என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, December 22, 2011

கை (ஒரு பக்கக் கதை)



ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தார் புரோக்கர் கண்ணுசாமி.

இன்னும் சிறிது நேரத்தில் பெற்றோர்களுடன் பெண் பார்க்க வரப் போகிறான் முரளி.

இந்தத் தடவையாவது முரளியின் அம்மாவுக்குப் பெண் பிடிக்க  வேண்டுமே என்று கவலைப்பட ஆரம்பித்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.

இப்போது முரளி பார்க்கப் போவது நாலாவது பெண்ணை.  ஏற்கனவே பார்த்துவிட்டு வந்த மூன்று பெண்களுக்கும் கை நீளம் என்று சொல்லி அவனின் அம்மா நிராகரித்துவிட்டாள்.

அம்மா பார்த்து சரி என்றால்தான் மேலே பேசுவேன் என்று அவனின் அப்பாவும் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

வெறுத்துப் போய்விட்டார் கண்ணுசாமி.

'எதை வைத்து, பார்த்த பெண்களுக்கெல்லாம் கை நீளம் என்று முரளியின் அம்மா திருட்டுப் பட்டம் சூட்டுகிறாள்?'

இந்தத் தடவை பெண் பார்த்துவிட்டு வந்ததும் எப்படியும் இதைப் பற்றிக் கேட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.  

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

முரளியின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு, "என் மகன் வடபழனி கோயில்ல பூக்கடை வச்சிருக்கான். அவன் அங்கே, இங்கே போய்வரும் போதெல்லாம் அவனுக்குப் பொண்டாட்டியா வர்றவதான் கடையை கவனிச்சுக்கணும். பூ வியாபாரத்துல நீளமான கையால முழம் போட்டு வித்தா எங்களுக்கு நஷ்டம். உங்க பெண்ணுக்கு கை சின்னது. அதான் எனக்குப் பிடிச்சிருக்கு" என்றாள் முரளியின் அம்மா.

"அடடே...இதுதானா விஷயம்!" என்று தலையைச் சொரிந்து கொண்டார் கண்ணுசாமி.  

("குங்குமம் அக்.28 - 3 நவ. '94 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

11 comments:

  1. தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  2. கை காரர் அய்யா நீங்க, ட்விஸ்ட் வைத்து கதை எழுதுவதில்!

    ReplyDelete
  3. மகனுக்கும், அவன் செய்யும் தொழிலுக்கும் ஏற்ற பெண்ணாக தான் பார்த்திருக்கிறார்...:)

    ReplyDelete
  4. Manniyum Naanum Padiththuvittu Ulamaara Siriththom!! Suspense Kathai Vazhanguvadil, Rajesh Kumar--I MingiiVitteergal, Nanri Ayyaa!!

    ReplyDelete
  5. கை நீளம் என்று சொன்னவுடன் நானும்
    எல்லோரும் நினைப்பது மாதிரிதான்நினைத்துவிட்டேன்
    விளக்கம் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அட... நான் கூடம் கை நீளம் என்றவுடனே வேறென்னமோ யோசித்தேன்... - நல்ல ட்விஸ்ட்ட்....

    ReplyDelete
  7. ஹா. ஹா.. உங்க எழுத்து ரொம்ப நீளம்..

    ReplyDelete
  8. ;) நல்லா இருக்கு சார்

    ReplyDelete
  9. ஆஹா... விளக்கம் அருமை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "