என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 22, 2010

புதிரான ஊர்மிளா


"ஆனாலும் அந்த ஊர்மிளாவுக்கு ரொம்பத்தான் திமிர்! பாரேன்! நாங்க ரெண்டு பேரும் ஒரே தெருவில்தானே இருக்கோம்? நேற்று மாலை ஆசை ஆசையாய் அவ வீட்டுக்குப் போய் கோயிலுக்கு போகலாம்,ஒருத்தருக்கொருத்தர் துணையாச்சேன்னு கூப்பிட்டேன். உடனே மூஞ்சில அடிச்ச மாதிரி நிறைய படிக்கணும் உன்னோட வரமுடியாதுன்னுட்டா!" என்றாள் காயத்ரி.

"கரெக்ட் காயத்ரி! கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாத ஜன்மம் !" என்றாள் ராதா.

"இரண்டு பேரும் சரியா சொன்னீங்க! மஞ்சு கல்யாணம் நடந்ததே, அன்னிக்கும் அப்படித்தான். சாயங்காலம் ரிசப்ஷனுக்கு போகலாம்னு கூப்பிட்டேன். முதலில் சரின்னு சொன்ன அவளை நம்பி ஆறரை மணி வரை வீட்டில் காத்திருந்துவிட்டு ஏமாந்து போனேன். அப்புறமா பஸ்சை பிடிச்சு நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு கல்யாண சத்திரத்துக்குப் போனா எனக்கு பத்தடி முன்னே அந்த கனகாவோட பேசிட்டிருக்கா! நமக்கென்ன அழகில்லையா?அறிவில்லையா? நம்மோட வர கசக்கிற அவளுக்கு அந்த கனகாவோட மட்டும் போக இனிக்கிறதா? என்னிக்காவது அவ நம்மகிட்ட வராமலா போகப் போறா? அப்பா காட்டலாம் நம்ம வேலையை. பஸ் வருது, சீக்கிரம் வாங்க போகலாம்!" என்றாள் மீனா.

"ஏண்டி ஊர்மிளா, அந்த காயத்ரி உன்னை கோயிலுக்கு வரச்சொல்லி கூப்பிட்டாளாமே! நீ வர முடியாதுன்னுட்டியாமே! அவ அம்மா என்னை ரேஷன் கடையில் பார்த்து சொன்னா. ஏன் அப்படிச் சொன்னே? அவளோட போறேன்னா நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்?" என்றாள் அம்மா.

"போம்மா, உனக்கு ஒண்ணும் தெரியாது! அந்த ராதா, மீனா, காயத்ரி எல்லாம் என்னைவிட அழகானவங்க. அவங்களோட நான் வெளியில் போனா என்னோட அழகு எடுபடாது. அதான் என்னைவிட அழகில் குறைந்த கனகாவோட எங்கேயும் போறேன்,வரேன். போற இடத்தில் எல்லாரும் என்னை பார்க்கறாங்க, என் அழகைப் பத்தி பேசறாங்க. அவங்களோட போனா என்னை யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்க. ஹும்! உனக்கு எங்கே இதெல்லாம் புரியப் போறது?" என்றாள் ஊர்மிளா தன் அம்மாவிடம்.

(7.11.90 தினமலர் கதைமலரில் வெளியான என் சிறுகதை)




7 comments:

  1. இந்த டெக்னிக்கை யூஸ் பண்ணித்தான் சினிமால வயசான ஹீரோ கூட சுத்தற ப்ரெண்ட்ஸ் எல்லாம் குண்டா கருப்பா வராங்க..
    அருமை.

    ReplyDelete
  2. கதை படித்து முடிக்கும் போது தோன்றியதை ரிஷபன் சார் கமெண்ட் போட்டு விட்டார்.

    ராகவன் சார் : 20 வருடம் முன்பு வந்த கதை!! உங்கள் உழைப்பு ஆச்சரிய படுத்துகிறது

    ReplyDelete
  3. இப்படியெல்லாம் வேறயா:))

    ReplyDelete
  4. சிறியதாகவும் பவர்புல்லாகவும் இருந்தது...

    ReplyDelete
  5. இந்த டெக்னிக் தான் அன்றிலிருந்து, இன்று வரை சினிமாக்களில் ஹீரோயின்களை காப்பாற்றி வருகிறது..

    இந்த கதை பிரசுரத்திற்கு தேர்வானது சரியே...

    வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "