என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Friday, March 5, 2010

இவர்கள்

நான் சத்தியகுமார். வயது 35. எம்.பி.ஏ.

நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றின் திருச்சி கிளை மேனேஜர்.

மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றவன். தூய்மை எனது தாரக மந்திரம்.

மறுநாள் சென்னையில் நான் பணியாற்றும் வங்கி
ஸ்பான்சர் செய்யும் செமினாரில் கலந்து கொண்டே ஆக வேண்டும். அன்று முகூர்த்த நாள் வேறு. எந்த ரயிலிலும் ரிசர்வேஷன் கிடைக்கவில்லை. ஏகக் கூட்டம். ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் பயணம் செய்வது முள்ளில் உட்கார்ந்திருப்பது போலிருந்தது.
இயற்கை உபாதையின் அவசர அழைப்பால் கழிப்பறையைத் தேடிப்போனவனுக்கு அதிர்ச்சி. பார்க்கவே அருவருக்கத்தக்க பிச்சைக்காரன் ஒருவன் வழியில் படுத்திருந்தான்.

பூட்ஸ் காலால் சப்தமெழுப்பிவிட்டு, "நான்சென்ஸ், இவங்களெல்லாம் ரயிலில் வரலேன்னு யார் அழுதா?" என்று மனசுக்குள் சபித்தவாறே "அந்தாண்ட போய் படுய்யா" என்றேன் அதட்டலாக.

மின்சார எஞ்சின் மாற்றுவதற்காக விழுப்புரத்தில் ரயில் சற்று கூடுதல் நேரம் நின்றது. ஒரு டீ சாப்பிடலாம் என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டவன் அதிர்ந்தேன். பர்ஸை காணவில்லை.

கழிப்பறையில் பேண்ட் பாக்கட்டிலிருந்த பர்ஸை எடுத்து மேல் தட்டில் வைத்தேன். முழுசாய் ஆயிரம் ரூபாய், கிரெடிட் கார்டு, பயிற்சிக்காக அடுத்த வாரம் சிங்கப்பூர் செல்ல வாங்கியிருந்த விமான டிக்கட் எல்லாம் அடியோடு போய்விட்டதே! என்ன செய்வது?

"சார், இது உங்களதுதானே?" குரல் கேட்டு நிமிர்ந்தேன். என்னிடம் ஒரு பர்ஸைக் காட்டிக் கேட்டான் அந்தப் பிச்சைக்காரன்.

"எ...எ... என்னுடையதுதான், ரொம்ப நன்றிப்பா" .. சொல்லிவிட்டு அவன் கொடுத்த பர்ஸை வாங்கிக் கொண்டு கையெடுத்துக் கும்பிட்டேன்.

இப்போது அவன் எனக்கு அருவருப்பாகத் தெரியவில்லை.

(" குங்குமம் " இதழில் வெளியான என் சிறுகதை)
நேர்மையை ரொம்பவும் பாராட்டுவார்கள்.ஆனால், அவர்களைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.

12 comments:

 1. எல்லாரும் மனிதர்களே! அருமையான சிறுகதை

  ReplyDelete
 2. உருவு கண்டு எள்ளாமை வேண்டும்..

  ReplyDelete
 3. ம்ம்ம்...

  நல்ல கதை... முடிவு எதிர்பார்த்தது தான் என்றாலும், எழுத்து நடை பாராட்டும் வகையில் இருந்தது...

  வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
 4. நிமிடத்தில் கடவுளாகலாம்

  ReplyDelete
 5. நல்லா இருக்கு சார்

  ReplyDelete
 6. உபயோகித்திருக்கும் ஒவ்வொரு சொற்களும் படமாக கண்முன் ஓடுகின்றன. நல்ல கதை.

  ReplyDelete
 7. நல்ல message-அ ரொம்ப எதார்த்தமா சொல்லிருக்கீங்க...பாராட்டுக்கள்

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "