என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, March 6, 2010

அவர்கள்


ந்திராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கல்பனாவை நம்பாமல் பார்த்தாள்.

"என்னுடைய வீட்டுக்காரர் அப்படிப்பட்டவர்னா சொல்ற?"

"நான் கண்ணால் பார்த்ததைத்தான் சொல்றேன். நேத்திக்கு அவ வீட்டுக்குப் போயிருந்தேன். அவ கட்டியிருந்த புடவை நல்லாயிருந்ததால் எங்கே எடுத்ததுன்னு விசாரிச்சேன். முதலாளி எடுத்துக் கொடுத்தார்ன்னு சொன்னா. எனக்கு மனசுகுக்குள்ள சுருக்குன்னு ஆயிடுச்சு. உடனே இந்த விஷயத்தை உன் காதுல போட்டுடம்ணுதான் ஓடி வந்தேன். அந்த பொண்ணு உமாவை உன் கணவனோட பாக்டரியில் வேலைக்கு எடுத்துக்கச் சொல்லி சிபாரிசு பண்ணது நான்தான். பின்னாடி நீ என்னைக் குத்தம் சொல்லக் கூடாதேன்னுதான் இப்பவே வந்து எச்சரிக்கை பண்ணிட்டேன்.

ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த ஹரி சந்திராவின் கோபமான முகத்தைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினான்.

"என்னாச்சு சந்திரா? எப்பவும் சிரிச்ச முகத்தோட என்னை வரவேற்பியே! இன்னிக்கு ஏன் கோபமா இருக்கே...?"

"நீங்க ஆசையா புடவை எடுத்துக் குடுத்திருக்கீங்களே... அவகிட்ட போங்க... அவ உங்கள சிரிச்ச முகத்தோட வரவேற்பா..." கோபமும் அழுகையும் ஒரு சேர வெடித்தாள் சந்திரா.

" ஏய்... நீ என்ன சொல்ற...?"

"உங்க பாக்டரில வேலை பார்க்கற உமாங்கற பொண்ணுக்கு நீங்க புடவை எடுத்துக் கொடுத்திருக்கீங்க...இல்லைன்னு சொல்லுங்க?"

ஹரியின் திகைப்பு விலகியது.

"இதுதான் கோபத்துக்குக் காரணமா?"

"கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவளுக்கு நீங்க புடவை எடுத்துத் தந்தீங்களா இல்லையா?"

"ஆமா தந்தேன். அவளுக்கு மட்டுமில்லை. என்னோட பாக்டரியில வேலை பார்க்கற பத்துப் பொண்ணுங்களுக்கும் ஒரே கலர்ல புடவை, ஜாக்கெட் எடுத்துக் கொடுத்திருக்கேன்..."

சந்திரா வியப்பு படர கணவனைப் பார்த்தாள்.

"எ... எதுக்கு?"

"பாக்டரில வேலை பார்க்கற பெண்கள் தினமும் டியூட்டிக்கு வந்ததும் அவ அவ கட்டியிருக்கிற புடவையையும் ஜாக்கெட்டையும் பத்திப் பேசியே ஒரு மணி நேரத்தை வீனடிக்கறாங்க. எனக்கு ப்ரொடக் ஷன் லாஸ் ஆகுது. அதைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. இப்ப எதைப் பத்தியும் பேச்சே இல்லை. வேலை ஒழுங்கா நடக்குது."

சந்திரா பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, "உங்களைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும்க" என்று நிம்மதிப் புன்னகை பூத்தாள்.

( "குங்குமம்" இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை )

வேகமாக பேசினால் அர்த்தத்தை இழப்பாய். கோபமாக பேசினால் குணத்தை இழப்பாய்

5 comments:

  1. அட! இப்படி ஒரு கோணம் இருக்கா?
    அப்படியும் பேச வேற காரணம் கிடைக்காமலா போயிரும்!

    ReplyDelete
  2. அட இது இல்லேன்னா இன்னொரு காரணம் இருக்கும் லேடீஸ் அரட்டைக்கு...

    ReplyDelete
  3. நீங்க ஓர் ஒரு பக்க கதை specialist என மறுபடி மறுபடி நிருபிக்கீறீங்க

    ReplyDelete
  4. இந்த கதையை குங்குமத்தில் படித்த்போதே பாராட்டவேண்டுமென்று தோன்றியது. மிக அருமையான கதை

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "