என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 1, 2010

அறிவு : பயம் : கர்வம்



அறிவு


பதவிகள் வரும் கூடவே தலைக்கனமும்.


போனபின்பு வரும் மொத்த அறிவும்.


எப்போதும் இயல்பாய் இருப்பவனுக்கு


போகாது அறிவு எந்தக் கணமும்.


பயம்


கனவுகள் வரும் கூடவே பயமும்.


கலைந்த பின்பும் மிச்சமிருக்கும்.


கனவே வராதவனுக்கும் வரும்


எதிர்காலம் பற்றிய பயம்.


கர்வம்


வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு


பயமிருக்குமா திசை மாறிவிடுவோமோ என்று?


இருக்காது உயர உயரப் பறந்தாலும்


தன்னுள் கர்வத்தை அண்டவிடாததால்.

15 comments:

  1. ஒவ்வொன்றுக்கும் ஒரு லிங்க் இருப்பது போல் தோன்றுகிறது, படித்து முடித்தவுடன்!

    ReplyDelete
  2. //பயமிருக்குமா திசை மாறிவிடுவோமோ என்று?//

    சரிதான்

    ReplyDelete
  3. கவிதைகள் அனைத்தும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
  4. நல்ல வரிகள் கர்வப் படாமல் வந்துருக்கிறது. அருமை . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஆஹா! மூன்றும் அழகு.

    ReplyDelete
  6. நல்ல கருத்துக்கள்

    ReplyDelete
  7. வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு
    பயமிருக்குமா திசை மாறிவிடுவோமோ என்று?

    சான்ஸே இல்லை..?! அருமை..

    ReplyDelete
  8. நல்ல கற்பனை நிறைந்த வரிகள்........
    பிரமாதமுங்க........
    ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  9. ராகவன் சார்...

    உங்களின் கற்பனைக்கு வானமே எல்லை....

    கவிதை பலே....

    ReplyDelete
  10. //கனவே வராதவனுக்கும் வரும்
    எதிர்காலம் பற்றிய பயம். //

    அருமை

    ReplyDelete
  11. கவிதைகள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  12. வித்தியாசமான சிந்தனை...

    ப்ளாக் உலகத்திற்கு நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.. இல்லைஎன்றால் உங்களைப் போன்ற வித்தியாசமான சிந்தனை உள்ளவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்காமலே போய் விட்டிருக்கும்..

    நன்றி...

    ReplyDelete
  13. //எப்போதும் இயல்பாய் இருப்பவனுக்கு
    போகாது அறிவு எந்தக் கணமும்.//... மிகச் சரியா சொல்லிருக்கிங்க‌!

    ReplyDelete
  14. உள் ஊற்றாய், ச‌மூக‌ம், அர‌சிய‌ல்,
    வாழ்வு ப‌ற்றி சிந்த‌னை அனிச்சையாய்
    நிக‌ழ்ந்து கொண்டேயிருப்ப‌தாய்
    காட்டுகிற‌து உங்க‌ள் க‌விதையின்
    ஒவ்வெரு வார்த்தையும்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "