறைய ஒரு பக்கக் கதைகளையும் சற்றே பெரிய கதைகளையும் எழுதி வார இதழ்களில் பிரசுரம் கண்டிருக்கிறேன். மேலும் என்னுடைய எழுத்தை மேம்படுத்தியதில் புதுவை சந்திரஹரி, சத்யராஜ்குமார்,அமுதகுமார், கே.பி.ஜனார்த்தனன், ரிஷபன், ஆகியோரின் பங்கு மகத்தானது. அவர்களுக்கெல்லாம் இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய நன்றியை காணிக்கையாக்குகிறேன். மேலும் கதைகள் எழுதுவதற்காக இவர்கள் எனக்கு சொல்லித்தந்தவைகளை தொகுத்து கீழே கொடுத்துள்ளேன்.
( 1 ) பெரிய தீம்களை எடுத்துக்கொள்ளக்கூடாது.
( 1 ) பெரிய தீம்களை எடுத்துக்கொள்ளக்கூடாது.
( 2) நடை மிக மிக எளிமையாக ஓட வேண்டும் .
( 3 ) தேவையில்லாத வர்ணனைகள் கூடாது.
( 4 ) பட் பட்என்று சுருக்கமாக சொல்லிக்கொண்டே போக வேண்டும். அது போகப் போக கை வரும்.
( 5 ) எடுத்துக்கொண்ட பிரச்னையை முதல் ஐந்து வரிகளுக்குள் சொல்லிவிட வேண்டும்.
( 6 ) பிரச்சினையினால் ஏற்ப்பட்ட/தீர்க்க முயல்கிற நாயகன்/நாயகியின் நடவடிக்கைகளை கூறிக்கொண்டே போகவேண்டும்.
( 7 ) முடிவு நாயகன்/நாயகியே எதிர்பாராததாக அமைக்க வேண்டும். அதாவது அதிசயமான ஒரு முடிவு சொல்லிவிடவேண்டும் என்கிற ஆர்வம் கூடாது. (நிறைய பேர் செய்கிற தவறு இது). புன் சிரிப்பை ஏற்படுத்துகிற முடிவு ஒன்று இருந்தாலே போதும்.
( 8 ) வள வள என்று எழுதக்கூடாது.
( 9 ) எழுதிய பின் தேவையில்லாத வரிகளை துணிந்து அடித்துவிட வேண்டும்.
(10 ) பல வார்த்தைகளில் சொன்னதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முயன்று மாற்ற வேண்டும்.
(11 ) ஒரு கதைக்கு தோன்றுகிற பல முடிவுகளை எழுதுங்கள்.
(12 ) அவை அனைத்தையும் விட்டுவிட்டு புதிய ஒரு முடிவை (சில நாட்கள் ஆனாலும் பரவாயில்லை) துணிந்து எழுதுங்கள்.
ரடானின் கிரியேட்டிவ் கார்னரில்
இன்றைய டாப் டென் பிளாக்ஸில்
இந்த பதிவு
இன்றைய டாப் டென் பிளாக்ஸில்
இந்த பதிவு
.
மிகவும் உபயோகமான ஒரு பதிவு. என்னைப் போன்ற மலரும் பதிவர்களுக்கு உதவும். மிக்க நன்றி.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
புது தில்லி
thank u reka
ReplyDelete- puduvai chandrahari
Thank u reka - puduvai chandrahari
ReplyDeleteநல்ல வழிகாட்டி. பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி அய்யா...
ReplyDeleteஉங்கள் திறமை.. உழைப்பு.. நீங்கள் இப்போது எட்டியுள்ள உயரம்.. எனக்கும் அளித்த கௌரவத்திற்கு மிகவும் நன்றி..
ReplyDeleteஉழைத்தீர்கள். உயர்ந்தீர்கள். உதவியது ஒரு வாய்ப்பே எனக்கு. மகிழ்ச்சி. உபயோகமான பதிவு இன்னும் பலருக்கு.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா,,,,பொங்கல் வாழ்த்துகள்............
ReplyDeleteமிகவும் உபயோகமான ஒரு பதிவு. என்னைப் போன்ற பதிவர்களுக்கு உதவும். மிக்க நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி சார்...!
ReplyDeleteநல்ல பாயிண்டுகள். மிகவும் உதவியாக இருக்கும்.
ReplyDeleteநல்ல கருத்துக்கள். அனைவருக்கும் பயன் பட கூடியவை. நன்றி
ReplyDeleteமிகவும் பயனுள்ள குறிப்புக்கள்...உங்களின் பகிர்வுக்கு என் நன்றிகளும்...தை திருநாள் வாழ்த்துக்களும்...
ReplyDeleteஐயா,
ReplyDeleteநீண்ட இடைவேளைக்கு பிறகு (after 2 months) உங்கள் பதிவை பார்க்கிறேன். மிகவும் உன்னதமான பதிவு. என் தமிழ் உரைநடை மிகவும் கீழ்தரமனதாக நான் நினைப்பதால், எழுதுவதற்கு எனக்கு என்றுமே தைரியம் இல்லை.
அதையும் மீறி எழுதநினைபவர்களுக்கு உங்கள் பதிவு ஒரு வரபிரசாதம். ஆனால் நான் எழுதுவதாக இல்லை.
தொடரட்டும் உங்கள் தமிழ் பணி. உங்கள் உடல் ஆரோகியதிற்கு ஆண்டவனை பராதிபர்த்திபதர்க்கு அல்லாது வேறொன்றும் செய்ய இயலாத,
பாலா,
sbala2k1@yahoo.com
+2347089996984
ரேகா அங்கிள்! நீங்க என்னதான் டிப்ஸ் கொடுத்தாலும், கதை எழுதுறதுங்கிறது நீச்சலடிக்கிற மாதிரி. அவங்கவங்களே இறங்கிப் பழகினாத்தான் முடியும். கத்துக்கொடுத்தெல்லாம் வராது. இருந்தாலும் நல்ல பகிர்வு!
ReplyDelete"அந்த, அந்த காலகட்டங்களில் வாழும் ரசிகர்களின் விருப்பு, வெறுப்புகளை மனதில் கொண்டு கதை எழுதினால் மேலும் சிறப்பாக இருக்கும் " என்பதையும் சேர்த்துக்கொண்டால் நலமாக இருக்கும் ,
ReplyDeleteமந்தவெளி நடராஜன்.
தேவையான செய்திகளைத் தந்தமைக்கு நன்றி
ReplyDelete