என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, February 6, 2012

இம்முறையேனும்//வந்ததோ...


1. வந்ததோ...

தூரத்தே மணியோசை!
ஆடி அசைந்து வருகிறதோ 
பாகனுடன் யானை?

பார்த்ததுமே பரவசத்தில் 
துள்ளிக் குதிப்பானே குழந்தை!

அவசரமாய் அவனை 
தோளில் அணைத்துக் கொண்டு
தெரு முனைக்குப் போனால்...

மணியோசையுடன் 
வந்து கொண்டிருந்தது 
பஞ்சு மிட்டாய் வண்டி! 

<><><><><><><><><><><><><><><>

2. இம்முறையேனும்... 

வருவாயெனக் காத்திருந்தேன் 
நீயோ வரவேயில்லை!

வந்த போது நான் உன்னைத்  
தவிர்த்தது தவறுதான்
மன்னித்துவிடு! 

மீண்டும் நீ வருவாயா என்று 
துக்கத்துடன் காத்திருக்கிறேன்!

இம்முறை ஏமாற்றாதே 
வா.. வா..வந்துவிடு...
என் இனிய தூக்கமே!

<><><><><><><><><><><><><><><>

(கட்டுரை.காம்-இல் வெளியான எனது கவிதைகள்)

8 comments:

  1. கட்டுரை.காம்-ல் படித்தது... ரசித்ததும் கூட....

    மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமையா இருக்கு கவிதை.மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  4. இரண்டுமே அருமையாக இருந்தது....

    கட்டுரை.காம்மில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வந்ததோ பஞ்சு மிட்டாய் வண்டி... அப்ப பையன் ஏமாறவில்லை?அவனுக்கு அதுவும் பிடிக்குமே?

    ReplyDelete
  6. "வந்த போது நான் உன்னைத்
    தவிர்த்தது தவறுதான்"

    முற்றிலும் உண்மை
    உணர்ந்து எழுதிய வரிகள்.

    ReplyDelete
  7. இரண்டு கவிதைகளுமே ரசிக்க வைத்தன. அருமை!

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "