என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Monday, March 12, 2012

மறந்ததேன்?
வயிற்றில் பத்து மாதம் சுமந்து
இரவு பகல் பாராமல்
பொத்திப் பொத்திப் பாதுகாத்து
பாலூட்டி,சோறூட்டி
கையில்,மடியில்,தோளில்
போட்டு வளர்த்த அன்னையை
பிள்ளைகள் பெரியவர்கள்ஆனதும்
அண்ணன் வீட்டில் ஒரு மாதம்
தம்பி வீட்டில் ஒரு மாதம் என்று
பந்தாடும் விளையாட்டு பிற்காலத்தில்
அவர்களை வைத்தே விளையாடப்படும்
பார்த்துக் கொண்டிருக்கும் பேரன்களால்
என்பதை மறந்ததேனோ?

<><><><><><><><><><><><><><><><><><><>


(கட்டுரை.காம்-ல் வெளியான என் கவிதை)

8 comments:

 1. படமும் கவிதையும் உலுக்கி விட்டன..

  ReplyDelete
 2. அருமையான கவிதை......

  கட்டுரை.காம்-ல் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
 3. மறந்ததேன்?
  நெஞ்சில் கனப்பதேன்..

  ReplyDelete
 4. மனம் தொடும் மென்மையான கவிதை!

  ReplyDelete
 5. மனதைத் தொட்ட கவிதை.

  ReplyDelete
 6. சுருக்கென்று தைக்கும் கவிதை.

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "