என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Wednesday, September 2, 2009

சுவரேறிக் குதித்தால் கோர்ட்

அப்போது நான் ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். விழுப்புரத்தில் இருந்த எங்கள் வீடு சின்னதாக இருந்தாலும் தோட்டம் பெரிதாக இருக்கும். மதிய சாப்பாட்டிற்காக (?) வீட்டுக்கு வந்தால் அம்மா என்னை அப்பாவிடம் போய் பணம் வாங்கி வாடா என்பாள். நானும் தாய் சொல்லை தட்டாமல் உடனே தோட்டத்தின் பக்கம் ஓடுவேன் . ( தெரு வழியாக போகணும் என்றால் இரண்டு தெருக்களை சுத்திக்கொண்டு போகணுமே! ),தோட்டக் கடைசியில் ஒரு பெரிய காம்பவுண்ட் சுவர் இருக்கும். அது அந்த காலத்து சுவர் என்பதால் காரைகள் பெயர்ந்து அங்கங்கே பொந்துகளுடன் இருக்கும். அவைகளில் லாவகமாக காலை வைத்து ஏறி அந்த பக்கம் குதித்தால் ...
அங்கே...
பல்வேறு பறவைகளின் இனிய சத்தங்களை கேட்டுக்கொண்டே சுள்ளி,வேப்பங் கொட்டைபொறுக்கும் கிழவிகளையும் சிறுவர்களையும் கடந்து போனால் ஓரிடத்தில் கும்பலாக சிலர் நின்றுகொண்டிருப்பார்கள். ஒருவர் சேரை போட்டுக்கொண்டு எதையோ படிப்பார். (அது கேஸ் நம்பர் என்பது பெரியவனானதும் தெரிந்துகொண்டேன்) இன்னொருவர் அந்த கேஸ் சம்பந்தப்பட்ட பானையையோ அல்லது பாட்டிலையோ எடுத்து வைப்பார். காத்திருப்பவர் கையில்வைத்திருக்கும் இரும்புத் தடியால் ஒரு போடு போட கள்ளச் சாராயமோ, பிராந்தியோ, விஸ்கியோ ஆறாக ஓடும். அந்த 'பிராந்தி' யமே ஒருவித வாசனையுடன் இருக்கும். பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் என்னைப் பார்த்து " சாமி கொஞ்சம் குடிக்கறீங்களா?" என்று கிண்டலான கேள்வி வேறு. அடுத்த வினாடி அங்கிருந்து ஓட்டமெடுத்தால் என் அப்பா இருக்குமிடத்தில் தான் போய் நிற்பேன்.

அப்போது பூரண மதுவிலக்கு இருந்த காலம். கள்ளச் சாராயம் , பாண்டிச்சேரியிலிருந்து திருட்டுத்தனமாக எடுத்து வரப்படும் மது வகைகள் போன்றவைகளை பிடித்து கேஸ் போட்டு கேஸ் முடிந்ததும் இது மாதிரி வெட்ட வெளியில் அவைகளை அழிக்கும் சம்பவம் அவ்வப்போது நடக்கும்.

சமீப காலங்களில் " குடித்துவிட்டு ஓட்டலில் தகராறு செய்த போலீஸ்காரர்களை சுற்றி வளைத்த போலீஸ்காரர்களுடன் குஸ்தியில் இறங்கிய போலீஸ்காரர்கள்", " குடித்துவிட்டு பஸ்சில் இருந்து இறங்க மறுத்த போலீஸ்காரரை வலுக்கட்டாயமாக இறக்கிய போலீஸ் " என்று பத்திரிகைகளில் கட்டம் போட்டு வரும் செய்திகளை படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. வேலியே பயிரை மேயலாமா?

அது சரி. நீங்க ஏன் அங்கெல்லாம் போய் நிக்கறீங்கன்னு நீங்க கேட்கறது காதில் விழுது. பின்னே என் அப்பா அந்த கோர்ட்டில் தானே வக்கீலாக பிராக்டீஸ் செய்தார், அங்கே போகாமல் வேறெங்கே போவேன்?

8 comments:

 1. :)thiruvanmiyur il sameebathil oru constable oru traffic police i kadithuvittar...nijamaagave!!

  ReplyDelete
 2. //kripaprasanna//
  //thiruvanmiyur il sameebathil oru constable oru traffic police i kadithuvittar//

  அதைத்தான் நாசூக்காக நான் தெரிவித்துள்ளேன்.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 3. nallavelai,"Sami oru peg adikkiringala" enrathum adikkamal irunthingalae,adhuvaraiyil nanru. Naan rented house il iruntha podhu oru appa than magalaiye kudicka chonnathu ninivukku vanthathu.

  vkn anna.

  ReplyDelete
 4. நீங்க என்னோட கவிதைக்கு வாழ்த்து சொன்னதுக்கு மிக்க நன்றிங்க........

  ReplyDelete
 5. கோர்ட்டில் அப்பா வேலை பார்த்தார் என்றால் ஏகப்பட்ட கதைகள் சொல்லியிருப்பாரே?

  ReplyDelete
 6. //சத்யராஜ்குமார்//
  //ஏகப்பட்ட கதைகள் சொல்லியிருப்பாரே?//
  அவர் சொன்னதில்லை. பாட புத்தகங்களை படிக்கும்போது காதில் விழும். அந்த வயதில் கதையாவது கத்திரிக்காயாவது?

  ரேகா ராகவன்

  ReplyDelete
 7. வலைப்பூ நல்ல வாசனை! - கே.பி.ஜனா.

  ReplyDelete
 8. @@ JANARTHANAN

  எந்த வாசனையை சொல்கிறீர்கள் சார்?

  ரேகா ராகவன்

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "