என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, September 22, 2012

இதுவும்...!



கார்,பங்களா,

அள்ள அள்ள பணம்னு

வாழும்  மக்களே!

ஹாயாக நாங்கள் இப்படி

படுத்திருப்பதைப் பார்த்ததுமே 

வண்டியின் வேகம் குறைத்து

மனதில் பயம் அதிகரிக்க
  
எங்களை கடந்து போகும்

நீங்கள் என்றாவது

நினைத்துப் பார்த்ததுண்டா

இதுவும் கடந்து போகும்னு! 

<><><><><><><><><><><><>

11 comments:

  1. "இப்படி ஒரு நாளேனும் உங்களால்
    இப்படி ஹாய்யாக இருக்கமுடியுமா "
    என்பது கூட ஈற்றடியாய் இருக்கலாமோ ?
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. யோசிக்க வைத்து விட்டதோ..

    ReplyDelete
  3. படம் அழகு. கவிதை அருமை.

    ReplyDelete
  4. அப்படிச் சொல்லுங்க... அருமை...

    ReplyDelete
  5. இதுவும் கடந்து போகும் - இந்த வார்த்தையை வைத்து ஒரு மன்னர் கதை படித்தது நினைவில் நிழலாடுகிறது. கவிதையாய் படத்துக்குப் பொருத்தமாய் வாசிக்கும் போதும் மனதில் பதிகிறது. மிக அருமை ஐயா.

    ReplyDelete
  6. இதுவும் கடந்து போனது !!!


    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_20.html

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வணக்கம்.
    ரேகா ராகவன்
    உங்களின் வலைப்பக்கம் முதல்தடவையாக வந்தேன் அதுவும் வலைச்சரம் வலைப்பூவில் பார்த்து.
    உங்களின் கவிதையின் வரிகள் அழகாக உள்ளது.நேரம் இருக்கும் போது நம்மட தளத்துக்கு வாருங்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. மீண்டும்... வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/6.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  9. நான் மெத்த படித்தவன், பலவாகனங்கள் , பலவீடுகள், பலகோடிகள் என்னிடம் உள்ளது என்ற இறுமாப்பில் மிதப்பவன் , இவற்றின் நிலையற்ற தன்மையை ஓர் கணம் சிந்தித்து பார்த்தால் இந்த நாலு கால் பிராணிகள் , சொல்லாமல் உணர்த்தும் பாடம் புரியும் .காலம் கடந்தபின் சிந்திப்பவர்களின் எண்ணிக்கைதான் இத் தாரணி தன்னில் பெருவருகி வருகின்றது என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. கவிதையின் , சொற்சுவை, பொருட்சுவை பாராட்டுக்குரியது. வாழ்க, வளர்க.

    அன்பன், வேளச்சேரி நடராஜன்.

    ReplyDelete
  10. நான் மெத்த படித்தவன், பலவாகனங்கள் , பலவீடுகள், பலகோடிகள் என்னிடம் உள்ளது என்ற இறுமாப்பில் மிதப்பவன் , இவற்றின் நிலையற்ற தன்மையை ஓர் கணம் சிந்தித்து பார்த்தால் இந்த நாலு கால் பிராணிகள் , சொல்லாமல் உணர்த்தும் பாடம் புரியும் .காலம் கடந்தபின் சிந்திப்பவர்களின் எண்ணிக்கைதான் இத் தாரணி தன்னில் பெருவருகி வருகின்றது என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. கவிதையின் , சொற்சுவை, பொருட்சுவை பாராட்டுக்குரியது. வாழ்க, வளர்க.

    அன்பன், வேளச்சேரி நடராஜன்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "