என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, May 17, 2011

இங்கே ஒரு 356






தான் உண்டாகியிருப்பதை ஆசை ஆசையாக கணவன் குமாரிடம் சொன்னாள் சித்ரா.

"ஐயோ அதுக்குள்ளேயா? இன்னும் இரண்டு மூணு வருஷம் போகட்டுமே... பேசாம நாளைக்கே லேடி டாக்டரிடம் போய் கலைச்சிடலாம். ரெடியாயிரு" என்று கூறிவிட்டு ஆபிசுக்குப் போன கணவனைப் பார்த்தது பொசுங்கிப் போனாள்.

மாலை.  அலுவலகம் முடிந்ததும் ஆபீஸ் மேனேஜர் குழந்தையின் பிறந்த நாளுக்குப் பரிசளிக்க பொம்மைக் குழந்தை வாங்குவதற்கு கடைக்குச் சென்றான் குமார்.

கடைக்காரன் அழகான பொம்மைக் குழந்தையை எடுத்துக் காட்டி அதன் வயிற்றை விரலால் அழுத்த, அது "மம்மி...,டாடி...,ஆன்ட்டி..." என்று பேசியது. திரும்ப அழுத்த மீண்டும் அதையே திரும்பச் சொன்னது.

"இந்த பொம்மைக்கு வேறெதுவும் பேசத் தெரியாதா?''  குமார் கேட்கவும், "எப்படி சார் பேசும்? இந்த மூணு வார்த்தைகள் பேசுகிற மாதிரிதான் பொம்மையின் வயிற்றில் அமைச்சிருக்காங்க " என்றான் கடைக்காரன்.

பொட்டில் அடித்தது போலிருந்தது குமாருக்கு. ஒரு பொம்மையை மூணு வார்த்தைப் பேச வைக்க எவ்வளவு பிரயத்தனப்பட்டிருப்பார்கள்? நிமிடத்துக்கு எத்தனையோ வார்த்தைகளைப் பேசப் போகிற உயிரை அழித்து விடணும்னு  காலையில் சித்ராவிடம் கூறிவிட்டு வந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? நினைக்க நினைக்க அவன் நெஞ்சுக்குள் பந்தாக அடைத்தது. 

இரவு.  பெட்ரூமில்...

"சித்ரா நாளைக்கு நர்சிங் ஹோம் போய் செக்கப் செய்துட்டு குழந்தை நல்லா வளர டானிக் மருந்து மாத்திரை வாங்கிட்டு வந்துடுவோம்" என்று சொன்ன குமாரை கட்டியணைத்தாள்  சித்ரா.


"வாசுகி" இதழில் வெளியான என் போஸ்ட் கார்டு கதை

6 comments:

  1. ஆகா... அந்த ஒரு கணம்... கச்சிதம்!

    ReplyDelete
  2. உங்கள் போஸ்ட் கார்ட் கதை இன்லேன்ட் சைஸுக்கு மனத்தை கவர்ந்தது!

    ReplyDelete
  3. நிமிடத்துக்கு எத்தனையோ வார்த்தைகளைப் பேசப் போகிற உயிரை அழித்து விடணும்னு காலையில் சித்ராவிடம் கூறிவிட்டு வந்தது ...

    ஒரு பக்கத்தில் எத்தனையோ உணர்வுகளைச் சொல்லும் அழகான கதை..

    ReplyDelete
  4. இல்லை என்று சில இப்பொழுது எதற்கென்று பலர் . கிடைக்காத போதுதான் ஒன்றின் மேலிருக்கும் சிறப்பு தெரியவரும் . அருமையானக் கதை . பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  5. நல்ல கதை. கிடைத்ததை விட்டுவிட்டு முதலில் இப்படித்தான் நிறைய பேர் தப்பான முடிவு எடுத்து விடுகிறார்கள் . கதை நாயகன் திருந்தினானே அது நல்லது. நல்ல கருத்துள்ள கதை.

    ReplyDelete
  6. போஸ்ட் கார்டு போட்டு நீங்கள் கோவை செல்ல நான் சென்னை வர சென்னையில் கதை படிக்க நல்ல கதை எதிர்பாராத திருப்பம். தொடர்க மேலும்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "