என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Saturday, December 31, 2011

'வருகைக்கு நன்றி!'
பிறக்கப் போவதை வரவேற்க 
காத்திருக்கிறார்கள் 
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு...

போகப் போகும் உன்னை
அம்போவென விட்டுவிட்டு!

நல்லதும் செய்திருக்கிறாய் நீ 
அல்லதும்  செய்திருக்கிறாய்...

பிறக்கப் போகும் அது
என்ன செய்யப் போகிறது?
அறியக் காத்திருக்க வேண்டும்! 

ஆரம்பத்தில் உன்னை 
ஆஹாஓஹோவென கொண்டாடிய 
அதே உலகம் தான் முடிவில் 
கண்டு கொள்ளாமல் போகிறது!

இதுதான் உனக்கு விதிக்கப்பட்டது
ஏன்,  இன்று பிறப்பதற்கும் அதுவே 
என்றுணர்ந்து கொள்.

இனிமேல் பிறவா வரம் கிடைத்த 
இரண்டாயிரத்திப் பதினொன்றே 
நீ பாக்யவான்!
உனக்கு என் வந்தனங்கள்!


0o07 comments:

 1. சென்றவருடத்துக்கு வாழ்த்தும் வரும் வருடத்துக்கு வரவேற்பும்.இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. வரும் வருடத்தை மட்டுமல்லாது சென்ற வருடத்தையும் மறக்காமல் வாழ்த்துப் பாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. எல்லோரும் 2012-க்கு வரவேற்பு சொல்வதில் முயன்றிருக்க 2011-ஐ நினைவில் வைத்துச் சொல்லும் கவிதை... நன்று....

  உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
 5. இனிமேல் பிறவா வரம் கிடைத்த
  இரண்டாயிரத்திப் பதினொன்றே
  நீ பாக்யவான்!

  அட.. புதுமையான வாழ்த்து!

  புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. சார்... நீங்க ரொம்பவும் வித்யாசமானவர் தான்!
  எல்லாரும் வரும் வருடத்தை வரவேற்கக் காத்திருக்க, நீர் மட்டும் ‘பிறவா வரம்’ பெற்ற சென்ற ஆண்டை
  கொண்டாடுகிறீர்கள்..எனக்கு என்னவோ வீட்டில் இரண்டாவது குழந்தை பிறக்க, முதல் குழந்தையின் மன நிலை ஞாபகம் வருகிறது..

  இனிது நம்மை விட்டுப் பிரிந்த சென்ற ஆண்டுக்கான
  மலரும் நினைவுகளுடன்....


  “ஆரண்ய நிவாஸ்”

  ReplyDelete
 7. கவிதை சூப்பர்.

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "