படித்ததில் பிடித்தது
மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் உயிர் போகும் தறுவாய். அருகிலிருப்போர், அவரது உதடுகள் உலர்ந்து போயிருப்பதைப் பார்த்தது, பாலில் ஒரு துணியை நனைத்து அவரது வாயில் ஒற்றுகிறார்கள். என்ன காரணமோ, அவர் அதனைத் 'தூ' என்று துப்புகிறார்.
"ஐயய்யோ பால் கசக்கிறதோ?" என்று பயந்து கொண்டே கேட்கின்றனர் பக்கத்திலிருப்போர்.
"மாம்பழக் கவி பதிலுரைக்கிறார்: "பாலும் கசக்கவில்லை; துணியும் கசக்கவில்லை!"
கசக்கப்படாத (துவைக்கப்படாத) அழுக்குத் துணியைப் பாலில் நனைத்துப் பிழிந்துவிட்டார்கள் என்று எவ்வளவு நயமாகக் கூறியிருக்கிறார்!
செத்துப் போகும் போதுகூடச் சிலேடை சொல்ல முடிகிறது என்றால், சாவு அவருக்கு அவ்வளவு சர்வ சாதாரணமாகிவிட்டது என்றுதானே அர்த்தம்!
( சுகி சிவம் எழுதிய "அச்சம் தவிர்" என்ற புத்தகத்திலிருந்து)
//"பாலும் கசக்கவில்லை; துணியும் கசக்கவில்லை!"//
ReplyDeleteஎவ்வளவு ஒரு கவித்துவம்.... ரசித்தேன்.
அருமை சார்
ReplyDeleteநல்ல கவிநயம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteரசித்தேன்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி...
(த.ம. 3)