நாகப்பட்டினத்தில் நான் பணி புரிந்த போது பெருமாள் கோயில் எதிரே உள்ள "லக்ஷ்மி கபே"-யில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை காலையிலோ அல்லது மாலையிலோ அங்கே "கடப்பா" என்று ஒன்று போடுவார்கள். இட்லி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இது ஜோராக இருக்கும். மற்ற நாட்களில் வராதவர்கள் கூட அன்று தவறாமல் ஆஜராகி விடுவார்கள். சின்ன வயசில் விழுப்புரத்தில் படித்த போது இதை ருசித்திருக்கிறேன். அதன் பின்பு இங்கேதான் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. யான் பெற்ற சுவையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்காக அதன் செய் முறையை கீழே தந்துள்ளேன்:-
கடப்பா
தேவையான பொருள்கள் :
உருளைக்கிழங்கு : இருநூறு கிராம்
பெரிய வெங்காயம் : முன்னூறு கிராம்
பயத்தம் பருப்பு : நூறு கிராம்
பூண்டு : எட்டு பல்
பச்சை மிளகாய் : ஆறு
தேங்காய் : அரை மூடி
பட்டை : பத்து கிராம்
லவங்கம் : பத்து கிராம்
கசகசா : இருபது கிராம்
பொட்டு கடலை : ஐம்பது கிராம்
மஞ்சள் தூள் : ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் : இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எலுமிச்சம் பழம் : அரை மூடி
செய்முறை:முதலில் பயத்தம் பருப்பையும் உருளைக் கிழங்கையும் வேகவைத்துக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சை மிளகாய்இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வாணலியில் எண்ணை வைத்துக் காய்ந்ததும், 4 பல் பூண்டு போட்டு சிவக்க வறுத்து , பின் பட்டை, இலவங்கம், நறுக்கிய வெங்காயம் என்ற வரிசையில்சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவந்ததும், வேகவைத்த பயத்தம்பருப்பு, 2 கப் தண்ணீர், உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதிக்க ஆரம்பித்ததும், உதிர்த்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, அரைத்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்துஇறக்கவும்.இறக்கிய சூட்டோடு எலுமிச்சம் பழம் 1/2 மூடி பிழிந்து, கொத்தமல்லித் தழையை அதன் மேல் தூவி விடுங்கள். கடப்பா ரெடி. செய்யுங்க , சாப்பிடுங்க ,அசத்துங்க .
கடப்பா ரிசிபி பிரமாதம். படிக்கும் போதே நாக்கில்... ஆமா எல்லா டிடெய்லும் தந்தீங்க, முக்கியமானதை சொல்லலியே? அதாங்க, லஷ்மி கபே அட்ரஸ்!
ReplyDelete- கே.பி. ஜனா.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
This comment has been removed by the author.
ReplyDeleteஹாய்.. வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeletekadalai maavai thevayaana uppudan neeril karaithu, kadugu karivepilai prungaayam thaalithu,adil pachai matrum vatha milagaigalai vadakki adanmel uppu serthu karaikkappatta kadalaimaavai ootri oru kodhi vittu irakkum, avasara bombay chutneykkum, kadappa enappeyaro?!:)idhu dosaikku superb
ReplyDeleteரேகா இந்த கடப்பாவை படிக்கும் போதே நல்ல இருக்கு.
ReplyDeleteசெய்து பார்த்து விட வேண்டியது தான். அதாவது (பாஜியும் +லெமன் பாசிப்பருப்பும் ஒன்றாக இனைவது போல் இருக்கு அப்ப ஈசி தான்)
ஒரு சின்ன அட்வைஸ், கொஞ்சம் இடைவெளி விட்டு பாயிண்டை பிரித்து எழுதுங்கள், படிப்பவர்களுக்கு ஈசியாக இருக்கும்.
அப்படியே அம்மாவிடம் மொர்க்கிளி செய்வது எப்படி என்று கேட்டு அதன் செய்முறை விளக்கத்தை மற்றுமொரு பதிவில் அளித்தால் நன்று..
ReplyDelete