என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Tuesday, October 25, 2011

பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது எப்படி?

செய்ய வேண்டியவை:
1) பட்டாசுகளை முடிந்தவரை உங்கள் கைகளுக்கு அருகில் இல்லாமல் தூரமாக வைத்து வெடிக்கவும்.
2) பட்டாசுகளை வெடிக்கும்போது பருத்தி (காட்டன்) துணிகளை மட்டுமே அணிந்திருக்கவேண்டும்.
3) பட்டாசு கொளுத்தும்போது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் அருகிலேயே வைத்துக்கொள்ளவும்.
4) பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்கவும்.
5) பட்டாசுகளை ஒவ்வொன்றாக வெடிக்கவும்.
6) வெடித்த பட்டாசுகளை ஒழுங்கான முறையில் அப்புறப்படுத்தவும்.
7) பட்டாசுகளை தனி அறையில் வைக்கவும்.
8) ராக்கெட் பட்டாசுகளை நேரான நிலையில் நிறுத்தி கொளுத்தவும் .

செய்யக்கூடாதவை :


1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் காயங்களுக்கு சாயங்களையோ மையையோ தடவக்கூடாது.
2) பட்டாசுகளை கொளுத்தும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாம்.
3) வெடிக்காத பட்டாசுகளை கைகளில் எடுக்காதீர்கள்'
4) அறைக்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
5) பட்டாசுகளை வெடிக்கும் போது மற்ற பட்டாசுகளை அருகில் வைக்கக்கூடாது.
6) பட்டாசுகளை டப்பாவிற்குள் வைத்து வெடிக்க வேண்டாம்.

முதலுதவி:

1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட காயங்களை பச்சை தண்ணீரில் நனைக்கவும்.
2) பிறகு சுத்தமான துணியால் காயத்தை மூடியபடி அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்.
3) காயங்களில் துணி ஒட்டியிருந்தால் அதனை எடுக்க முயற்ச்சிக்காதீர்.
4) ஆராய்ச்சிகளின்படி தீக்காயங்களுக்கு சிறந்த முதலுதவி காயங்களை தண்ணீரில் துடைப்பது.

(இது ஒரு மீள் பதிவு)
11 comments:

 1. உங்கள் கரிசனம் புரிகிறது..
  தேவையான அறிவுரைகள்..

  ReplyDelete
 2. இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 3. பரவாயில்லையே...பயந்து கொண்டு ஹெல்மட் போட்டுக் கொண்டு தான் படித்தேன்..

  ReplyDelete
 4. பாதுகாப்பு பகிர்வுகளுகுப் பாராட்டுக்கள்.
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 6. பய்னுள்ள பதிவு
  பதிவிட்டமைக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. தேவையான பகிர்வு. வருமுன் காப்போம் என்பதே நல்லது....

  உங்களுக்கு இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.....

  ReplyDelete
 8. மீள் பதிவென்றாலும் அக்கறையுடன் கேள் பதிவு!

  ReplyDelete
 9. Useful post at the right time sir. Happy Diwali to you & ur family

  ReplyDelete
 10. உருப்படியான பதிவுங்ணா! கடைசியில போட்டீங்க பாருங்க ஒரு வரி... மீள் பதிவு! நெசம்தான். பட்டாசு விபத்துலேர்ந்து மீள்வதற்கான பதிவுன்னும் எடுத்துக்கலாம்தானே? :)

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "