என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 11, 2009

கோவணம் என்பது என்ன?

நான் படிக்கும் போது ஒவ்வொரு சனிக்கிழமையும் என் அம்மா என்னையும் என் அண்ணனையும் கூப்பிட்டு கோவணம் கட்டச் சொல்லி எங்கள் தலையிலும் உடம்பிலும் நல்லெண்ணையை தேய்த்துவிட்டு அது நன்றாக ஊறும் வரை தோட்ட வேலை செய்துவிட்டு வாங்க என்று அன்புக் கட்டளை இடுவாள். " எதுக்கும்மா கோவணம் கட்டிண்டு எண்ணெய் தேச்சுக்கணும்? நிஜாரோடேயே தேய்ச்சிக்கரேனே ?" என்று நான் கேட்டா " அப்புறம் நிஜாரெல்லாம் எண்ணெய் ஆயிடும் , ஸ்கூலுக்கு எதை போட்டுக்கிட்டு போவே?" என்பாள். அப்புறம் என்ன? அண்ணனுடன் குஷியாக வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்று அங்கு உள்ள வாழை மரங்களுக்கு தண்ணீர் செல்ல வழி அமைத்தும், பூச்செடிகளை அழகு படுத்தியும், களை பிடுங்கியும் ஆடு மாடுகள் வராத மாதிரி வேலியை நெருக்கமாக கட்டிவிட்டு பிறகு சுகமாக ஒரு வெந்நீர் குளியல் போட்டு விட்டு வந்தால் அம்மா தட்டில் சாப்பாடு போட்டு "சாப்பிடுங்கடா ! " என்பாள்.


படித்து முடித்து அரசு வேலைக்கு போய் மாடு மாதிரி உழைத்துவிட்டு இப்போது ஓய்வு பெற்ற பின் நேரத்தை பயனுள்ள விதத்தில் செலவிட தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு மணி நேரம் தோட்ட வேலை செய்வதில் ஒரு தனி சுகத்தை அடைகிறேன். ஆனால் என் மனைவியோ " நீங்க தோட்ட வேலை செய்கிறேன் பேர்வழின்னு இப்படி வேட்டி பூரா மண்ணை பூசிக்கிட்டு வரீங்களே, இனிமே பேசாம கோவணம் கட்டிக்கிட்டு வேலை செய்யுங்க!" என்கிறாள். அது சின்ன வயசில் சரி. இப்போ?

இதைப் பற்றி சிந்தித்தும் புத்தகங்களை படித்தும் பார்த்தேன். இந்த கோவணம் என்பது என்ன? ஒரே துண்டுத் துணியால் ஆன இடைக்கு கீழ் அணியும் ஆடை. பொதுவாக, ஆண்கள் மட்டுமே இதை அணிகிறார்கள். துண்டு மற்றும் பழைய வேட்டிகளில் இருந்து கிழிக்கப்பட்ட துண்டுத் துணியைத்தான் இதற்கு பயன்படுத்துகின்றனர் . இதை இடையில் கட்ட அரைஞாண் கயிறு (அருணாக் கயிறு) உதவுகிறது.

வயலில் வேலை செய்பவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்யும் ஏழைகள் முன்பு இதை பயன்படுத்தி வந்தார்கள். பழைய கால சினிமாக்களில் ஆண்கள் இதை கட்டிக்கொண்டு ஏர் உழுவதையும், நாத்து பறிப்பதையும் , நடுவதையும் பார்க்கலாம். இப்போதும் ரயில் பயணங்களின்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக வயலில் வேலை செய்பவர்களை கோவணத்துடன் காண முடிகிறது. நாகரீகம் முன்னேறவும் கிராமத்தில் வசிப்பவர்களும் இதை துறந்து விட்டு அண்டர்வேர் (வடிவேலு, ராமராஜன், ராஜ்கிரண் ஆகியோர் இது தெரிகிற மாதிரி வேட்டியை தூக்கி கட்டி இருப்பார்கள்) எனப்படும் உள்ளாடையையே தற்போது அணிகின்றனர். தற்போது இளைய தலைமுறையினர் யாரும் இதை அணிய விரும்புவதில்லை. எனினும் நடிகர் கமலஹாசன் அந்த காலத்தில் " பதினாறு வயதினிலே" படத்தில் வெறும் கோவணத்துடன் தோன்றி அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். உள்ளாடையாக இதை அணிவதை தற்காலத்தில் நாகரிகமாக எவராலும் கருதப்படுவதில்லை. ஆயத்த உள்ளாடைகள் வந்து விட்ட பிறகும் வறுமை மற்றும் பழக்கம் காரணமாகவோ எளிமை கருதியோ சிலர் கோவணம் அணிகிறார்கள். அந்த காலங்களில் ஆண்கள் குளிக்கும்போது கோவணத்துடன் குளித்து பின் உலர்ந்த கோவணம் ஒன்றை கட்டிக்கொள்வார்கள். இதை வயது வித்தியாமின்றி, சிறியவர் முதல் பெரியவர், முதியவர் என எல்லோரும் கட்டிக்கொண்டனர். சிறு ஆண் பிள்ளைகளுக்கு வீட்டில் இருக்கும் போது இதை மட்டுமே கட்டி விடுவதுண்டு. கிராமங்களில் சின்ன பெண் குழந்தைகளுக்கு கூட இதை கட்டிவிடுவதுண்டு. காசியில் சாதுக்கள், சாமியார்கள் கோவணம் மட்டுமே அணிந்து திரிவதை பார்கிறோம். இவ்வளவு ஏன்?முருகக் கடவுளே ஆண்டியாக இருந்த போது கோவணத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இதையெல்லாம் இப்போ எதுக்கு எங்களுக்கு சொல்லிக்கிட்டு இருக்கே என்கிறீர்களா? இப்போதுள்ள சிறுவர்களிடம் (ஏன் உங்களில் சிலரிடம் கூட) கோவணம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள். நீங்களோ அல்லது அவர்களோ பதில் சொல்லிவிட்டால் நான் இந்த பதிவையே போடவில்லை என்று நினைத்து விட்டுப் போகிறேன்.

19 comments:

  1. கோவணம் பற்றிய ஆவணம் பிரமாதம்!-- கே.பி.ஜனா.

    ReplyDelete
  2. அப்படியெல்லாம் நீங்கள் நினைக்கக் கூடாது. கோவணம் பற்றி தெரியாதவன் தமிழனாகவோ அல்லது குறைந்தபட்சம் ஆணாகவோ இருக்க முடியாது.
    comments settings- இல சென்று word verification- ஐ எடுத்து விடுங்கள்.

    ReplyDelete
  3. (வடிவேலு, ராமராஜன், ராஜ்கிரண் ஆகியோர் இது தெரிகிற மாதிரி வேட்டியை தூக்கி கட்டி இருப்பார்கள்)

    u mean பட்டாபட்டி

    :-)


    பதிவு superb வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. //(ஏன் உங்களில் சிலரிடமோ கூட) கோவணம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள். //

    ஆமா சார் தெரியாதுன்னு தான் சொல்லுவாய்ங்க...

    ஆனா வேணாம் சார் சொல்லவிரும்பலை....

    ReplyDelete
  5. இது நவீன காலமுங்க கோவணம் தான் அண்டர் வேயாராக் மாறி இருக்கிறது. உங்கள் தளத்தின் வாசகம் "உண்மையான் நட்பைபுரிந்து கொள்ள உண்மை யான் மனசு தேவை." என்னை கவந்த வரிகள். அனுபவித்து சொன்னது போல இருக்கு. பாராடுக்கள். நட்புடன் நிலாமதி.mathinilaa.blogspot.com...இங்கும் சென்று பாருங்கள்.

    ReplyDelete
  6. கோவணமும், அரைஞாண் கயிறும்தானே பரிணாம வளர்ச்சியில் தற்போது எலாஸ்டிக் வைத்த உள்ளாடைகள் ஆகியுள்ளன! நான் ஈரோடு அருகே ஒரு கிராமத்தில் பணியாற்றி வந்த போது மிராசுதாரர்கள் எந்த வெட்கமும் இல்லாமல் கோவணத்துடன் இயல்பாக புல்லட் மோட்டார் பைக்கில் தடதடவென வயலோரம் செல்வார்கள். அது மிகவும் வெப்பமான பிராந்தியம் என்பதும் ஒரு காரணம். அகிலுக்கு கோவணம் என்றால் நன்றாகத் தெரியும். ஏனென்றால் வாக்கியங்களில் வார்த்தைகளுக்கு இடையே இடம் விட்டு எழுதுவது எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைக்க, 'எங்கோ மணம் பறக்குதே!' என்னும் வாக்கியத்தை உதாரணமாகச் சொல்லி விளக்கியிருக்கிறேன்!

    ReplyDelete
  7. நானும் கோமணம் கட்டியிருந்த ஃபேமிலிதானுங்க..

    இப்போ அரணாக்கயிறு கூட கட்டறதில்லீங்க..

    சரளமான எழுத்து நடைங்க

    ReplyDelete
  8. Neengal yealuthyathai vida nanbar janarthanan yealuthiya comment very very super "கோவணம் பற்றிய ஆவணம் பிரமாதம்!-- கே.பி.ஜனா" yeathugai monaiyaga miga arumai

    ReplyDelete
  9. @@ ஜனார்த்தனன்
    நன்றி சார்.

    @@ ரகுநாதன்
    வோர்ட் வெரிபிக்கேஷனை எடுத்து விட்டேன். நன்றி.

    @@ உலவு.காம்
    பாராட்டுக்கு நன்றி.
    @@பிரியமுடன்...வசந்த்
    @@நிலாமதி
    நன்றிங்க.

    @@SRK
    நன்றி சார். 'எங்கோ மணம் பறக்குதே!' சூப்பர்.
    @@ சந்ரு
    @@கதிர் - ஈரோடு
    பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  10. I think I have worn it once in my childhood, thanks to Amma. A very comfortable underwear for summer. :)

    ReplyDelete
  11. கோவணபுராணம் நன்று ! நன்று !

    ReplyDelete
  12. எங்கள் தாத்தா கோவணம் அணிந்து குளிப்பதை பார்த்திருக்கிறேன். அதை கழற்றி வெயிலில் போட்டு வேறொன்றை அணிவார்.

    கச்சை என்பதும் கோவணம் என்பதும் ஒண்றேதான்.

    ReplyDelete
  13. அந்தக்காலத்தில் இடையில் அரைஞாண் கயிறு காடுவது குடல் இறக்கத்தை தவிர்த்தது. கடின வேலைகள் செய்தவர்கள் இதனால் கோவணம் அணிந்தது பொருத்தமானதே.

    இன்றைய Thongs என்பவை கோவணங்களே.

    ReplyDelete
  14. கோவணம் தொடர்ச்சியாய் அணிந்து கொண்டவர்கள்
    ஆயுள் கூடும் என்பது கண்கூடு!

    ReplyDelete
  15. I totally agree with Mr.Ramamurthy, it is totally a scientific attire which our elders have given us
    I am using that only.

    ReplyDelete
  16. நான் இன்றும் கோமணம் கட்டிக் கொள்கிறேன்.

    ஜட்டியை விட நன்றாக உள்ளது.

    மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்.

    உண்மையாக கோமணம் காட்டனில் விரைப் பகுதி பலமாக ஈரப்பதம் இல்லாமல் சம நிலையில் வைத்து அரிப்பு ஏற்படாத வண்ண்ம் காக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

      Delete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "