என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, October 19, 2013

கதைத் திருடர்களுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை?


13.8.99 "குங்குமம்" இதழில் எனது நண்பர் "அமுதகுமார்" எழுதி வெளியான கீழே உள்ள கதையை  





போளூர் சி.ரகுபதி என்பவர் கதையை வரிக்கு வரி எழுதி இரண்டு ஆண்கள் பேசுவதாக இருந்ததை  இரண்டு பெண்கள் பேசுவதாகவும் பெண் குழந்தையை ஆண் குழந்தையாகவும் மாற்றி எழுதி அது 16.10.2013 குமுதம் இதழில் வெளியாகி உள்ளது. 

அது கீழே:-




இதற்கு முன் என் இன்னொரு நண்பர் "புதுவை சந்திரஹரி" என்பவரின் கதையை இதே  நபர் வரிக்கு வரி எழுதியிருந்ததை "முக நூல்" மற்றும் "ட்விட்டர்" ஆகிய தளங்களில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது இது.  தெரியாமல் இன்னும் எத்தனையோ? சொந்த சரக்கு இல்லாதவர் இன்னொருவரின் படைப்பைத் திருடி எழுதினால் அதற்கு கருட புராணத்தில் என்ன தண்டனை என்பதை "அந்நியன்" அம்பியிடம் யாராவது கேட்டு சொல்லுங்களேன்!


12 comments:

  1. இப்படி ஆதாரப்ப்பூர்வமாக
    அருமையாக பதிவிட்டதை
    பார்த்ததும் அவர் நிமிர்ந்து
    நடக்கமுடியுமா என்ன ?
    அதுவே பெரிய தண்டனை தானே ?
    கருடபுராணத்தில் என்னவாக இருக்கும் ?
    நானும் அறிய ஆவலாக உள்ளேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. குமுதத்துக்கு சொன்னீங்களா ?

    ReplyDelete
  3. வணக்கம்
    இப்படியானவர்கள் திருந்த வாய்பில்லை.......நீங்கள் ஆதாரங்களுடன் பதிவை எழுதியுள்ளீர்கள்........

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. போளூர் சி.ரகுபதி, பிரபல துணுக்கு எழுத்தாளர்.

    அண்மைக் காலங்களில் ஒரு பக்கக் கதைகளும் எழுதுகிறார்.

    திருட்டுத் தொழில் செய்கிறார் என்பது இப்போதுதான் தெரிகிறது.

    குமுதத்துக்கு எழுதி அனுப்புங்கள். கண்டிப்பாகக் ‘கடிதம்’ பகுதியில் வெளியிடுவார்கள்.

    தவறாமல் செய்யுங்கள்.

    ReplyDelete
  5. நீங்களும் நல்ல எழுத்தாளர்தானே.

    குமுதத்துக்கு எழுதுங்கள்.

    ReplyDelete
  6. அடப்பாவி... இப்படியா வரிக்கு வரி அப்படியே திருடுவது? அப்ப... வரிக்கு வரி திருடாம மாத்தி திருடறதை நியாயப்படுத்தறியான்னு கேட்டுறாதீங்க ஸார்... திருட்டே தப்புதான்! இது ரொம்பக் கேவலமான திருட்டா இருக்குன்னு சொல்ல வந்தேன். தன்னிடம் விஷயமுள்ளவங்க யாரும் இப்படிச் செய்ய மாட்டாங்க... இந்த ஆசாமியைப் பார்த்து பரிதாபப்படத்தான் தோணுது!

    ReplyDelete
  7. இம்சை அரசி என்கிற ப்ளாக்கர் நிறைய 1990 களில் வந்த கதைகளை கொஞ்சமே கொஞ்சமாக மாற்றி தனது கதை போல எழுதி இருந்தார். அர்னிகா நாசரின் புயலாய் ஒரு புன்னகை கதை ஒரு உதாரணம். நான் எழுதிய பின்னூட்டத்தை அவர் பிரசுரிக்கவும் இல்லை

    ReplyDelete
  8. வரிக்கு வரி அப்படியே காப்பி அடிப்பவர் அதை தனது என்று சொல்பவர்
    குற்றவியல் கீழே காபிரைட் ஆக்ட் படி தண்டிக்கப்படுபவர் தான். அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

    இருந்தாலும், இந்த plagiarism என்னும் நிலையைத் தொடும்போது தான் குற்றம் என்று கருதப்படவும் கூடும்.

    மையக்கருத்துகள், மெசேஜ்கள் , சம்பவங்கள் பல , பல கதைகளில் ஒன்று போல தோற்றமளிப்பது உண்மை தான்.

    ஒரு கோணத்தில் பார்த்தால் , உலகத்திலே மொத்தம் ஏழு வகையாகத் தான் கதை மூலங்கள் இருக்கக்கூடும் என சொல்லப்பட்டு இருக்கின்றன.

    பாகவத்தில் கிட்டத்தட்ட ஒரு 20000 கதைகள் இருக்கின்றன. இன்று வெளியிடப்படும் எந்தக் கதையுமே இந்த 20000 கதைகளின் சாயல் கொண்டவைகளாத்தான் இருக்கும் சாத்தியம் பெரிதும் இருக்கிறது.

    மாற்றான் மனைவியை பார்த்தலே குற்றம். ஸோ ராவணன் செஞ்சது குற்றம் கதை.

    அந்த இந்திரன் அகலிகை மேல் ஆசைப்பட்டது அதற்கு முன்னாடி.

    ஸோ , வால்மீகி காபி ரைட் குற்றத்திற்கு ஆளாகிறார்.

    ஒரு பேச்சுக்கு சொன்னேன்.

    பார்க்கப்போனால், அசல் என்று ஒன்றுமே இல்லை.

    நீங்கள் நான் எழுதும் எழுத்துக்கள், அ , ஆ இ ஈ எல்லாம் நல்ல வேளை
    அதைக் கண்டுபிடித்தவர்கள், உருவாக்கியவர்கள் தமது என்று காப்புரிமை பெறவில்லை.

    வார்த்தைகள் அன்றைய இலக்கியம் முதல் இன்று வரை கையாளப்படுபவை எல்லாமே இதுவரை எழுதப்பட்ட வார்த்தைகள் தான்.

    என்ன,புதிதாக நாம் செய்வது எல்லாம் வார்த்தைகள் ஜாலம்.ஒரே உணர்வினை பல விதமாக பிரதிபலிக்கச் செய்யும் திறன். வார்த்தைகளைக் கோப்பதிலே ஒரு புதுமை.

    பூக்கள் தொடுக்கப்பட்ட கதம்பம் வானவில்லின் காபி . . வானவில் ஒரு நாள் என் மூலக் கருவை தானே நீ பயன் படுத்துகிறாய் என்று ....

    பல ராகங்கள் இன்று ஜன்ய ராகங்களின் காப்பி.

    மாதவனும், மது சூதனும் வாமனும் ராமனும், கிருஷ்ணனும், கூட
    அந்த கேசவனின் காப்பி . என்ன அந்த பரம்பொருள் கொஞ்சம் அங்கே இங்கே
    டச் அப பண்ணிக்கொண்டு தன்னை புது அவதாரம் போல புது உடைகளை போட்டுகொண்டு ...

    நான் சொல்வது வேடிக்கையாக இருக்கலாம்.

    என்னுடைய வாதம் எல்லாமே அசல் என்று ஒன்றுமே இல்லை.

    நம்மை படைத்தவன் ஒருவனே அசல்.
    நாம் எல்லாமே அவனுடைய காப்பி தான்.

    அதெல்லாம் இருக்கட்டும்.
    ராகவன் கல்யாணராமன் என்று அழகிய பெயர் இருக்க,
    ரேகா ராகவன் என்று ஏன் ?

    நாம் எப்போதுமே நாமாக இருப்பதை விட,
    இன்னொரு பெயரில் பிரகாசத்தை காண்கிறோம்.

    இன்னொரு எழுத்துக்குள் நுழைகிறோம்.
    நமது உடையையும் நடையையும் விட்டுவிட்டு,
    அந்நிய பண்பினையும் அவர்கள் கலாசாரத்தையும் நமது
    கதைகளில் கொண்டு வருகிறோம்.



    இது நமது பண்புக்குச் செய்யும்
    குற்றமில்லையா ?
    கருட புராணம்
    இதற்கு ஏதேனும் ????!!

    ஆர்குமெண்ட் ரொம்ப பூலிஷ் ஆ இருக்கு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் இல்லையா..

    மாத்தி யோசிப்பவன் எல்லாருமே அப்படித்தான்.

    இதெல்லாம் ரொம்ப சீரியஸ் எடுத்துண்டு போனால், பிளட் பிரசர் தான் அதிகரிக்கும்.

    புத்தாண்டில் அந்த கல்யாணராமன்
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    எல்லாம் நல்லவை வழங்க எனது
    பிரார்த்தனைகள்.

    வாழ்க வளமுடன்.
    சுப்பு தாத்தா

    ReplyDelete
  9. அசாத்தியமான அசட்டுத் துணிச்சல் ஆச்சரியமாக இருக்கிறது.
    அவமானப்பட வேண்டிய விஷயம் என்றாலும்.

    ReplyDelete
  10. குமுதத்தையே ஏமாற்றிவிட்டாரே. எப்படியும் வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்

    ReplyDelete
  11. இன்னொரு பிளாக்கர் இருக்காங்க...அடுத்தவங்க கவிதையை பட்டி டிங்கரிங் பண்ணி இவங்களோடது சொல்லுவாங்க...இதெல்லாம் இப்படித்தான் சார்...

    ReplyDelete
  12. என்ன அநியாயம்? படு கேவலமான செயல் இது. குமுதத்திற்கு புகார் செய்யுங்களேன்...

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "