என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 11, 2010

இது, அது, எது?

தமிழ்ப் பேராசிரியை புனிதாவிடம் பத்திரிகையை நீட்டி, "மேடம் நீங்க அவசியம் வரணும்" என்றேன்.

"லவ் மேரேஜா?அரேன்ஜ்டா?" என்று கேட்டவாறே வாங்கிக்கொண்டார்.

பல்வேறு துறை பேராசிரியைகள் சுற்றி உட்கார்ந்திருக்க அவர் 'சடார்' என்று அப்படிக் கேட்கவும் எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது.

"காலம் மாறிக்கிட்டே இருக்கு, இப்ப லவ்தானே பெஸ்ட் சாய்ஸ் ஆனந்தி?" கணிதப் பேராசிரியை கனகா சிரித்துக் கொண்டே கேட்டார்.

"இல்ல மேடம், 'பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம்தான்' என்ற அணியில் நான் பேசுகிறேன்" என்றேன்.

"காதல் திருமணமா? பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா? எது உயர்ந்தது?" எங்கள் காலேஜ் ஆண்டு விழாவில் நடைபெறப் போகும் பட்டிமன்றத்துக்கு, மாணவியர் தலைவியான நான் பத்திரிகையை ஒவ்வொருவரிடமும் நேரில் கொடுத்து அழைத்துக்கொண்டிருந்தேன்.

" 9.1.05 "கல்கி" இதழில் வெளியான என் போஸ்ட் கார்டு கதை "

இனிய பொங்கல் வாழ்த்துகள்

8 comments:

  1. கதை நல்லா இருக்கு.....

    ஊகிக்க முடியாத முடிவு....

    ReplyDelete
  2. நல்ல அரேஞ்ச் பண்ணியிருக்கீங்க கதையை!

    ReplyDelete
  3. நான் லவ் கட்சி! உங்க எழுத்தை..

    ReplyDelete
  4. சின்ன கதைக்குள் சுவாரஸ்யமான ட்விஸ்டு. :-)

    ReplyDelete
  5. "இக்கரைக்கு , அக்கரை பச்சை" , இது தெரியாதா, பகவானே உமக்கு?"

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  6. இன்று தான் படித்தேன். கதை அருமை.

    ReplyDelete
  7. நல்ல ட்விஸ்ட்

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "